தனிப்பட்ட அனுபவங்கள்
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தினாலே புறக்கணிக்கப்பட்டிருந்தேன் ஏனென்றால் என்னிடம் இருந்த பணம், வசதி வாய்ப்பு அனைத்தும் மறைந்து விட்டன. என் மகனும் நானும் சிறிய கிராமத்தில் ஒரு குடும்பத்தோடு வசிக்கும்படியான சூழ்நிலை உண்டானது, அந்த குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அருகில் இருந்து பட்டணத்தில் வேலை செய்து கொண்டிருந்தார், அவருடைய மாத வருமானமான வெறும் 70 டாலர் வைத்து ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அப்போது இருந்த வாழ்க்கை நிலை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாக இருந்தது.
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்லவளாக இருக்க விரும்பினேன். எனக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டைகள் வரும் பலமுறை அதினிமித்தம் விவாகரத்து பெற்றுக் கொள்ளும்படி முயற்சித்து இருக்கிறோம். பயத்தினாலும் கலக்கத்தினாலும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எப்படி வீட்டின் தேவைகளை சந்திப்பேன் என்பதை அறியாமலும் பிள்ளைகளுடைய பல்கலைக்கழக படிப்பில் செலவுகளுக்கு என்ன செய்வேன் என்று புரியாமலும் எதிர்காலமே இரண்டு காணப்பட மிகுந்த போராட்டத்தில் இருந்தேன். அதன் விளைவாக முற்கோபகாரியாகவும் மன அழுத்தம் ஒடுக்குதலின் சிந்தனைகளாலும் நிரம்பினேன்.
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான் கேட்ட பொழுது, நான் முற்றிலுமாய் தளர்ந்து உடைந்து போனேன். என்னால் சுவாசிக்க முடியாமல் இருப்பதையும் என் சரீரம் அசைவில்லாமல் இருப்பதையும் உணர்ந்தேன். நான் வீட்டுக்கு வந்த போது நேரடியாக என்னுடைய படுக்கை அறைக்கு சென்று வேதாகமத்தை வாசித்தேன் ஆனால் வாசிக்கும் பொழுது அதை என்னுடைய அறையில் ஏறிந்து விட்டு, உரத்த சத்தமாக, எப்படி தேவன் என் பாய் பிரண்டை மரிக்க அனுமதிக்கலாம்? என்று கத்தினேன். அந்த நேரத்திலிருந்து, கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்திருந்தும் தேவனுடைய சகல அற்புதங்களையும் அறிந்திருந்தும் நான் தேவனை விசுவாசிப்பதை நிறுத்தி விட்டேன்.
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில் 24 வாரத்தில் என்னுடைய மூத்த மகள் தனது குழந்தையை பெற்றெடுத்தாள், ஆனால் அந்த குழந்தை மூன்று நாட்களே ஜீவனோடு இருந்தது. அது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் கடினமானதாக காணப்பட்டது.
திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது
எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் என்று எங்களுக்கு கற்றுத் தரப்பட்டது. எங்கள் குடும்பம் சமாதானமாக இல்லை ஒவ்வொரு வாரமும் எங்கள் பெற்றோருக்கு இடையே சண்டைகள் நடந்து கொண்டே இருக்கும். அதிகமாக இருவரும் வன்முறையில் ஈடுபடக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட ஆரம்பிக்கும். சிறு பிள்ளையாக, எனக்கு அது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தினது.
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, பள்ளிக்கு மற்றும் குடும்பத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தினேன். கும்பல்களில் ஈடுபட்டு, என்னையும் என்னை நேசித்தவர்களையும் காயப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருந்தேன்.