New Creation TV பற்றி
New Creation TV பற்றி
இயேசுவின் நற்செய்தியினால் உலகத்தை ஒளிரச் செய்தல், ஒரு சமயத்தில் ஒரு மொழியில்.
உங்களை பெயர் சொல்லி அறிந்திருக்கும் அன்பு. இரவு முழுவதும் நிலைப்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கை. விரிந்த கரங்களோடு உங்களை தழுவிக்கொள்ளும் மன்னிப்பு.
உலகெங்கும் இருக்கின்ற அநேகர் இன்னும் நம்மை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்த அந்த நற்செய்தியை பற்றி- இயேசுவின் அன்பையும் அவர் சிலுவையில் செய்த கிரியையையும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.
அதற்காகவே இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறோம்: உலகமெங்கும் உள்ளவர்களுக்கு பலதரப்பட்ட மொழிகளில் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும், அதினிமித்தம் இன்னும் அநேகர் தங்களுக்கான அவருடைய மேலான அன்பை அனுபவிக்க கூடும்!
இயேசு, இருளில் இருந்து ஜீவன்களை எழுப்புகிறவர்
‘வியாதிகளிலிருந்து இயற்க்கைக்கு அப்பாற்பட்ட சுகம், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, உறவுகள் புதுப்பிக்கப்படுதல். உலகமெங்கும் உள்ள மக்கள் எப்படி இயேசுவை சந்தித்தது தங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று சொல்வதைக் தொடர்ந்து கேட்டுகொண்டிருக்கிறோம்.
தேசமெங்கிலும், நமது டிஜிட்டல் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக விரிவடைந்து வருகிறன்ற இதன் தாக்கத்தை பார்க்கும்போது இந்த பயணத்தை தொடர்வதற்கு நமக்கு இன்னும் அதிக காரணத்தைக் கொடுக்கிறது.
இன்னும் செல்ல வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்!!
நியூ கிரியேஷன் டிவி உலகமெங்கும் எங்கு சென்றுகொண்டிருக்கிறது
உலகமெங்கிலும் இருக்கிறதான மக்களுக்கு பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் ஊழியங்கள் மூலமாக இயேசு என்ற நபரை சந்திக்கும்படியாக செய்ய நியூ கிரியேஷன் திருச்சபையின் உலகளாவிய அருட்பணி ஊழியம் அமைந்திருக்கிறது.
எங்கள் இருப்பு
மொழிகளில் சுவிசேஷம் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது
க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மாகாணங்களிலும் நியூ கிரியேஷன் டிவி ஒளிபரப்பாகி ஸ்டிரீம்ட் இன் செய்யப்படுகிறது
நீங்கள் இயேசுவையும் அவருடைய மேலான கிருபையையும் சந்திக்கும்போது, இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிப்பதாக!
பாஸ்டர் ஜோசப் & வெண்டி பிரின்ஸ் பற்றி
கிருபையின் புரட்சியின் முன்னணி குரல்
சுமார் 2௦ ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேர ஊழியத்தில் ஈடுபாட்டிற்கும் பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் இன்றைக்கு தமது புத்தகங்கள், போதனை உபகரணங்கள் மற்றும் தொலைகாட்சி ஊழியத்தின் மூலம் உலகமெங்கிலும் கிருபையின் சுவிசேஷத்தை பிரகடணிக்கும் முன்னணி குரலாக இருக்கிறார்.
‘தி பவர் ஆப் ரைட் பிலீவிங்’, ‘டெஸ்டைன்ட் டு ரெய்ன், ‘அண்ட் மெரிடெட் ஃபேவர்’ போன்ற சிறந்த விற்பனையில் உள்ள புத்தகங்களின் எழுத்தாளராக இருக்கின்ற பாஸ்டர் பிரின்ஸ் மிகுந்த வரவேற்பு பெற்ற கருத்தரங்கு பிரசங்கியாராகவும் இருக்கிறார். தைரியமாக கலப்படமற்ற இயேசுவின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதன் மூலம் உலமேங்குமுள்ள திருச்சபை தலைவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இயேசுவை வெளிப்படுத்தும் விதமாக புத்தம்புதிய, நடைமுறை ரீதியில் தேவனுடைய வார்த்தையில் உள்ள வெளிப்பாடுகளை போதிப்பவராக அறியப்படுகிறார். எல்லோரையும் ஈர்க்கும் விதமான அவருடைய நகைச்சுவை கலந்த வல்லமை மிக்க பிரசங்கிக்கும் முறை அனுதினமும் அவருடைய நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பும் ஏராளமான நேயர்களை பெருமளவில் கொண்டிருக்க செய்திருக்கிறது. அவருடைய நிகழ்ச்சிகள் வட அமேரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் போன்ற பல பகுதிகளில் கிறஸ்தவ வலைத்தளங்கள் மற்றும் பிற தளங்களிலும் லட்சக்கணக்கான வீடுகளை சென்றடையும்படி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தேவன் என்னிடத்தில் சொன்னார்,
“என் மகனை திரும்பவும் சபைக்குள் கொண்டுவா.”
– பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ்
பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் தலைமைதத்துவத்திற்கு கீழ், நியூ கிரியேஷன் திருச்சபை நூறு மடங்குக்கும் மேலாக வளர்ந்துள்ளது. அவர் தற்போது தன்னார்வ அடிப்படையில் திருச்சபையோடு ஊழியம் செய்து வருகிறார்.
இயேசு கிறிஸ்துவின் உறுதியான அஸ்திபாரத்தின்மேல் நியூ கிரியேஷன் திருச்சபையின் தலைமைத்துவத்தையும் சபையினரையும் உருவாக்கி, நிலைப்படுத்தின பாஸ்டர் பிரின்ஸ், தற்போது உலகம் முழுவதும் அபாத்திரமானவருக்கு உண்டான தேவ கிருபையை குறித்து எந்த சமரசமின்றி அறிவித்து, தேவன் அவருக்குக் கொடுத்த பணியைச்செய்து வருகிறார்.அவர் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மற்றும் புதிய ஊடக தொழில்நுட்பங்களின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் மக்களை கட்டியெழுப்பி,ஊக்குவித்து,அவர்களுக்கு ஆற்றல் அளிக்கும் விதமாக ஜோசப் பிரின்ஸ் மினிஸ்ட்ரீஸ், இங்க்.என்ற சர்வதேச, இலாப நோக்கமற்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். போதகராக,ஆசிரியராக, மாநாட்டு பேச்சாளராக மற்றும் எழுத்தாளராக பாஸ்டர் பிரின்ஸின் ஊழியம் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்து,இயேசுவையும்அவர் கல்வாரியில் நிறைவேற்றிய கிரியையையும் அவர்களுக்கு காண்பித்து, அவர்களை கனமான நியாயப்பிரமாண நுகங்களில் இருந்தும் , குற்ற உணர்வு, மற்றும் தண்டனையிலிருந்தும் விடுவிக்கிறது.
பாஸ்டர் பிரின்ஸ் ஜனங்களில் உள்ள சிறந்ததை நம்புகிறார்; அவர்கள் பரிபூரண கிருபையினாலும் நீதியின் ஈவினாலும்வாழ்க்கையில் ஆளுகை செய்யகூடியவர்களாக இருப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள உதவுவதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். இந்த தலைமுறை விசுவாசிகள் கிருபையின் புதிய உடன்படிக்கையை புரிந்து கொண்டு, தங்கள் பரலோகப் பிதாவால் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டு, எவ்வளவாய் தயவுகூரப்பட்டு, ஆழமாக நேசிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணரச் செய்ய உதவுவதே அவரது இதயத்தின் வாஞ்சையாகும்.
வெண்டி பிரின்ஸ்
பாஸ்டர் பிரின்ஸ்க்கு அர்ப்பணிப்புள்ள மனைவியாகவும், ஜெசிகா ஷைனா மற்றும் ஜஸ்டின் டேவிட் ஆகியோருக்கு அன்பான தாயாகவும் இருக்கும் வெண்டி பிரின்ஸ், நீதிமொழிகள்31 இல் குறிப்பிடப்பட்டுள்ள குணசாலியான ஸ்திரீயை உருவகப்படுத்துகிறார். பாஸ்டர் பிரின்ஸுக்கு அவர் தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து வருகிறார். மேலும் ஜெசிகா ஷைனாவையும் ஜஸ்டின் டேவிட்டையும் கர்த்தரின் வழிகளில் வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளார். அவரது தாழ்மை, அரவணைப்பு மற்றும் தேவனுக்கான ஜனங்களுக்குமான அன்பு நல்ல ஆலோசகராக இருந்து பலருடைய வாழ்க்கையை தொடும்படி செய்கிறது.
என்னுடைய ஜெபம் சபையாக நாம் மரியாளைப் போல இயேசுவின் பாதத்தில் அமர்ந்து தேவையான அந்த ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டும் – அவரிடம் கிட்டி சேர்ந்து, ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பையும் கிருபையையும் புதிதாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
– வெண்டி பிரின்ஸ்
New Creation திருச்சபையை பற்றி
New Creation திருச்சபை சிங்கப்பூர் பட்டணத்தை தலைமையாக கொண்டிருக்கும் சபை.
எங்கள் தரிசனம் இயேசு என்ற நபரின் அன்பையும் அவரது பூரணமாக்கப்பட்ட கிரியையையும் அறிந்துகொண்டு, சுவிசேஷத்தை பிரசங்கிப்பதன் மூலமாக அவரை அறியச் செய்வதாகும்.
New Creation திருச்சபையில், நாங்கள் தேவனுக்கு பிரியமானவர்கள் என்பதை நம்புகிறோம். இதை அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் பரலோகத்தின் சிறந்த ஈவான, தமதுகுமாரனான இயேசுவை இலவசமாக கொடுத்ததினால் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சத்தியத்தின் வெளிப்பாட்டை நாம் பிடித்துக்கொல்லும்போது, நாம் உள்ளிருந்து பிறம்பாக அவருடைய கிருபையினாலே மறுரூபப்படுத்தப்படுகிறோம். அதுதான்தகப்பனாகிய தேவனின் அன்பிலும் கிருபையிலும் விசுவாசமாயிருந்து வாழ்வதன் சவுந்தரியமாக இருக்கிறது.
New Creation திருச்சபையில் பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்கள் ஆற்றமிக்க விதமாக தொடர்ந்து பிரசங்கித்து வருகிறார், கிறிஸ்துவை மையமாக கொண்டிருக்கும் அவருடைய பிரசங்கங்கள் ஒவ்வொருநாளும் உலகமெங்கும்லட்சக்கணக்கான ஜனங்களை சென்றடைகிறது.
இணைப்பில்லா அறிக்கை
எங்கள் வலைத்தளத்திலோ அல்லது எங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத்தவிர, New Creation திருச்சபையானது உள்ளூர் அல்லது வெளிநாட்டில் உள்ள எந்தவொரு திருச்சபையோடும், ஊழியம் அல்லது ஊழியரோடும், அமைப்புகள், இயக்கம் அல்லது டிஜிட்டல் தளத்துடனும் இணைக்கப்படவில்லை . New Creation திருச்சபையுடன் (மற்றும்/அல்லது போதகர் ஜோசப்பிரின்ஸ்) இணைந்திருப்பதாகக் கூறும் எந்தவொரு தனிநபரும், சபைகள், நிறுவனங்கள் அல்லது குழுக்கள் எங்களுக்கு தெரியாமல் அல்லது எங்கள் அனுமதியின்றி அவ்வாறு செய்கின்றனர், அவர்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல.
எங்களுடன் (மற்றும்/அல்லது போதக ர்ஜோசப்பிரின்ஸ்) தொடர்பு உள்ளது அல்லது ஒப்புதல் பெற்றிருக்கிறோம் என்று சொல்லி எந்தவொரு தனிநபர், தேவாலயம், அமைப்பு அல்லது குழு அத்தகைய உரிமை கோரலைப் பயன்படுத்தி நிதிதிரட்டுவது அல்லது அவர்களின் நிகழ்வுகளை விளம்பரப்படுத்துவது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து உடனடியாக இங்கே எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
New Creation திருச்சபையை குறித்து மேலும் அறிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.
நாங்கள் விசுவாசிப்பது
New Creation திருச்சபை சிங்கப்பூர் பட்டணத்தை தலைமையாக கொண்டிருக்கும் சபை.
எங்கள் தரிசனம் இயேசு என்ற நபரின் அன்பையும் அவரது பூரணமாக்கப்பட்ட கிரியையையும் அறிந்துகொண்டு, சுவிசேஷத்தை பிரசங்கிப்பதன் மூலமாக அவரை அறியச் செய்வதாகும்.
எங்கள் விசுவாசத்தின் அஸ்திபாரத்தை குறித்து நாங்கள் நம்புகின்ற பாவத்தை மேற்கொள்ளுதல், கிருபையின் வல்லமை, தேவன் அருளியவை, பரிசுத்த பந்தி, சபையின் ஒற்றுமை போன்றவற்றை குறித்து கற்றுக்கொள்ள உங்களை வரவேற்கிறோம் அறிக்கை பண்ணும்படி தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
மெய்யான கிருபை Vs போலியான கிருபையை பற்றின கட்டுரையை நீங்கள் வாசிக்கும்படி விரும்புகிறோம்.
நாங்கள் அப்போஸ்தலர் நம்பிக்கை அறிக்கையையும் (Apostles’ Creed) மற்றும் நைசியா நம்பிக்கை அறிக்கையையும் (Nicene Creed) நம்பி உறுதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்றும், அதற்குரிய அதிகாரத்தை நாங்கள் நம்புகிறோம். எல்லா வேதவாக்கியங்களும் தேவனால் ஊதப்பட்டவை என்றும், அவை சரியான போதனைகளுக்கான அசைக்க முடியாத அடித்தளமாக உள்ளன என்றும் நாங்கள் நம்புகிறோம் (2 தீமோத்தேயு 3:16–17).
ஒரே தேவன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அவர் நித்தியமாக மூன்று நபர்களாக—பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்—உள்ளார் (மத்தேயு 3:16–17, 2 கொரிந்தியர் 13:14, எபேசியர் 4:4–6).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையையும், அவருடைய கன்னிப் பிறப்பையும், பாவமற்ற வாழ்க்கையையும், அவர் குணமாக்கும் வல்லமையையும், அவர் செய்த அதிசயங்களையும், சிலுவையில் அவர் தம்மை பலியாக்கி செய்த பரிகார மரணத்தையும், அவருடைய உடலோடு நடந்த உயிர்த்தெழுதலையும், பிதாவின் வலதுபக்கத்தில் எங்கள் மகா ஆசாரியராகவும் நடுவராகவும் அவர் ஏறிச் சென்றதையும் நாங்கள் நம்புகிறோம். அவர் வாக்குத்தத்தம் செய்ததுபோல கர்த்தராகிய இயேசு மீண்டும் வருவார் என்றும் நாங்கள் நம்புகிறோம் (யோவான் 14:2–3, மத்தேயு 24:30).
தண்ணீர் ஞானஸ்நானம் என்பது, கர்த்தராகிய இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றோடு ஒரு விசுவாசி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற விசுவாசத்தின் வெளிப்புறச் சாட்சியாகும் என்று நாங்கள் நம்புகிறோம் (அப்போஸ்தலர் 8:12, ரோமர் 6:4).
பரிசுத்த ஆவியானவர் எங்கள் ஆறுதலாளரென்று நாங்கள் நம்புகிறோம். அவர் எங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் எங்களை வழிநடத்துகிறார் (யோவான் 14:26). பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், அதற்கான சாட்சியாக ஆவியில் ஜெபிப்பதையும் நாங்கள் நம்புகிறோம் (அப்போஸ்தலர் 2:1–4). பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்களையும், ஆவியின் கனியாகிய ஒன்பது குணங்களையும் நாங்கள் நம்புகிறோம் (1 கொரிந்தியர் 12:7–11, கலாத்தியர் 5:22–23).
தேவன் உலகத்தை இப்படியாக அன்புகூர்ந்தார்; தம்முடைய ஒரே குமாரனை அளித்தார்; அவரை விசுவாசிக்கும் எவரும் அழிவடையாமல் நித்திய ஜீவனை பெறவேண்டும் என்ற சுவிசேஷத்தை நாங்கள் நம்புகிறோம். உலகத்தைத் தண்டிக்க அல்ல, உலகம் அவரினாலே இரட்சிக்கப்படவே அவர் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பினார் என்றும் நாங்கள் நம்புகிறோம் (யோவான் 3:16–17). இந்த நல்ல செய்தியான கிருபையின் சுவிசேஷத்தை எல்லா ஜாதிகளுக்கும் அறிவிக்க நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் நாங்கள் நம்புகிறோம் (அப்போஸ்தலர் 20:24).
இயேசுவே வழி, சத்தியம், ஜீவன் என்று நாங்கள் நம்புகிறோம் (யோவான் 14:6). கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை அழைப்போர் யாவரும் இரட்சிக்கப்படுவார்கள் (ரோமர் 10:13). வேதாகமம் கூறுகிறது: “நீ உன் வாயினால் கர்த்தராகிய இயேசுவை அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று உன் இருதயத்தில் விசுவாசித்தால், நீ இரட்சிக்கப்படுவாய். இருதயத்தினால் விசுவாசித்து நீதியை அடைகிறார்கள்; வாயினால் அறிக்கையிட்டு இரட்சிப்பை அடைகிறார்கள்” (ரோமர் 10:9–10).
