தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
இதன் மூலம் பகிர்ந்திட
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, பள்ளிக்கு மற்றும் குடும்பத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தினேன். கும்பல்களில் ஈடுபட்டு, என்னையும் என்னை நேசித்தவர்களையும் காயப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருந்தேன்.
நான் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் வளர்ந்தாலும், தகப்பனாகிய தேவனின் அன்பை பற்றி அதிகம் அறியவில்லை. தேவனை நான் எப்போதும் தவறு செய்தால் திட்டத் தயாராக இருக்கும் கோபமான ஒரு முதியவராகவே நினைத்தேன், நான் பாவம் செய்யும் ஒவ்வொருமுறையும் நரகத்திற்கு செல்வேன் என்று நினைத்தேன். யாரும் என்னை நேசிக்கவில்லை என்றும் எப்போதும் சோகத்திலும் தனிமையிலும் இருப்பதாக உணர்ந்தேன்.
ஒரு நாள், மறுபடியுமாக பிரச்சனையில் சிக்கி, 12 மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது கூட நான் மிகவும் பிடிவாதமாக இருந்து என் நண்பனை காப்பாற்ற பொய்யான வாக்குமூலங்கள் அளித்து அதிகாரிகளிடம் பொய் சொன்னேன். எட்டாவது மணி நேரத்தில், உதவி வேண்டி ஜெபிக்கும்படியான ஒரு உந்துதல் உண்டானது. குளிரான தரையில் நடுங்கிக் கொண்டிருந்தபோது, வெளியேறியதும் சபைக்கு போவேன் என்று முடிவு செய்தேன். ஒரு நண்பன் என்னை நியூ கிரியேஷன் சபைக்கு அழைத்து வந்தான்!
கிருபையினாலே, இயேசு என்னுடைய ஸ்தானத்தை எடுத்து சிலுவையில் என் பாவங்களுக்காக என்னுடைய மரணத்தை ஏற்றுக்கொண்டு மரித்ததினால் நான் தேவனுடைய முன்னிலையில் உள்ள என் நிலையை ஒருபோதும் இழக்கமாட்டேன் என்பதை கற்றுக்கொண்டேன்! இயேசுவுக்கே ஸ்தோத்திரம்! நான் வார்த்தையை உட்கொள்ள ஆரம்பித்தேன் மேலும் பாஸ்டர் பிரின்ஸின் பிரசங்கங்களை என்னுடைய தொலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டேன்.
‘N’ லெவல் மற்றும் அதன்பின் ‘O’ லெவல் தேர்வுகளுக்காக ஆண்டவரை நம்ப கற்றுக்கொண்டேன். என் அனைத்து தேர்வு பதிப்பேடுகளையும் அபிஷேகம் செய்தேன், மேலும் ஒரு கிறிஸ்துவ நண்பரை அழைத்துச் சென்று, ஜெபித்து, தேர்வுக்கு முன் திருவிருந்தை எடுத்தோம். இரண்டு அல்லது மூன்று பேர் இயேசுவின் நாமத்தில் கூடும்போது, அவர் அவர்கள் நடுவில் இருப்பார் என்பதை நாங்கள் உறுதி செய்துகொண்டோம்! (மத்தேயு 18:20)
அதிசயமாக, என்னுடைய “N ‘’ லெவல் முடிவுகள் என்னை பள்ளியின் முதல் மூன்று மாணவர்களில் ஒருவனாக செய்தது! ‘O’ லெவலிலும் 10 பாயிண்ட் பெற்றேன், மேலும் பல ஜூனியர் கல்லூரிகளில் சேர தகுதியானவனாக இருந்தேன்!
இயேசு யார் என்பதை உண்மையாக வெளிப்படுத்திய பாஸ்டர் பிரின்ஸின் பிரசங்கத்திற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்திற்காகவும் நான் இயேசுவுக்கே மகிமை செலுத்த விரும்புகிறேன்; அவர் இல்லையென்றால் இன்று நான் “சமூகக் சீர்கேடானவனாக” இருந்திருப்பேன். ஆனால் இயேசு என்னை தோல்வியாளன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக மாற்றினார்! ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்!
எர்வின்
சிங்கப்பூர்
இதுபோல இன்னும் பல
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...
சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்
எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...
கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்
விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...
திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது
எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை
பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...
வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்
நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...
தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்
என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...
என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்
என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...