அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
இதன் மூலம் பகிர்ந்திட
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான் கேட்ட பொழுது, நான் முற்றிலுமாய் தளர்ந்து உடைந்து போனேன். என்னால் சுவாசிக்க முடியாமல் இருப்பதையும் என் சரீரம் அசைவில்லாமல் இருப்பதையும் உணர்ந்தேன். நான் வீட்டுக்கு வந்த போது நேரடியாக என்னுடைய படுக்கை அறைக்கு சென்று வேதாகமத்தை வாசித்தேன் ஆனால் வாசிக்கும் பொழுது அதை என்னுடைய அறையில் ஏறிந்து விட்டு, உரத்த சத்தமாக, எப்படி தேவன் என் பாய் பிரண்டை மரிக்க அனுமதிக்கலாம்? என்று கத்தினேன். அந்த நேரத்திலிருந்து, கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்திருந்தும் தேவனுடைய சகல அற்புதங்களையும் அறிந்திருந்தும் நான் தேவனை விசுவாசிப்பதை நிறுத்தி விட்டேன்.
அந்த வருடம் பள்ளி படிப்பை முடித்ததும், நான் மதுபானம் மற்றும் நிக்கோடைனுக்கு அடிமைப்பட்டேன். நான் தற்கொலைக்கு முயற்சி செய்து எனக்கு நானே ஒவ்வொரு இரவும் அதிகப்படியான தூக்க மாத்திரைகளையும் மற்ற மாத்திரைகளையும் உட்கொள்ள ஆரம்பித்தேன். வாழ்வதற்கு இனி எந்த அர்த்தமும் இல்லை என்று எண்ணினேன். என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு எனக்கு இருந்த உறவை நான் பொருட்படுத்தவில்லை. இறந்து போன என்னுடைய பாய் பிரண்டை குறித்து கர்த்தர் சொப்பனங்களிலும் தரிசனங்களிலும் என்னோடு கூட பேசினார்.
என்னுடைய பாய் பிரண்ட் பரலோகத்தில் இருப்பதை காண்பித்தார். ஓர் இரவு, ஆராதனை பாடல்களை பாடிக் கொண்டிருக்கும் பொழுது நான் தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்தேன். நான் மறுபடியுமாக தேவனை கண்டு கொண்டேன் ஆனாலும் அவளுடன் நான் எனது உறவு என்னும் சீராகவில்லை.
கிறிஸ்மஸ் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் பொழுது ஜோசப் பிரின்ஸ் அவர்களின் No More Mind Games என்ற புத்தகத்தை ஒரு கிறிஸ்தவ புத்தக கடையில் பார்த்தேன். அந்த புத்தகத்தை வாங்கும் படி உணர்த்தப்பட்டேன் ஆனால் அதை நான் வாசிக்கவே இல்லை. அடுத்த வருடம் என்னுடைய பல்கலைக்கழக படிப்புகளை துவங்கினேன் மறுபடியுமாக ஒவ்வொரு இரவும் பார்ட்டி பண்ணிக்கொண்டு மதுபானம் மற்றும் நிக்கோட்டின் பழக்கத்திற்கு உள்ளானேன். தவறான நட்புகளை ஏற்படுத்திக் கொண்டு சபைக்கு போவதை நிறுத்தி விட்டேன். இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று எனக்கு நானே பொய் சொல்லிக் கொண்டேன்.
அப்பொழுது COVID 19 தாக்கத்தால் நாடு முழுவதும் அடைக்கப்பட்டது. என்னுடைய பெற்றோர் என்னிடத்தில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்பதை எனக்கு சொல்ல, ஒவ்வொரு நாள் காலையும் குடும்பமாக வேத பாட நேரத்தை எடுத்துக் கொள்ள நாங்கள் தீர்மானித்தோம். அப்பொழுது நான் No More Mind Games புத்தகத்தை இறுதியாக வாசிக்க ஆரம்பித்தேன், வாவ், அது என் வாழ்க்கையை மாற்றினது!
நான் இயேசுவை காணவும் அறிந்து கொள்ளவும் அவருடைய அற்புதமான வாக்குத்தத்தங்களையும் அவர் எனக்காக வைத்திருக்கிற நல்ல திட்டங்களையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அவருடைய கிருபையை குறித்தும் அவர் என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்த போது எனக்கு அருளின மேலான ஈவை குறித்தும் நான் கற்றுக் கொண்டேன். என்னுடைய பழைய பழக்க வழக்கங்களை விட்டு விட்டு என்னுடைய மன அழுத்தம் வேதனை வலியிலிருந்து நான் சுகம் பெற்றேன்.
ஒவ்வொரு நாளும் நான் தேவனுடனான உறவில் வளர்ந்து கொண்டு வருகின்றேன். மேலும் அவரைக் குறித்து இன்னும் பல புதிய காரியங்களை கற்றுக் கொண்டும், அறிந்து கொண்டும் வருகிறேன். என் ஆவி கொழுந்துவிட்டு எரிகிறது, தேவனைக் குறித்து அதிகமாக கற்றுக் கொள்ளவும் தியானிக்கவும் பசி உள்ளவளாக இருக்கிறேன். இப்போது நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் The Power of Right Believing என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன், அதில் கிறிஸ்தவ முறைப்படி வாழ்வதும் என்னால் சிறந்த நிலையில் ஒவ்வொரு நாளும் வாழ்வதையும் குறித்த சத்தியங்களை அறிந்து கொண்டு வருகிறேன்.
இன்னமும் காலம் சென்ற என்னுடைய பாய்பிரண்ட் குடும்பத்தாருக்காக நான் ஜெபித்து வருகிறேன் அவர்கள் அவர்களுக்கான தேவனுடைய திட்டத்தை கண்டு அவரிலும் அவருடைய நேரத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க ஜெபிக்கிறேன். ஆமென்!
பாஸ்டர் பிரின்ஸ் நீங்களும் உங்கள் ஊழியங்களும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. இயேசுவுக்குள் என்னுடைய சிறப்பான வாழ்க்கையை வாழ என்னை உற்சாகப்படுத்தியதற்காக உங்களுக்கு நன்றி!
மிகக்ல்யா கேசர்
தென்னாபிரிக்கா
இதுபோல இன்னும் பல
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...
சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்
எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...
முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது
சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...
கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்
விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...
திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது
எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை
பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...
வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...
மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்
நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...
அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன
2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்
என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...
தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது
எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...