பாவம் எங்களை பரிசுத்தமான தேவனிடமிருந்து பிரித்தது என்றும், பாவத்தின் கூலி மரணம் என்றும் நாங்கள் நம்புகிறோம். ரோமர் 6:23 இவ்வாறு சொல்லுகிறது: “பாவத்தின் கூலி மரணம்.” ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், ரோமர் 6:23 அதோடு முடிவடையவில்லை. அது தொடர்ந்து, “தேவனுடைய வரம் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலே நித்திய ஜீவன்” என்றும் கூறுகிறது. கிறிஸ்துவினுள், “அவருடைய இரத்தத்தினாலே மீட்பையும், அவருடைய கிருபையின் செல்வத்தின்படி பாவமன்னிப்பையும் பெற்றிருக்கிறோம்” (எபேசியர் 1:7). மேலும் வேதாகமம் கூறுகிறது: “நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்திலிருந்தும் நம்மை சுத்திகரிக்கத் தக்கவராயும் நீதியுள்ளவராயும் இருக்கிறார்” (1 யோவான் 1:9). ஆகவே, ஒருவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசியாக மாறும்போது, தமது பாவங்களை ஒப்புக்கொண்டு, இரட்சகரின் தேவை இருப்பதை உணர்ந்து, தமது எல்லா பாவங்களுக்கும் அவர் அளிக்கும் முழுமையான மன்னிப்பை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வது மிக அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இயேசு கிறிஸ்துவில் மறுபடியும் பிறந்த விசுவாசிகளாகிய நாம், பாவத்தின் அதிகாரத்தின்மேல் ஜெயமாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், “கர்த்தருக்கு தகுதியாய் நடந்துகொண்டு, எல்லாவிதத்திலும் அவருக்குப் பிரியமாயிருந்து, எல்லா நல்ல கிரியைகளிலும் கனியடைந்து, தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும்” (கொலோசெயர் 1:10) என்றும் நாங்கள் நம்புகிறோம். பாவம் எப்போதும் அழிவை ஏற்படுத்தும் விளைவுகளோடு கூடவே வரும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இது விசுவாசிகளுக்கு எதிரான தேவனுடைய தண்டனையினால் அல்ல, பாவத்தின் இயல்பான அழிவூட்டும் விளைவுகளினாலே ஏற்படுகிறது. உதாரணமாக, ஒரு விசுவாசி தமது சுய விருப்பத்தினால் திறந்த தீயில் தமது கையை வைத்தால், அதனால் ஏற்படும் அழிவு தேவனுடைய தண்டனையினால் அல்ல; அந்த நபர் எடுத்த முன்நோக்கான தீர்மானத்தின் விளைவாகவே அது நிகழ்கிறது.
கிருபை என்பது உண்மையான விசுவாசிகளைத் தெய்வீகமற்றதையும் உலக ஆசைகளையும் மறுக்கக் கற்பிக்கும் ஒரு போதகர் (ஆசிரியர்) என்று நாங்கள் நம்புகிறோம். வேதாகமம் இதைப் பற்றி தெளிவாக கூறுகிறது: “இரட்சிப்பை அளிக்கும் தேவனுடைய கிருபை எல்லா மனிதர்களுக்கும் வெளிப்பட்டிருக்கிறது; அது நம்மைத் தெய்வீகமற்றதையும் உலக ஆசைகளையும் மறுத்து, இந்நிகழ்காலத்தில் புத்தியுடனும் நீதியுடனும் தெய்வபக்தியுடனும் வாழும்படியாகக் கற்பிக்கிறது” (தீத்து 2:11–12).
கிருபையின் சுவிசேஷத்தைப் பற்றிய சரியான வெளிப்பாட்டை பெற்றும், கிறிஸ்துவில் தங்களுடைய நீதியுள்ள அடையாளத்தை உறுதியாகப் பிடித்தும் வாழும் விசுவாசிகள்மேல் பாவம் அதிகாரம் செலுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம். இதை ரோமர் 6:8, 12–14 தெளிவாக அறிவிக்கிறது:
“நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து மரித்திருந்தால், அவரோடும் சேர்ந்து ஜீவிப்போம் என்று நம்புகிறோம்… ஆகையால் உங்கள் மரணமடையும் சரீரத்தில் பாவம் ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்; அதன் ஆசைகளுக்கு கீழ்ப்படியாதிருங்கள். மேலும் உங்கள் உறுப்புகளை அநீதிக்கான கருவிகளாக பாவத்திற்குக் கொடுக்காதீர்கள்; மாறாக, மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டவர்களாக தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, உங்கள் உறுப்புகளை தேவனுக்கான நீதியின் கருவிகளாக அர்ப்பணியுங்கள். ஏனெனில் நீங்கள் நியாயப்பிரமாணத்தின் கீழல்ல, கிருபையின் கீழ் இருப்பதால், பாவம் உங்கள்மேல் அதிகாரம் செலுத்தாது.”
ரோமர் 6:14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
கிருபையின் சுவிசேஷம் உண்டாக்கும் நல்ல கனிகள், பாவத்தின் மீது ஜெயமுள்ள வாழ்க்கை, அழகான திருமணங்கள், வலுவான குடும்பங்கள், உண்மையான தாராள மனப்பான்மை, மேலும் தேவனுடைய மகிமைக்காக வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் ஆட்சி செய்து வாழும் மறுபடியும் பிறந்த விசுவாசிகளை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ரோமர் 5:17 இதை இவ்வாறு சொல்லுகிறது:
“கிருபையின் மிகுதியையும், நீதியின் வரத்தையும் பெற்றுக்கொள்ளுகிறவர்கள், ஒரே ஒருவரான இயேசு கிறிஸ்துவினாலே வாழ்க்கையில் ஆட்சி செய்வார்கள்.”
மறுபடியும் பிறந்த உண்மையான விசுவாசிகள் பாவத்திற்கு ஒரு காரணத்தைத் தேடுவதில்லை என்று நாங்கள் நம்புகிறோம். இயேசுவின் அன்பும் பலியும் அவர்களை எவ்வாறு பாதித்திருக்கிறதோ, அவர்கள் பாவத்தைக் கோர முடியுமா? நாங்கள் நம்புகிறோம், அவர்கள் பாவத்திலிருந்து, பயம், குற்ற உணர்வு மற்றும் தண்டனையின் சிறையில் இருந்து வெளியேற வழியைத் தேடுகிறார்கள்.
நாம் கண்டுள்ளோம்: நாம் தேவனுடைய அதிசயமான கிருபையையும் நிபந்தனையில்லாத அன்பையும் அறிவிக்கும் போது, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மூலம் நாம் தொடர் சாட்சியங்கள் பெறுகிறோம்; அவர்கள் பொண்ணகாட்சிகள், மதுக்கழிவு, போதைப் பொருட்கள் மற்றும் பாலியல் அநீதியிலிருந்து விடுதலையடைந்திருக்கிறார்கள். இது கிருபையின் சுவிசேஷத்தின் வல்லமை.
இயேசு அறிவிக்கப்படும்போது, பாவம் மனிதர்களின் வாழ்க்கையில் ஆட்சி செய்யும் வல்லமை இழக்கிறது, உண்மையான புலம்பல் (repentance) நிகழ்கிறது.
