தனிப்பட்ட அனுபவங்கள்
சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்
எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானும் என்னுடைய கணவரும் சிக்காகோவில் இருக்கிறதான ஸ்தல சபையில் போதகர்களாக இருந்தோம். நாங்கள் வேத பாட வகுப்புகள், கருத்தரங்குகள், போதனைகள், பயிற்சிகள், வெளி ஊழியங்கள் என அநேக விதங்களில் செயல்பட்டு வந்தோம். மக்கள் இரட்சிக்கப்படுவதையும் தண்ணீர் ஞானஸ்தானம் பெறுவதையும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சீஷத்துவ வகுப்புகளில் கலந்து கொள்வதையும் பார்த்திருக்கிறோம். இருப்பினும், குறைவான கனிகள் உண்டாவதை கவனித்தோம்.
கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்
விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்களில் அதை அறிந்து கொள்ள முற்பட்டேன், ஆனால் என்னால் கண்டறிய முடியவில்லை.
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பாக 20 வயதான என்னுடைய மகள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள், எங்கள் குடும்பத்தோடு தொடர்பு கொள்ளுவதை நிறுத்திவிட்டாள், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, மரபுகளை விட்டு, செய்ய தகாத பழக்கங்களில் ஈடுபட்டாள். அவள் வியாகுலத்தினாலும் வேதனையின் தாக்குதலினாலும் மிகவும் பாதிக்கப்பட்டாள். அவளை அப்படி பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது, ஏனென்றால் உங்களுக்கு அவளைத் தெரிந்திருந்தால் அவள் எவ்வளவு இனிமையானவள், இப்படிப்பட்ட அழகான மகள் வேண்டும் என்று நினைப்பீர்கள்.
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்லவளாக இருக்க விரும்பினேன். எனக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டைகள் வரும் பலமுறை அதினிமித்தம் விவாகரத்து பெற்றுக் கொள்ளும்படி முயற்சித்து இருக்கிறோம். பயத்தினாலும் கலக்கத்தினாலும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எப்படி வீட்டின் தேவைகளை சந்திப்பேன் என்பதை அறியாமலும் பிள்ளைகளுடைய பல்கலைக்கழக படிப்பில் செலவுகளுக்கு என்ன செய்வேன் என்று புரியாமலும் எதிர்காலமே இரண்டு காணப்பட மிகுந்த போராட்டத்தில் இருந்தேன். அதன் விளைவாக முற்கோபகாரியாகவும் மன அழுத்தம் ஒடுக்குதலின் சிந்தனைகளாலும் நிரம்பினேன்.
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான் கேட்ட பொழுது, நான் முற்றிலுமாய் தளர்ந்து உடைந்து போனேன். என்னால் சுவாசிக்க முடியாமல் இருப்பதையும் என் சரீரம் அசைவில்லாமல் இருப்பதையும் உணர்ந்தேன். நான் வீட்டுக்கு வந்த போது நேரடியாக என்னுடைய படுக்கை அறைக்கு சென்று வேதாகமத்தை வாசித்தேன் ஆனால் வாசிக்கும் பொழுது அதை என்னுடைய அறையில் ஏறிந்து விட்டு, உரத்த சத்தமாக, எப்படி தேவன் என் பாய் பிரண்டை மரிக்க அனுமதிக்கலாம்? என்று கத்தினேன். அந்த நேரத்திலிருந்து, கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்திருந்தும் தேவனுடைய சகல அற்புதங்களையும் அறிந்திருந்தும் நான் தேவனை விசுவாசிப்பதை நிறுத்தி விட்டேன்.
திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது
எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் என்று எங்களுக்கு கற்றுத் தரப்பட்டது. எங்கள் குடும்பம் சமாதானமாக இல்லை ஒவ்வொரு வாரமும் எங்கள் பெற்றோருக்கு இடையே சண்டைகள் நடந்து கொண்டே இருக்கும். அதிகமாக இருவரும் வன்முறையில் ஈடுபடக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட ஆரம்பிக்கும். சிறு பிள்ளையாக, எனக்கு அது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தினது.
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை
பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக இருந்தது. நான் ஆக்ரோஷமான புயலின் அலைகளில் அலசரிப்படுவது போல உணர்ந்தேன். கோவிட் 19 பேரிடர் காலத்தின் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட மக்களுடைய அன்பில் இருந்து பிரிக்கப்பட்டேன். ஒன்றன்பின் ஒன்றாக எதிர்மறையான சூழ்நிலைகளால் நான் தாக்கப்பட்டேன். அது நிமித்தம் என் இருதயம் முற்றிலும் தோய்ந்து போனது.
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்கையில் - தேவனை நோக்கி கதறினேன்.