நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

2 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன். முதலில் எனக்கு வித்தியாசமாக இருந்தது, ஆனால் அவை என்னுடைய ஆவியோடு கலந்து விட்டது. அதை இன்னும் அதிகமாக கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

கிறிஸ்துவுக்குள் நமது சுதந்திரங்களை சுதந்தரித்தல் மற்றும் முதலாவது நம்முடைய குடும்பத்தை நாம் சுதந்தரிப்பதை குறித்த உங்களது பிரசங்கம் என்னுடைய ஆத்துமாவின் ஆழத்திற்கு சென்றது. இது என்னுடைய மனைவியும் நானும் என்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு திரும்ப எங்களுடைய இடத்திற்கு செல்லும்படியாக தீர்மானிக்க செய்தது. இது நிமித்தம் நாங்கள் ஒன்றாக குடும்பமாக இணைந்து ஒரே இடத்தில் வசிக்க ஏதுவாக இருந்தது.

என்னுடைய வேலையை ராஜினாமா செய்வது மிகவும் கடினமானதாய் இருந்தது ஏனென்றால் என் வேலையை நான் அதிகமாக நேசித்தேன். ஆனால் இதினிமித்தம் எனக்குள்ளாக ஒரு சமாதானம் காணப்பட்டது. நான் சரியான தீர்மானத்தை எடுக்கிறேன் என்பதையும் சகலமும் நேர்த்தியாக நடக்கும் என்பதையும் குறித்த ஒரு நிச்சயத்தை எனக்கு அளித்தது.

என்னுடைய ராஜினாமாவிற்கு பிறகு நான் பலதரப்பட்ட நேர்காணல்களில் பலதரப்பட்ட நிர்வாகிகளை சந்தித்தேன். இருப்பினும் அவர்கள் எனக்கு கொடுத்த சலுகைகள் மிகவும் குறைந்தபட்சமாகவும் அவர்கள் எனக்கு நிர்ணயத்த வேலை நேரங்கள் என் குடும்பத்தோடு போதிய நேரத்தை செலவிட முடியாதபடியும் காணப்பட்டது. அது எனக்கு மன உளைச்சலை தந்தது. ஆனால் உங்கள் வலைத்தளத்தில் துதியின் அறிக்கைகளை வாசிக்கும்போது, கிறிஸ்துவுக்குள்ளான என் நீதியை அறிக்கை செய்யும்பொழுதும் இயேசு என்னுடைய ஞானமும் என் தேவைகளை சந்திக்கிறவருமாய் இருக்கிறார் என்பதை பிரகடனம் பண்ணுவதும், எனக்கு சரியான கண்ணோட்டத்தின் மனப்பான்மையை அளித்தது. அவை எனக்குள் இருந்ததான மன உளைச்சலையும் பாதுகாப்பற்ற உணர்வையும் நீக்கிவிட்டது.

என்னுடைய ராஜினாமாவிற்கு பிறகு ஐந்து மாதங்கள் கழித்து உங்களுடைய ஊழியத்திற்கு, கர்த்தர் எனக்கு அவர் நியமித்த நல்ல உத்தியோகத்தை தரும்படியாக ஜெபிக்கும்படியான ஜெப விண்ணப்பத்தை எழுதி இருந்தேன். எனக்கான நேர்த்தியான வேலையை குறித்ததான பரிசோதனை பட்டியல் என் மனதில் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு வேலையை நான் பெற்றுக் கொள்வேன் என்பதை விசுவாசித்தேன். அது செய்து முடிக்கப்படும் என்பதற்காக நான் இயேசுவுக்கு நன்றி செலுத்தினேன் ஏனென்றால் அவரது நிபந்தனையற்ற அன்பை நான் அறிந்திருந்தேன்.

அதைத்தொடர்ந்து வந்த மாதத்தில் ஒரு மல்டிநேஷனல் நிறுவனத்தில் இருந்து எனக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் விண்ணப்பம் போட்டிருந்தேன். நான் நேர்காணலுக்கு சென்றபோது இந்த வேலை எனக்கு தேவனால் கொடுக்கப்பட்டது என்பதை உடனடியாக அறிந்து கொண்டேன்.

இன்றைக்கு ஏற்ற நேரங்களில் என்னால் வேலை செய்ய முடிகிறது அதற்கேற்ற நல்ல ஊதியமும் எனக்கு கிடைக்கிறது. எனக்கு அநேகம் விடுமுறை நாட்களும் அளிக்கப்பட்டிருக்கிறது. அது மாத்திரமல்ல தேவன் என்னுடைய விண்ணப்பத்தை கேட்டு சாதாரண நிலையில் நேர்த்தியாய் வேலை செய்ய பெலன் தந்திருக்கிறார். என்னுடைய பட்டியலில் இருந்த சகலத்தையும் எனக்கு அளித்திருக்கிறார். மெய்யாகவே எனக்கு முக்கியமாக தோன்றுகிறவகைகள் அவருக்கும் முக்கியமானவைகளாக காணப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை குறித்ததான உங்களுடைய செய்திகளும் வார்த்தையை நேர்த்தியாக பிரித்து காண்பிப்பதும் நான் நேசிக்கப்படுகிறேன் என்ற உணர்வை எனக்கு தந்தது. வேதாகமம் பயத்திற்கு பதிலாக தேவனுடைய அன்பின் ஊற்றாய் மாறினது. நான் இனி ஒருபோதும் மன பாரத்தோடு கவலையோடு அல்லது பயத்தோடு இருக்க அவசியம் இல்லை. என் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் நான் செழிப்படைக்கிறேன். சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவதற்காக ஆண்டவராகிய இயேசுவுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

டான் டாக்
பிலிப்பைன்ஸ்

இதுபோல இன்னும் பல

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்

எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...

2 நிமிட வாசிப்பு
View details

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது

நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....

2 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details

தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்

என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது

2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்