நாங்கள் விசுவாசிக்கிறோம் இன்று நாம் கிருபையின் புதிய உடன்படிக்கையின் கீழ் இருக்கிறோம் என்று. "ஏனெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின" (யோவான் 1:17). நியாயப்பிரமாணத்திற்குரிய பழைய உடன்படிக்கை ஒரு ஊழியக்காரன் மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் குமாரன் மூலமாய் வந்தன. நியாயப்பிரமாணம் மனிதன் எவ்விதமாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறது. கிருபை, மனிதனுக்கு தேவன் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. மோசேயின் முதல் அற்புதத்தில், அவர் தண்ணீரை இரத்தமாக மாற்றினார்; இது மரணத்தில் முடிந்தது. கிருபையின் முதல் அற்புதத்தில், இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார்; இது வாழ்விலும் கொண்டாட்டத்திலும் முடிந்தது. எழுத்து கொல்லுகிறது; ஆவியோ உயிர்ப்பிக்கிறது (2 கொரிந்தியர் 3:6). நியாயப்பிரமாணத்தின் கீழ், ஆவிக்குரிய ரீதியில் வறியவனாயிருக்கும் மனிதனிடமிருந்து தேவன் நீதியைக் கோருகிறார். ஆனால் கிருபையின் கீழ், தேவன் நீதியை ஒரு ஈவாக அளிக்கிறார் (2 கொரிந்தியர் 5:21; ரோமர் 5:17).
நாங்கள் விசுவாசிக்கிறோம் கல்வாரி சிலுவையின் மூலமாக, இயேசுவை விசுவாசித்து, அவரைத் தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் கிருபையின் புதிய உடன்படிக்கையின் கீழ் இருக்கிறார்கள் என்று. நியாயப்பிரமாணத்தின் கீழ், தேவன் குற்றவாளிகளை ஒருபோதும் விடுவிக்கமாட்டார் என்றும், அவர்களுடைய பாவங்களை மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை வரை விசாரிப்பார் என்றும் கூறினார் (யாத்திராகமம் 34:7). ஆனால் கிருபையின் கீழ், "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார் (எபிரேயர் 8:12). நியாயப்பிரமாணம் மனிதனை மையமாகக் கொண்டது; ஆனால் கிருபை இயேசுவை மையமாகக் கொண்டது. நியாயப்பிரமாணம், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. கிருபை, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக இயேசு என்ன செய்திருக்கிறார் என்பதில் முழுமையாகக் கவனம் செலுத்துகிறது. நியாயப்பிரமாணத்தின் கீழ், நமது கீழ்ப்படியாமையால் நாம் தகுதியிழக்கிறோம். கிருபையின் கீழ், இயேசுவின் கீழ்ப்படிதலால் நாம் தகுதி பெறுகிறோம். நியாயப்பிரமாணத்தின் கீழ், நாம் சரியானதைச் செய்யும்போது நீதிமான்களாக்கப்படுகிறோம். கிருபையின் கீழ், நாம் சரியானதை விசுவாசிக்கும்போது நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 4:3–8).
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின (யோவான் 1:17)
நாங்கள் விசுவாசிக்கிறோம் பத்துக் கட்டளைகள் பரிசுத்தமானவை, நீதியானவை, மகிமையானவை மற்றும் நன்மையானவை என்றும், தேவனுடைய பரிபூரணமான நியாயப்பிரமாணத்தின் மீது நாங்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம் என்றும். பத்துக் கட்டளைகளின் தரம் மிகவும் களங்கமற்றதாகவும், அவற்றின் பரிசுத்தமான நிபந்தனைகள் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காத வகையில் உறுதியானதாகவும் உள்ளன. அதனால்தான், "நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை" (கலாத்தியர் 3:11). தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுதல் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்: "நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே... தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." (கலாத்தியர் 2:16, 19–21)
நாங்கள் விசுவாசிக்கிறோம் கர்த்தருடைய கிருபையின் வல்லமையால் மறுரூபமாக்கப்பட்ட விசுவாசிகள், பத்துக் கட்டளைகள் போதிக்கும் தார்மீகச் சிறப்புகளையும், மதிப்புகளையும், நற்பண்புகளையும் நிறைவேற்றவும் கடைப்பிடிக்கவும் விரும்புவார்கள் என்று. உண்மையான கிருபை உண்மையான பரிசுத்தத்தை விளைவிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் பிரகடனப்படுத்தியதுபோல, "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது." (ரோமர் 13:10)
நாங்கள் விசுவாசிக்கிறோம் கிருபையின் கீழ் வாழும் தேவனுடைய மக்கள், நியாயப்பிரமாணத்தின் எழுத்துப்பூர்வமான விதிமுறைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், கிறிஸ்துவுக்குள் அவற்றை மிஞ்சி, இன்னும் ஒரு படி மேலே சென்று செயல்படுகிறார்கள் என்று. உதாரணமாக, ஒருவன் விபச்சாரம் செய்யக்கூடாது என்று மட்டுமே நியாயப்பிரமாணம் கட்டளையிட முடியும். ஒருவன் அந்த நியாயப்பிரமாணத்தை வெளிப்புறமாகக் கடைப்பிடித்தாலும், அவனது உள்ளத்தில் தன் துணைவர் மீது அன்பு இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. கிருபை வெறும் மேலோட்டமான அல்லது வெளிப்புற நடத்தை மாற்றத்தோடு நின்றுவிடாமல், இன்னும் ஆழமாகச் செல்கிறது. கிறிஸ்து சபையை நேசித்ததுபோலவே, ஒருவன் தன் மனைவியை நேசிக்கவும், சிலுவையின் வல்லமையின் அடிப்படையில் ஒரு அழகான திருமண வாழ்வை அமைத்துக்கொள்ளவும் அது அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது. அதுவே தேவனுடைய கிருபையின் உருமாற்றும் வல்லமையாகும். அன்பு செலுத்துவதற்கும், தேவனை மகிமைப்படுத்தும் ஒழுக்கமான வாழ்வை வாழ்வதற்கும் தேவையான வல்லமையானது, முதலாவதாக, நம் மீது கர்த்தர் கொண்டுள்ள மிக நெருக்கமான அன்பை நாம் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பதன் மூலமே கிடைக்கிறது (1 யோவான் 4:19). தேவனுடைய அளவற்ற கிருபையை அனுபவித்த ஒருவன், தன் அயலானுக்குச் சொந்தமான எதையும் இச்சியாமல் இருப்பது மட்டுமல்லாமல், தன் அயலானிடமும் தன் சமூகத்திடமும் தாராளமாக நடந்துகொள்வதற்கான வல்லமையையும் பெற்றிருப்பான். தேவனுடைய கிருபையைச் சகேயு நேரடியாக அனுபவித்த பிறகு, "ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்; நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், அதை நாலுமடங்காகத் திரும்பக் கொடுக்கிறேன்" என்று கூறினான் (லூக்கா 19:8).
