தனிப்பட்ட அனுபவங்கள்
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட்டேன் -பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், விளையாட்டுகளில், வேலை ஸ்தலத்திலும் கடைசி நபராக இருப்பேன். எந்த ஒரு காரியத்திலும் நான் வெற்றியை அனுபவித்ததே இல்லை. எனவே வாழ்க்கையில் எனக்கு வெற்றி இல்லை என்றே எண்ணினேன்.
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தினாலே புறக்கணிக்கப்பட்டிருந்தேன் ஏனென்றால் என்னிடம் இருந்த பணம், வசதி வாய்ப்பு அனைத்தும் மறைந்து விட்டன. என் மகனும் நானும் சிறிய கிராமத்தில் ஒரு குடும்பத்தோடு வசிக்கும்படியான சூழ்நிலை உண்டானது, அந்த குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அருகில் இருந்து பட்டணத்தில் வேலை செய்து கொண்டிருந்தார், அவருடைய மாத வருமானமான வெறும் 70 டாலர் வைத்து ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அப்போது இருந்த வாழ்க்கை நிலை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாக இருந்தது.
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகும் எனக்கு எந்தவித வருமானமும் இல்லை. வாராந்திர விற்பனை கூட்டங்கள் எனக்கு மிகவும் மன அழுத்தத்தை தந்தது, எனவே நான் நம்பிக்கையற்றவனாய் ஏமாற்றம் நிறைந்தவனாய் காணப்பட்டேன்.
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிரயாணங்கள் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் பல வாரங்களாக, சில நேரங்களில் பல மாதங்களும் பார்க்காமல் இருந்திருக்கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய நிறுவனத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது, அதினிமித்தமாக அதிலிருந்து வந்த ஊதியமானது எங்கள் உணவிற்கும் இருப்பிட செலவுகளுக்கும் போதுமானதாக இல்லை.
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனுடைய நன்மை, இரக்கம், கிருபை, அன்பை குறித்து அதிகமாக கற்றுக் கொண்டேன்.
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் பணிபுரிந்து வந்த அந்த நிறுவனமானது வருடத்தின் துவக்கத்தில் அவர்கள் அந்த நிறுவனத்தை மூடப் போவதாக அறிவித்திருந்தார்கள். என்னுடைய பின்புற காயத்தினால் நானும் வேலை இல்லாதவளாக காணப்பட்டேன். எல்லாம் இருண்டதாக காணப்பட, எங்களுடைய தேவைகளை எப்படி சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமல் நான் கவலைப்பட்டேன்.
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன். முதலில் எனக்கு வித்தியாசமாக இருந்தது, ஆனால் அவை என்னுடைய ஆவியோடு கலந்து விட்டது. அதை இன்னும் அதிகமாக கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை.
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒரு தேசிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் இருந்த என் வேலையை விட்டு, என் சொந்த ஊரான அராட் நகரத்திற்கு திரும்பி வந்தேன்.