தனிப்பட்ட அனுபவங்கள்
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பாக 20 வயதான என்னுடைய மகள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள், எங்கள் குடும்பத்தோடு தொடர்பு கொள்ளுவதை நிறுத்திவிட்டாள், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, மரபுகளை விட்டு, செய்ய தகாத பழக்கங்களில் ஈடுபட்டாள். அவள் வியாகுலத்தினாலும் வேதனையின் தாக்குதலினாலும் மிகவும் பாதிக்கப்பட்டாள். அவளை அப்படி பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது, ஏனென்றால் உங்களுக்கு அவளைத் தெரிந்திருந்தால் அவள் எவ்வளவு இனிமையானவள், இப்படிப்பட்ட அழகான மகள் வேண்டும் என்று நினைப்பீர்கள்.
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில் 24 வாரத்தில் என்னுடைய மூத்த மகள் தனது குழந்தையை பெற்றெடுத்தாள், ஆனால் அந்த குழந்தை மூன்று நாட்களே ஜீவனோடு இருந்தது. அது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் கடினமானதாக காணப்பட்டது.
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்கையில் - தேவனை நோக்கி கதறினேன்.
திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒரு அலர்ஜியை ஏற்படுத்தி நிமோனியா அல்லது அங்குள்ள ரத்த நாளங்களில் நோய் தொற்றை உண்டாக்கும் ஒரு விதமான பாக்டீரியா) அதனால் தாங்க முடியாத வேதனை என் தலையிலும் கரங்களிலும் கால்களிலும் உண்டானது.
வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு போய் காணப்பட்டது. நான் வேதத்தை வாசிப்பேன், ஆனால் அதிலிருந்து ஒன்றையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியாது. இதின் நிமித்தம் நான் குற்ற உணர்வை அடைந்தவளாக நெடுநாட்களாய் வேதத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டேன்.
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன். முதலில் எனக்கு வித்தியாசமாக இருந்தது, ஆனால் அவை என்னுடைய ஆவியோடு கலந்து விட்டது. அதை இன்னும் அதிகமாக கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை.