வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இதன் மூலம் பகிர்ந்திட
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தினாலே புறக்கணிக்கப்பட்டிருந்தேன் ஏனென்றால் என்னிடம் இருந்த பணம், வசதி வாய்ப்பு அனைத்தும் மறைந்து விட்டன. என் மகனும் நானும் சிறிய கிராமத்தில் ஒரு குடும்பத்தோடு வசிக்கும்படியான சூழ்நிலை உண்டானது, அந்த குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அருகில் இருந்து பட்டணத்தில் வேலை செய்து கொண்டிருந்தார், அவருடைய மாத வருமானமான வெறும் 70 டாலர் வைத்து ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அப்போது இருந்த வாழ்க்கை நிலை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாக இருந்தது.
என்னுடைய மகனுக்கு பள்ளி கட்டணத்தை கட்டவோ அவனுக்கு உணவு வாங்கவோ என்னிடம் பணம் இல்லை. என் மகன் இந்த புதிய வாழ்க்கை முறையை பழக்கப்படுவதையும் சில நேரங்கள் குப்பை தொட்டியில் இருந்து உணவு எடுத்து உண்ணக்கூடிய நிலையையும் அவனுடைய போராட்டத்தையும் பார்க்க மட்டுமே முடிந்தது. அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு கூட எங்களிடம் போதிய பணம் இல்லை. இரவு முழுவதும் மேற்கூரையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் அறையில் தான் நாங்கள் தூங்க வேண்டியிருந்தது, அது என் மகனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக மாறினது.
அந்த நாட்களில் நான் என்னுடைய நண்பர்களிடமிருந்தும் என்னை பார்த்து பரிதாபப்படும் நபர்களிடமிருந்து விலகி இருந்தேன். எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் எல்லாம் மாற்றம் பெரும் நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்றும் நம்பினேன். அந்த பாதையில், நான் தேவன் மேல் விசுவாசமாக இருப்பதை தெரிந்துகொண்டேன், அவர் என் வாழ்வை மீட்டு என் வாழ்க்கையை மாற்றிடுவார் என்பதை அறிந்திருந்தேன். தேவன் எண்ணெய் நேசிக்கிறார் என்பதையும் இந்த காரியங்களை நான் கடந்துவருவது அவருக்கு வேதனை அளிக்கிறது என்பதையும் அறிந்திருந்தேன். அவர் தமது வார்த்தையில் வாக்குப்பண்ணினதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதையும் அறிந்திருந்தேன்.
வேதாகமமும் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் “Destined to Reign” என்ற புத்தகமும் என் நெருங்கிய நண்பர்களாக மாறினது. நான் அந்த புத்தகத்தையும் வேதாகமத்தியும் தழுவிக்கொண்டேன், நான் ஏற்கனவே அனுபவித்துகொண்டிருக்கும் ஆசீர்வாதங்களுக்காக – உதாரணமாக, கண் பார்வை, ஆரோக்கியம், சந்தோஷம், சமாதனம், வாழ்வில் இயேசு இருப்பது, நான் கிறிஸ்தவனாக இருப்பதற்கு சுதந்திரம் தரும் நாடு, போன்ற காரியங்களில் கவனம் செலுத்துவதை தெரிந்துகொண்டேன்.
ஒரு வருடம் கழித்து,தேவன் எனக்கு ஒரு நல்ல வேலை, ஒரு கார்,மற்றும் வீடு தந்ததோடு இந்த வருடம் நான் திருமணம் செய்துகொள்ள போகிற நல்ல மணமகனையும் தந்து ஆசீர்வதித்தார். இப்போது என் மகன் சமாதானமாக தூங்குகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுவை குறித்த அறிவில் வளர்ந்திருக்கிறேன். Trinity பிராட்காஸ்டிங் வலைதளத்தில் பாஸ்டர் பிரின்ஸ் செய்திகளை கேட்கிறேன், அவருடைய உபகரணங்களை வாங்கி அலுவலகத்திற்கு காரில் பிரயாணிக்கும்போது கேட்கிறேன். என் வருங்கால கணவரும் இயேசுவின் மீது அன்புள்ளவராக இருக்கிறார். நாங்கள் எங்களை அவருக்கும் கிருபையின் சுவிசேஷத்திற்கு விற்றுவிட்டோம், போகிற இடங்களில் அதை பகிர்ந்துகொள்கிறோம்.
பாஸ்டர் பிரின்ஸ், எளிமையான முறையில் வல்லமையான விதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழகை வெளிப்படுத்துவதற்காக நன்றி. எங்களை இயேசுவை நேசிக்க செய்வதற்காக நன்றி. உங்களை நேசிக்கிறோம் உங்கள் பணிகளை பாராட்டுகிறோம். தேவன் தாமே பூமியின் கடையாந்தரங்கள் வரைக்கும் இந்த மெய்யான சுவிசேஷத்தை தொடர்ந்து ஆசீர்வதிக்கும்படியாக வேண்டிக்கொள்கிறோம். உங்களுக்கும், வெண்டி மற்றும் பிள்ளைகளுக்கும் சமாதானமும் ஆசீர்வாதங்களும் உண்டாயிருப்பதாக,
எழுதியவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை
தென் ஆப்பிரிக்கா
இதுபோல இன்னும் பல
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...
கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்
விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...
திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது
எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை
பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...
வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்
நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...