தனிப்பட்ட அனுபவங்கள்
முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது
சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், நான் சற்று சோர்வோடும் தனிமையிலும் இருப்பதை உணர்ந்தேன். தன்னுடைய செய்தியின் முடிவில் ஜோசப் சுகத்தை தீர்க்கதரிசனமாக உரைக்க ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு காரியம் என் கவனத்தை ஈர்த்தது. ஒவ்வொரு நாளும் கை நிறைய தனது முடி கொட்டுவதினால் வருத்தத்தோடு கவலைப்படுகிற உங்களை தேவன் சுகமாக்க விரும்புகிறார் என்று சொல்லி, தலை பகுதி சுகமாக அவர் ஜெபித்தார்.
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்லவளாக இருக்க விரும்பினேன். எனக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டைகள் வரும் பலமுறை அதினிமித்தம் விவாகரத்து பெற்றுக் கொள்ளும்படி முயற்சித்து இருக்கிறோம். பயத்தினாலும் கலக்கத்தினாலும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எப்படி வீட்டின் தேவைகளை சந்திப்பேன் என்பதை அறியாமலும் பிள்ளைகளுடைய பல்கலைக்கழக படிப்பில் செலவுகளுக்கு என்ன செய்வேன் என்று புரியாமலும் எதிர்காலமே இரண்டு காணப்பட மிகுந்த போராட்டத்தில் இருந்தேன். அதன் விளைவாக முற்கோபகாரியாகவும் மன அழுத்தம் ஒடுக்குதலின் சிந்தனைகளாலும் நிரம்பினேன்.
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் பணிபுரிந்து வந்த அந்த நிறுவனமானது வருடத்தின் துவக்கத்தில் அவர்கள் அந்த நிறுவனத்தை மூடப் போவதாக அறிவித்திருந்தார்கள். என்னுடைய பின்புற காயத்தினால் நானும் வேலை இல்லாதவளாக காணப்பட்டேன். எல்லாம் இருண்டதாக காணப்பட, எங்களுடைய தேவைகளை எப்படி சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமல் நான் கவலைப்பட்டேன்.
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன். முதலில் எனக்கு வித்தியாசமாக இருந்தது, ஆனால் அவை என்னுடைய ஆவியோடு கலந்து விட்டது. அதை இன்னும் அதிகமாக கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை.