இயேசுவை அறிந்து கொள்ளுங்கள்

தேவனுடைய சொந்த குமாரனாகிய இயேசு எதற்காக தம்முடைய ஜீவனை உங்களுக்காகவும் எனக்காகவும் கொடுத்தார்?

சிலுவையின் நற்செய்தியை குறித்தும் அன்பின் இரட்சகர் நம் எல்லோருக்காகவும் என்ன செய்தார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

வேறொருவரும் நேசிக்காத ஒரு நேசம்

மனுஷனுடைய பாவத்தினாலே திரும்பவும் அவன் தேவனிடமாக நெருங்கி வருவதற்கு வழி இல்லாமல் போனது.

நம்முடைய பாவங்களின் விளைவு நிரந்தரமாக நம்மையும் தேவனையும் பிரிப்பது மட்டுமல்லாமல் அவமானத்தையும் வியாதியையும் கடைசியாக நித்திய மரணத்தையும் உண்டாக்கினது.

ஆனால் அன்பின் நிமித்தமாக சகலமும் மாற்றப்பட்டது.

அவருடைய ஆழமான அகலமான அளவிட முடியாத

அன்பின் நிமித்தம் தேவன்  ஒரு வழியைஆயத்தப்படுத்தினார். அவர் தன்னுடைய சொந்த குமாரனாகிய இயேசுவை கொடுத்து, சிலுவையின் மூலம் அவர் நமது ஸ்தானத்தை மரணத்தில் எடுத்துக் கொண்டார் அவரோடு என்றென்றைக்குமாக ஆரோக்கியத்தோடு விடுதலையோடு அவருக்குள்  நித்திய வாழ்க்கையை நாம் அனுபவிக்கலாம்!

சிலுவையில் என்ன நடந்தது! 

சிலுவையிலே அழகான பரிமாற்றம் நடந்தது. இயேசு நம்முடைய பாவத்தினாலே நாம் அனுபவிக்க வேண்டிய வியாதியையும் நியாயத்தீர்ப்பையும் உங்களுக்கும் எனக்கும் கிடைக்க வேண்டிய மரணத்தையும் எடுத்துக் கொண்டார்.

அப்படி செய்வதினால், நமக்குத் தகுதி இல்லாத அனைத்து நன்மையான ஈவுகளை நாம் பெறுவதற்கு, அவர் அனுமதித்தார்.

ஆரோக்கியத்திலிருந்து, பெலன், சந்தோஷம், மற்றும் சமாதானம், நமது குடும்பங்களிலும் வேலைிலும் ஜெயம் பெற.

அதுவே நம் இரட்சகருடைய அன்பும், ஏன் சிலுவை மெய்யாகவே உங்களுக்கும் எனக்கும்நற்செய்தி என்பதாகும்.

இயேசு உங்களுக்காக செய்த அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்

நண்பரே, இன்று தேவனிடத்தில் கிட்டி  சேர்ந்தது, அவரது அன்பையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க நமக்கு தேவையான அனைத்தையும் இயேசு ஏற்கனவே செய்து முடித்து விட்டார்.

ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள  ஒரு தனிப்பட்ட முடிவை நீங்கள் எடுக்கும்போது மட்டுமே, அவரது முடிக்கப்பட்ட கிரியை  உங்கள் வாழ்க்கையில் நிஜமாக ஆகும்.

நீங்கள் இயேசுவையும், அவர் உங்களுக்காகச் செய்த அனைத்தையும் ஏற்க விரும்பினால், இந்த ஜெபத்தை சொல்லி உங்கள் இதயத்தில் விசுவாசியுங்கள் :

இயேசு, என்னை நேசித்து,

சிலுவையில் எனக்காக மரித்ததற்கு  நன்றி. உம்முடைய இரத்தம் எல்லா பாவங்களில்ருந்தும் என்னைக் கழுவி சுத்திகரிக்கிறது. நீரே என் இரட்சகர் . உம்முடைய முடிக்கப்பட்ட கிரியையின் காரணமாக, என்னால் உமது சுதந்திரத்தில், ஆனந்தத்தில் மற்றும் ஆரோக்கியத்தில் என்றென்றம் வாழ முடியும். ஆமேன்!

இயேசு சிலுவையில் உங்களுக்காகச் செய்ததை மேலும் அறிந்துகொள்ள,  பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த காணொளி  உங்களுக்கு  உதவட்டும்!

நீங்கள் ஆம் என்றதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்!

நீங்கள் இரட்சிப்பின் ஜெபத்தை சொல்லியிருந்தால்,  நீங்கள் இப்போது தேவனுடைய பிள்ளை மற்றும் பாராலோகம் உங்களது  வீடு!

இயேசு உடனான உங்கள் அற்புதமான புதிய வாழ்க்கையை நீங்கள் ஆரம்பிக்க உங்களுக்கு உதவிட நாங்கள் விரும்புகின்றோம்.

சப்ஸ்கிரைப்