மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

2 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக இருந்தது. நான் ஆக்ரோஷமான புயலின் அலைகளில் அலசரிப்படுவது போல உணர்ந்தேன். கோவிட் 19 பேரிடர் காலத்தின் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட மக்களுடைய அன்பில் இருந்து பிரிக்கப்பட்டேன். ஒன்றன்பின் ஒன்றாக எதிர்மறையான சூழ்நிலைகளால் நான் தாக்கப்பட்டேன். அது நிமித்தம் என் இருதயம் முற்றிலும் தோய்ந்து போனது.

நான் மன அழுத்தத்தில் மூழ்கி இருந்தேன். மாபெரும் வேதனை என்னை பின்தொடர்ந்தது. அது மரணிக்கும்படி தேவனை நோக்கி வேண்டுதல் செய்யும் அளவிற்கு தள்ளினது. நான்கு மாதங்கள் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டே இருந்தேன். சில நேரங்களில் பலமுறை அப்படி சம்பவித்தது. என் படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்குவதற்கும் சாப்பிடுவதற்கும் குளிப்பதற்கும் கடினமாக இருந்ததை கவனித்தேன். எப்படியோ நான் எழுந்து அன்றாட வேலைகளை செய்ய முற்பட்டேன். இருப்பினும் அதில் எனக்கு எந்த அர்த்தமும் காணப்படவில்லை. அந்த வேதனை என்னை விட்டு முடிவு பெறும்படியாக விரும்பினேன். என் மனநிலை மிகவும் மோசமடைய நான் மரித்துக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.

எப்போது எல்லாம் சரியாக மாறினது என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் Give me this mountain என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். முதலில் நான் யார் என்று தேவன் சொல்லுவதையும் அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் தனிப்பட்ட ரீதியில் எனக்கு உரியவைகள் என்பதையும் பார்த்தபொழுது அதை நம்புவது கடினமாக இருந்தது. அதை தொடர்ந்து பற்றி கொண்டு நான் அந்த புத்தகத்தை வாசித்த பொழுது என் மனம் மாற ஆரம்பித்தது.

நான் என் மீதும் என்னுடைய சூழ்நிலைகளின் மீதும் தேவனுடைய தகப்பனின் இருதயத்தின் அன்பையும் மனதுருக்கத்தையும் அதிகம் அதிகமாய் பார்க்க ஆரம்பித்தேன். என்னை முழுமையாக அவர் நேசிப்பதை நான் உணர்ந்தேன். இந்த உறவுகள் திரும்ப மீட்டுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு போய்விட்டது என்று நான் நினைத்த உறவுகளை தேவன் மீட்டுக் கொடுத்தார். தேவன் என்னை ஆசீர்வதித்து, வேலை ஸ்தலத்தில் தகுதியற்ற எனக்கு தயவு கிடைக்கும்படி செய்தார். அவர் நம்பத்தக்கவர் என்பதையும் அவரால் செய்யக்கூடாத காரியம் ஒன்றும் இல்லை என்பதையும் அவர் எனக்கு காண்பித்தார்.

திடீரென்று நான் வேதாகமத்தில் வாசித்த ஒவ்வொரு வாக்குதத்துவங்களை சுதந்தரிப்பதையும் என்னுடைய சூழ்நிலைகளின் மீது அவற்றை அறிக்கை செய்வதையும் அவர் என்னுடைய சமாதானத்திற்கும் என்னுடைய உணர்ச்சிகள் மற்றும் இருதயத்தின் சுகத்திற்காகவும் அவர் சிலுவையில் மரித்து விலைகிரயம் செலுத்தினார் என்பதை விசுவாசிப்பதை கண்டேன். இயேசுவை எவ்வளவு அதிகமாக கண்டேனோ அவ்வளவாக எனக்குள் காணப்பட்டதான தவறான நம்பிக்கைகள் என்னை விட்டு அகன்று போவதை பார்த்தேன்.

அதன் பின்பு நான் மனசோர்வு அடையவில்லை என்பது மட்டுமல்லாமல் சந்தோஷத்தினால் நிரம்பி இருந்தேன் என்பதையும் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! நான் முழுமையாக மன்னிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதையும் நான் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன் என்பது என்னுடைய கிரியைகளினாலோ கீழ்ப்படுதலனாலோ அல்ல என்பதையும் கேட்கும்பொழுது எனக்குள் இருந்த பாரமும் மன அழுத்தமும் எளிதாக அகலுவதாய் இருக்கிறது. இப்போது இயேசுவை குறித்து அதிகமாக கேள்விப்படுவதற்கு நான் பசி தாகத்தோடு காணப்படுகிறேன். Texas Grace Revolution சபையில் அங்கமாக இருப்பதினால் நான் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். தேவனுக்கே துதி உண்டாவதாக. உமக்கு நன்றி இயேசுவே.

மேடிசன் டான்ஸ்  |  டெக்சாஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்