வெளிப்படையாக பிராயச்சித்தம் செய்யும் பாரம்பரியத்தை மட்டும் பார்க்காமல், “மனந்திரும்புதல்” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். “மனந்திரும்புதல்” என்பதற்கான கிரேக்க வார்த்தை மெட்டானோயா ஆகும், இதன் பொருள் “மன மாற்றம்” என்பதாகும். உண்மையான மனமாற்றத்தை உள்ளடக்கிய மனந்திரும்புதல் என்பது, மனந்திரும்புதலின் வெறும் வெளித்தோற்ற வெளிப்பாடுகளை விட ஆழமானது. ஒருவர் வெளிப்படையாக மனவருத்தத்துடன் காணப்பட்டாலும், கசப்பான கண்ணீரைச் சிந்தினாலும், தன் பாவத்தின் மீது ஒரு வெற்றியை அடையாமல் போகலாம். உண்மையான மனந்திரும்புதல் (மெட்டானோயா) என்பது உண்மையான மனவருத்தம், செய்த தவறை ஒப்புக்கொள்ளுதல், மற்றும் சிலுவையின் வெளிப்பாட்டைப் பெறுவதன் மூலம் பாவத்திலிருந்து விலகி கிருபைக்குத் திரும்புவதற்கான உண்மையான உள்விருப்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது (2 கொரிந்தியர் 7:9-10).
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் செய்துமுடிக்கப்பட்ட கிரியையின் வல்லமையின் மீது விசுவாசம் வைப்பதன் மூலமாக மட்டுமே, ஒருவர் உண்மையான மனந்திரும்புதலை அனுபவிக்கவும், பாவத்திலிருந்து விடுதலை பெறவும் முடியும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஒரு விசுவாசி பாவத்தில் விழுந்து, இன்று ஏதேனும் ஒரு பாவப் பழக்கத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார் என்றால், அவர் தன் மனதை மாற்றிக்கொள்வதும்—அந்தப் பாவம் கூட இயேசுவின் சரீரத்தில் தண்டிக்கப்பட்டுவிட்டது என்று விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்வதும்—அந்தப் பலவீனத்தை மேற்கொள்ளும் பொருட்டு, தேவனுடைய மன்னிப்பையும், தேவனுடைய தகுதியற்றவர்களுக்கான கிருபையையும், தேவனுடைய நீதியையும் புதிதாகப் பெற்றுக்கொள்ளத் தொடங்குவதும் மிக அவசியம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். தவறி விழுந்தவர்கள் அனைவரும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவை விட்டு விலகி ஓடாமல், மாறாக அவரை நோக்கி ஓடிவருமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். பாவத்தின் அழிவுக்கேதுவான சுழற்சியிலிருந்து வெளியேறுவதற்கான தீர்வும், பதிலும், வெற்றியும் இயேசுவாகவே இருக்கிறார் (ரோமர் 5:17).
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:17)
நாங்கள் படிப்படியான பரிசுத்தமாக்குதலில் விசுவாசிக்கிறோம். இயேசுவை நம்முடைய கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட அந்த நொடியிலேயே, நாம் மன்னிக்கப்பட்டோம், சுத்திகரிக்கப்பட்டோம், நீதியில் பூரணமாக்கப்பட்டோம், இரட்சிக்கப்பட்டோம். நாம் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டோம் (எபிரேயர் 10:10). இருப்பினும், கிறிஸ்துவுக்குள் நம்முடைய பரிசுத்தமாக்குதலின் வெளிப்பாடும் அதன் செயல்பாடும் படிப்படியாக நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஒரு விசுவாசியாக, நாம் அதிக நீதிமான்களாக மாற முடியாது, ஆனால் நாம் வாழும் விதத்தைப் பொறுத்து அதிக பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவோ அல்லது பரிசுத்தமானவர்களாகவோ மாற முடியும். வேறுவிதமாகக் கூறினால், ஒரு விசுவாசி இயேசுவின் இரத்தத்தால் ஒரேமுறை நீதிமானாக்கப்பட்டு, என்றென்றைக்குமாக நீதிமான்களாக்கப்பட்டிருந்தாலும், ஒரு கிறிஸ்தவராக அவர்களின் வளர்ச்சியில் பரிசுத்தமாக்குதல் என்பது தொடர்ச்சியாக நிகழ்கிறது. ஒருவன் கிருபையிலும் கர்த்தருடனான தன் உறவிலும் எவ்வளவு அதிகமாக வளர்கிறானோ—தேவனுடைய கிருபையின் வார்த்தையாகிய தண்ணீரால் எவ்வளவு அதிகமாக மீண்டும் மீண்டும் கழுவப்படுகிறானோ—அவ்வளவு அதிகமாக அவன் பரிசுத்தமாக்குதலிலும் பரிசுத்தத்திலும் வளர்கிறான். இதனால்தான், சிலுவையில் கிறிஸ்து செய்த ஒரேயொரு கீழ்ப்படிதலினால் நாம் “என்றென்றைக்குமாகப் பூரணப்படுத்தப்பட்டிருந்தபோதிலும்”, நாம் “பரிசுத்தமாக்கப்படுகிறோம்” என்று எபிரேயர் புத்தகத்தின் ஆசிரியர் கூறுகிறார் (எபிரேயர் 10:14).
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; அது உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தத்திற்கும், நீதியைப் போதித்தலுக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:16) என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எனவே, நடத்தை, ஒழுக்கம், திருத்தம் மற்றும் நீதிமானான வாழ்க்கை ஆகியவை முக்கியமல்ல என்று கூறும் எந்தவொரு போலியான "கிருபை போதனை" குறித்தும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். மன்னிப்பை குறித்த வெளிப்பாடு, நீதியான வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடாது; மாறாக, அது நீதியான வாழ்க்கை நடைமுறைக்கு வருவதற்கான உந்துசக்தியாகவே அமைகிறது. ஆயினும், துயரமான விபத்துகள், உடல்நலக்குறைவுகள் மற்றும் நோய்கள் ஆகியவற்றின் மூலம் கர்த்தர் நம்மை ஒருபோதும் திருத்தமாட்டார் என்பதை நாம் அறிந்துகொள்வது மிக அவசியமாகும். "ஏனெனில், ஒரு தந்தை தாம் பிரியங்கொள்ளும் பிள்ளையைத் திருத்துவது போலவே, கர்த்தரும் தாம் நேசிக்கிறவர்களைத் திருத்துகிறார்" (நீதிமொழிகள் 3:12, NLT) என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது.
