தனிப்பட்ட அனுபவங்கள்
சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்
எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானும் என்னுடைய கணவரும் சிக்காகோவில் இருக்கிறதான ஸ்தல சபையில் போதகர்களாக இருந்தோம். நாங்கள் வேத பாட வகுப்புகள், கருத்தரங்குகள், போதனைகள், பயிற்சிகள், வெளி ஊழியங்கள் என அநேக விதங்களில் செயல்பட்டு வந்தோம். மக்கள் இரட்சிக்கப்படுவதையும் தண்ணீர் ஞானஸ்தானம் பெறுவதையும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சீஷத்துவ வகுப்புகளில் கலந்து கொள்வதையும் பார்த்திருக்கிறோம். இருப்பினும், குறைவான கனிகள் உண்டாவதை கவனித்தோம்.
முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது
சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், நான் சற்று சோர்வோடும் தனிமையிலும் இருப்பதை உணர்ந்தேன். தன்னுடைய செய்தியின் முடிவில் ஜோசப் சுகத்தை தீர்க்கதரிசனமாக உரைக்க ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு காரியம் என் கவனத்தை ஈர்த்தது. ஒவ்வொரு நாளும் கை நிறைய தனது முடி கொட்டுவதினால் வருத்தத்தோடு கவலைப்படுகிற உங்களை தேவன் சுகமாக்க விரும்புகிறார் என்று சொல்லி, தலை பகுதி சுகமாக அவர் ஜெபித்தார்.
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான் கேட்ட பொழுது, நான் முற்றிலுமாய் தளர்ந்து உடைந்து போனேன். என்னால் சுவாசிக்க முடியாமல் இருப்பதையும் என் சரீரம் அசைவில்லாமல் இருப்பதையும் உணர்ந்தேன். நான் வீட்டுக்கு வந்த போது நேரடியாக என்னுடைய படுக்கை அறைக்கு சென்று வேதாகமத்தை வாசித்தேன் ஆனால் வாசிக்கும் பொழுது அதை என்னுடைய அறையில் ஏறிந்து விட்டு, உரத்த சத்தமாக, எப்படி தேவன் என் பாய் பிரண்டை மரிக்க அனுமதிக்கலாம்? என்று கத்தினேன். அந்த நேரத்திலிருந்து, கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்திருந்தும் தேவனுடைய சகல அற்புதங்களையும் அறிந்திருந்தும் நான் தேவனை விசுவாசிப்பதை நிறுத்தி விட்டேன்.
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில் 24 வாரத்தில் என்னுடைய மூத்த மகள் தனது குழந்தையை பெற்றெடுத்தாள், ஆனால் அந்த குழந்தை மூன்று நாட்களே ஜீவனோடு இருந்தது. அது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் கடினமானதாக காணப்பட்டது.
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பாக, இதை கேட்டுக் கொண்டிருக்கிற ஒருவருக்கு அடுத்த வருடத்திற்குள்ளாக மலட்டுத்தன்மையின் நிலையில் ஒரு விடுதலை உண்டாகும் என்று கூறியிருந்தார். அந்த சமயத்தில் எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகியிருந்தும் எங்களால் கருத்தரிக்க இயலாமல் இருந்தது.
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் பணிபுரிந்து வந்த அந்த நிறுவனமானது வருடத்தின் துவக்கத்தில் அவர்கள் அந்த நிறுவனத்தை மூடப் போவதாக அறிவித்திருந்தார்கள். என்னுடைய பின்புற காயத்தினால் நானும் வேலை இல்லாதவளாக காணப்பட்டேன். எல்லாம் இருண்டதாக காணப்பட, எங்களுடைய தேவைகளை எப்படி சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமல் நான் கவலைப்பட்டேன்.
திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒரு அலர்ஜியை ஏற்படுத்தி நிமோனியா அல்லது அங்குள்ள ரத்த நாளங்களில் நோய் தொற்றை உண்டாக்கும் ஒரு விதமான பாக்டீரியா) அதனால் தாங்க முடியாத வேதனை என் தலையிலும் கரங்களிலும் கால்களிலும் உண்டானது.
அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க முடியவில்லை. நான் திறக்க முயற்சித்த போது கிளக் என்ற சத்தம் கேட்டது. பல் துலக்குவதும் சாப்பிடுவதும் கொட்டாவி விடுவதும் கூட எனக்கு கடினமாக இருந்தது.
அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன
2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தனர். நல்ல வேலை அவை தீங்கற்றவைகளாக இருந்தது. 2012ல், இடது மார்பில் இருந்த கட்டிகள் 8 ஆக அதிகரித்தன. 6 முதல் 12 மாதங்களுக்கு இடையில் மீண்டும் பரிசோதனை செய்யுமாறு கூறப்பட்டது. அதற்குப் பின்னர், எங்கள் முதல் குழந்தையை பெற்றுடுத்தேன், அதனால் அதை தொடர்ந்து வந்த பரிசோதனையை நான் நிராகரித்துவிட்டேன். பரிசோதனைக்குச் செல்லாததற்கு மற்றொரு காரணம் பயம்.
என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்
என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங்கள் தனித்து இருப்பவனாக, நாள் முழுவதும் ஒரே காரியத்தை செய்கிறவனாய் காணப்பட்டான். சில நேரங்களில் அவனிடத்தில் எந்த ஒத்துழைப்பும் இருக்காது.
தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது
எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபலமான திரைப்படங்களில் வருகிறதான நட்சத்திரங்களின் பெயர்கள். சில சமயங்களில் சரியான வார்த்தைகளை பயன்படுத்தி என்னுடைய உணர்வை வெளிப்படுத்துவதும் கடினமாக இருந்தது. அது என்னுடைய ஞாபக மறதி பிரச்சனையின் துவக்கமாக இருப்பதாக நினைத்து பயந்தேன்.