கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
இதன் மூலம் பகிர்ந்திட
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிரயாணங்கள் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் பல வாரங்களாக, சில நேரங்களில் பல மாதங்களும் பார்க்காமல் இருந்திருக்கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய நிறுவனத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது, அதினிமித்தமாக அதிலிருந்து வந்த ஊதியமானது எங்கள் உணவிற்கும் இருப்பிட செலவுகளுக்கும் போதுமானதாக இல்லை.
எங்களுடைய மாநிலத்தின் அந்தப் பகுதியில் விற்பனையாளர் பணி மிகவும் அபூர்வமானதாக இருந்தது. பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பம் பண்ணியும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பது என்பது சாத்தியமில்லை என்று என்னுடைய கணவர் நினைத்தார். பல மாதங்களாக எந்தவித வருமானமுமின்றி ஒவ்வொரு மாதத்திற்கும் சமூக பாதுகாவலர் திட்டத்தை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும் அவை எங்களுடைய தேவைகளை சந்திக்க போதுமானதாக இல்லை. எங்களுடைய சேமிப்புகளும் செலவழிந்து விட்டது, அதனால் நாங்கள் எங்கள் சொத்துக்களை விற்கவும் சபையிலிருந்து உதவியை பெற்றுக் கொள்ளவும் நேரிட்டது.
நாங்கள் ஜோசப் பிரின்ஸ் ஊழியங்களுக்கு தவறாமல் எங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தோம், நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்டர் பிரன்ஸ் அவர்களின் செய்திகளை கேட்டுக்கொண்டு வருகிறேன். எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நான் விசுவாசித்தேன். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் என்னுடைய கணவனாருக்கு ஒரு வேலை கிடைக்கும் வரைக்கும் அனுதினமும் பரிசுத்த திருவிருந்தை அனுசரிப்போம் என்று நாங்கள் தீர்மானித்தோம். அதை உண்மையாய் செய்து வந்தோம். எங்களுடைய சௌக்கியத்திற்காக கர்த்தராகிய இயேசு சிலுவையிலே தியாக பலியானதை நினைவு கூர்ந்து அனுசரித்தோம்.
நாங்கள் ஒரு சிறிய கப்பல்கிடங்கிற்கு அருகில் வசித்து வந்ததால் அங்கே இருந்த படகோட்டிகளில் பலருடன் நட்புறவு கொண்டிருந்தோம். ஆறு வாரங்களாக அனுதினமும் திருவிருந்தில் பங்குபெற்ற பிறகு எங்களுடைய படகோட்டி நண்பர், அவிசுவாசியான ஒருவர் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள குறுஞ்செய்தியை அனுப்பினார். அவரை நாங்கள் குளிர்காலத்தில் பார்க்கவில்லை.
அவரிடம் நான் கடந்த சில மாதங்களாக என் கணவருக்கு வேலை இல்லாததால் சற்று கடினத்தில் இருக்கிறோம் என்று சொன்னேன். அதனால் என்னுடைய நண்பர் என் கணவனை அருகில் இருந்த கப்பல்கிடங்கிற்கு போகும்படியாகவும் அதன் உரிமையாளர் இப்போது வேலைக்கு ஆட்களை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மறுநாள் எனது கணவர் அந்த கப்பல் கிடங்கிற்கு அதன் உரிமையாளரை சென்று பார்க்க, அப்பொழுதே அவர் வேலையில் அமர்த்தப்பட்டார். அந்த உரிமையாளர் ஏன் அவர் ஒருவரை வேலைக்கு அமர்த்தாமல் இரண்டு மாதங்கள் தள்ளிப் போட்டார் என்று அவருக்கே தெரியவில்லை என்று சொன்னார்.
எங்களுடைய எல்லா பில்களும் செலுத்தப்பட்டது. மேலும் கப்பல் கிடங்கு உரிமையாளர் மிகவும் சந்தோஷமாக இருந்தார், ஏனென்றால் அநேகம் படகுகள் விற்கப்பட்டது – போதுமான அளவு இருப்பு சரக்கை வைப்பதற்கு அவரால் கூடாமல் போனது. இப்போது என் கணவர் பக்கத்து வீட்டிற்கு செல்வது போல வேலைக்கு செல்லுகிறார், அது மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் நாங்கள் எங்களுடைய வாகனத்தையும் விற்று விட்டோம். ஏனென்றால் இனி வாகன காப்பீடு கட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. தேவன் அற்புதமானவர் அல்லவா? அவருடைய வழிகள் நாம் விவரிக்க கூடாததாய் இருக்கிறது.
நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னுடைய படகோட்டியான நண்பரிடம் எப்படி தேவன் அவரை என்னுடைய கணவருக்கு இந்த வேலை கிடைக்கும்படி பயன்படுத்தினார் என்பதை எடுத்துச் சொன்னேன். இப்போது நானும் எனது கணவரும் ஒன்றாக இணைந்து அதிக நேரத்தை செலவிடுகிறோம்.
சகல மகிமையும் தேவனுக்கே உண்டாயிருப்பதாக!
ஜியேன்
மேக்கிகன், யுனைட்டட் ஸ்டேட்ஸ்
இதுபோல இன்னும் பல
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...
திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது
எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை
பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்
நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...
தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்
என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...