இவ்வுலகத்தின் பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை அளிக்க விரும்புவது போலவே, நம் பரலோகத் தந்தையும் தம் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை அளிக்கவே தம் இருதயத்தில் விரும்புகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். நம் ஆண்டவராகிய இயேசு, மலைப்பிரசங்கத்தின்போது பிதாவின் இருதயத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்: "ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்." (மத்தேயு 6:31–32). ஆயினும், நம் பரலோக பிதா தமது பிள்ளைகள் நிறைவான வளங்களைப் பெற்று, நல்வெற்றியை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் (2 கொரிந்தியர் 9:8; யோசுவா 1:8; சங்கீதம் 1:1–3), அவர்கள் உலக பொருட்களால் ஆட்கொள்ளப்படுவதையோ அல்லது பணத்தைத் தேடுவதிலேயே வெறித்தனமாக மூழ்கிப்போவதையோ அவர் விரும்புவதில்லை (பிரசங்கி 5:10; மத்தேயு 6:24).
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்திக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதி, ஒரு உண்மையை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. ” (1 தீமோத்தேயு 6:6–11). எல்லாவற்றிலும் முதலாவதாக நம்முடைய கர்த்தராகிய இயேசுவையே தேடுவதும், பணத்தையும் உலகப்பிரகாரமான வெற்றியையும் அல்லாமல், அவரையே நம் வாழ்வின் மையமாக அமைத்துக்கொள்வதும் நம்முடைய முதன்மையான கடமை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நாம் அவர்மீது நம் நம்பிக்கையை வைக்கும்போது, அவருடைய ஆசீர்வாதங்கள் நம்மைத் தொடர்ந்து வருகின்றன. கர்த்தரிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களும், செழிப்பும், நல்வெற்றியும் வெறும் பொருள்சார்ந்த அல்லது நிதிசார்ந்தவை மட்டுமல்ல; அவை முழுமையானவை என்றும், ஆத்தும செழிப்பிலிருந்தே அவை தொடங்குகின்றன என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம் (3 யோவான் 1:2).
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். (3 யோவான் 1:2)
கிருபையின் கீழ் இருப்பவர்கள் தாராள மனப்பான்மையுடன், தங்கள் நேரம், ஆற்றல் மற்றும் பொருளாதார வளங்களை, வசதியற்றவர்களை ஆதரிக்கவும், நேசிக்கவும், பராமரிக்கவும் தாராளமாக வழங்குகிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு திருச்சபையாக, நாங்கள் எங்கள் உள்ளூர் சமூகத்தில் உள்ள பல அடித்தள முயற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று தாராளமாக விதைக்கிறோம், அத்துடன் உலகம் முழுவதும் உள்ள பல மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கும் கொடுக்கிறோம். பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த அறிவுரையைக் கடைப்பிடிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்: “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு” (1 தீமோத்தேயு 6:17-19). “செழிப்பின் சுவிசேஷம்” என்று முத்திரை குத்தப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை, மேலும் எல்லா விசுவாசிகளும் மிகவும் செல்வந்தர்களாயிருப்பார்கள் என்றும் நாங்கள் போதிப்பதில்லை. நாங்கள் பேராசை, பொருள் பற்று, கஞ்சத்தனம் அல்லது பண ஆசையை ஆதரிப்பதில்லை. மாறாக, விசுவாசிகள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாங்கள் போதிக்கிறோம் (ஆதியாகமம் 12:3, 2 கொரிந்தியர் 9:8).
இவ்வுலகத்தின் பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை அளிக்க விரும்புவது போலவே, நம் பரலோகத் தந்தையும் தம் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை அளிக்கவே தம் இருதயத்தில் விரும்புகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். நம் ஆண்டவராகிய இயேசு, மலைப்பிரசங்கத்தின்போது பிதாவின் இருதயத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்: "ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்." (மத்தேயு 6:31–32). ஆயினும், நம் பரலோக பிதா தமது பிள்ளைகள் நிறைவான வளங்களைப் பெற்று, நல்வெற்றியை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் (2 கொரிந்தியர் 9:8; யோசுவா 1:8; சங்கீதம் 1:1–3), அவர்கள் உலக பொருட்களால் ஆட்கொள்ளப்படுவதையோ அல்லது பணத்தைத் தேடுவதிலேயே வெறித்தனமாக மூழ்கிப்போவதையோ அவர் விரும்புவதில்லை (பிரசங்கி 5:10; மத்தேயு 6:24).
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்திக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதி, ஒரு உண்மையை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. ” (1 தீமோத்தேயு 6:6–11). எல்லாவற்றிலும் முதலாவதாக நம்முடைய கர்த்தராகிய இயேசுவையே தேடுவதும், பணத்தையும் உலகப்பிரகாரமான வெற்றியையும் அல்லாமல், அவரையே நம் வாழ்வின் மையமாக அமைத்துக்கொள்வதும் நம்முடைய முதன்மையான கடமை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நாம் அவர்மீது நம் நம்பிக்கையை வைக்கும்போது, அவருடைய ஆசீர்வாதங்கள் நம்மைத் தொடர்ந்து வருகின்றன. கர்த்தரிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களும், செழிப்பும், நல்வெற்றியும் வெறும் பொருள்சார்ந்த அல்லது நிதிசார்ந்தவை மட்டுமல்ல; அவை முழுமையானவை என்றும், ஆத்தும செழிப்பிலிருந்தே அவை தொடங்குகின்றன என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம் (3 யோவான் 1:2).
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். (3 யோவான் 1:2)
கிருபையின் கீழ் இருப்பவர்கள் தாராள மனப்பான்மையுடன், தங்கள் நேரம், ஆற்றல் மற்றும் பொருளாதார வளங்களை, வசதியற்றவர்களை ஆதரிக்கவும், நேசிக்கவும், பராமரிக்கவும் தாராளமாக வழங்குகிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு திருச்சபையாக, நாங்கள் எங்கள் உள்ளூர் சமூகத்தில் உள்ள பல அடித்தள முயற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று தாராளமாக விதைக்கிறோம், அத்துடன் உலகம் முழுவதும் உள்ள பல மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கும் கொடுக்கிறோம். பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த அறிவுரையைக் கடைப்பிடிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்: “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு” (1 தீமோத்தேயு 6:17-19). “செழிப்பின் சுவிசேஷம்” என்று முத்திரை குத்தப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை, மேலும் எல்லா விசுவாசிகளும் மிகவும் செல்வந்தர்களாயிருப்பார்கள் என்றும் நாங்கள் போதிப்பதில்லை. நாங்கள் பேராசை, பொருள் பற்று, கஞ்சத்தனம் அல்லது பண ஆசையை ஆதரிப்பதில்லை. மாறாக, விசுவாசிகள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாங்கள் போதிக்கிறோம் (ஆதியாகமம் 12:3, 2 கொரிந்தியர் 9:8).
பரிசுத்த திருவிருந்து என்பது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூரும் ஒரு நிகழ்வு என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்; மேலும், அவரை நினைவுகூரும் வகையிலேயே நாங்கள் இந்தப் பரிசுத்த திருவிருந்தில் பங்குகொள்கிறோம் (1 கொரிந்தியர் 11:24–25). பரிசுத்த திருவிருந்து 'யூக்கரிஸ்ட்' (Eucharist) என்றும் அழைக்கப்படுகிறது; இப்பெயர், "நன்றியறிதல்" என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லான 'யூக்கரிஸ்டியா' (eucharistia) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். சிலுவையில், "நமது மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நமது அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்" (ஏசாயா 53:5). விசுவாசத்தோடு பரிசுத்த திருவிருந்தில் பங்குகொள்வதன் மூலம், கர்த்தருடைய மரணத்தை நாம் நினைவுகூர்ந்து கனம்படுத்தும்போது, நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம்; அதோடு, நமக்காகச் சிலுவையில் அவர் நிறைவேற்றிய அனைத்தையும்—அதாவது சுகம், முழுமை மற்றும் சமாதானம் ஆகியவற்றை—நாம் புதிதாகப் பெற்றுக்கொள்கிறோம். சங்கீதக்காரரோடு இணைந்து, நம் இருதயங்களில் நன்றியோடு பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறோம்: "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது." (சங்கீதம் 103:1–5).
அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படும் ஆதிகாலத் திருச்சபையின் மரபின்படி, ஒவ்வொரு ஞாயிறன்றும் கிறிஸ்துவின் சரீரமாக இணைந்து கூடிவந்து, பரிசுத்த திருவிருந்தில் பங்கேற்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். வேதாகமம் நமக்கு இவ்வாறு கூறுகிறது: “வாரத்தின் முதல் நாளிலே... சீஷர்கள் அப்பம் பிட்கும்படி கூடிவந்தார்கள்” (அப்போஸ்தலர் 20:7).
"அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியியோக்கியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபங்களிலும் உறுதியாய் நிலைத்திருந்த" (அப்போஸ்தலர் 2:42) அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஆதிகாலச் சபையைப் போலவே நாமும் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணப்படும் ஆதிகாலச் சபையானது, பரிசுத்த திருவிருந்தின் முக்கியத்துவம், மேன்மை மற்றும் வல்லமை ஆகியவற்றைக் குறித்த ஆழமான வெளிப்பாட்டைத் தெளிவாகப் பெற்றிருந்தது. அதனால்தான், அவர்கள் அதை எப்போதாவது ஒருமுறை மட்டும் உட்கொள்ளவில்லை. மாறாக, "அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி," (அப்போஸ்தலர் 2:46) என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது.
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி (அப்போஸ்தலர் 2:46)
ஒவ்வொரு முறையும் நாம் பரிசுத்த திருவிருந்தில் பங்குகொள்ளும்போது—அது சபையின் கூட்டு ஆராதனையாக இருந்தாலும் சரி, அல்லது ஆதித்திருச்சபையைப் போல "வீடுதோறும்" (அப்போஸ்தலர் 2:46) பங்குகொள்வதாக இருந்தாலும் சரி—நாம் கர்த்தருடைய பந்திக்குத் தகுதியான விதத்தில் பங்குகொள்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 'தகுதியான விதத்தில் பங்குகொள்ளுதல்' என்பது, இது ஒரு சாதாரண உணவு அல்ல; மாறாக, இது பரிசுத்தமானதும், தனித்து ஒதுக்கப்பட்டதும் ஆகும் என்பதை உணர்ந்துகொண்டு, கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட கிரியைகள் குறித்த தெளிவான வெளிப்பாட்டுடன் பங்குகொள்வதைக் குறிக்கிறது. அதாவது, நம்முடைய விசுவாசம் கர்த்தராகிய இயேசுவின் மீது முழுமையாக மையப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; நாம் அப்பத்தைப் புசிக்கும்போது, நம்முடைய சரீரம் முழுமை அடைய வேண்டும் என்பதற்காகவே அவருடைய சரீரம் உடைக்கப்பட்டது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் (1 கொரிந்தியர் 11:24, ஏசாயா 53:5). மேலும், நாம் பாத்திரத்தில் உள்ளதைப் பருகும்போது, நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் மன்னிப்பும் விடுதலையும் கிடைப்பதற்காகவே அவருடைய இரத்தம் சிந்தப்பட்டது என்பதை நாம் நினைவுகூர வேண்டும் (மத்தேயு 26:28, கொலோசெயர் 2:13).
சபை வரலாறு முழுவதிலும் பல்வேறு கிறிஸ்தவ சமயப்பிரிவுகளில் நடைமுறைகளிலும் நம்பிக்கைகளிலும் வேறுபாடுகள் இருந்தாலும், கிறிஸ்துவின் தேகத்தின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் ஐக்கியமாக இருக்க முடியும் என்றும், அப்போஸ்தலர் நம்பிக்கை அறிக்கையும் நைசியா நம்பிக்கை அறிக்கையும் எடுத்துரைக்கும் அடிப்படை கிறிஸ்தவ சத்தியங்களைச் சுற்றி ஒன்றுபட முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம் (1 கொரிந்தியர் 12:12, எபேசியர் 4:3).