சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

3 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானும் என்னுடைய கணவரும் சிக்காகோவில் இருக்கிறதான ஸ்தல சபையில் போதகர்களாக இருந்தோம். நாங்கள் வேத பாட வகுப்புகள், கருத்தரங்குகள், போதனைகள், பயிற்சிகள், வெளி ஊழியங்கள் என அநேக விதங்களில் செயல்பட்டு வந்தோம். மக்கள் இரட்சிக்கப்படுவதையும் தண்ணீர் ஞானஸ்தானம் பெறுவதையும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சீஷத்துவ வகுப்புகளில் கலந்து கொள்வதையும் பார்த்திருக்கிறோம். இருப்பினும், குறைவான கனிகள் உண்டாவதை கவனித்தோம்.

எங்களுக்கு தெரிந்த அனைத்தையும் நாங்கள் செய்திருந்தபோதிலும் நாங்கள் போதுமான அளவுக்கு செயல்படுகிறோமா என்கிற சந்தேகம் எனக்கு அவ்வப்போது உண்டாகும். ஒரு போதகனுடைய மனைவியாக நான் அந்த அளவிற்கு செயல்படவில்லை என்பதாக உணர்ந்தேன். என்னுடைய குறைகள் நிமித்தமாக பாவ சுபாவத்தினால், எண்ணங்களினால் என்னை நானே குற்றப்படுத்துகிறவளாய் இருந்தேன்.

தேவன் என்னில் பிரியமாக இல்லை என்கிற அச்சம் எனக்கு இருந்தது. எப்போதும் ஏதோ ஒன்று தவறாக நடக்கப்போகிறது என்கிறதான எதிர்பார்ப்போடு நான் வியாகுலமும் மன அழுத்தமும் நிறைந்தவளாய் இருந்தேன்.

சபையில் உண்டான வேலைகள் நிமித்தமாக நான் சரீர பிரகாரமாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் வறண்டு காணப்பட்டேன்.

சிக்காகோ பகுதியில் எங்களுடைய வேலை முடிந்தது என்று தேவன் எங்களுக்கு காண்பித்தபொழுது, நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டோம். எங்களுடைய ஓய்வு நாட்களின் போது, எனக்கு நாள்பட்ட மன அழுத்தத்தினால் உண்டாகும் அட்ரினல் சோர்வு மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் உண்டாயிருப்பதை கண்டறிந்தோம். அதனுடைய அறிகுறிகளில் ஒன்றாக, நான் அதிகப்படியான வேதனையையும் கடுமையான வலியையும் என் சரீரம் முழுவதுமாக அனுபவித்தேன், பயங்கரமான ஒற்றைத் தலைவலியும் மன அழுத்தமும் உண்டாகும். அந்த வேதனை நீங்கும்படியாக நாளொன்றுக்கு சுமார் 12 முதல் 15 மணி நேரங்கள் நான் தூங்கிக்கொண்டே இருப்பேன்.

2015 ஜனவரியில், அனுதினமும் தொலைக்காட்சியில் பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்தேன். ஏனென்றால் என்னுடைய வேதத்தை வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் எனக்கு சத்துவம் இல்லாமல் இருந்தது.

தேவனுடைய கிருபையை குறித்து அவர் பிரசங்கித்ததை கேட்ட போது என் மீது சுகமளிக்கும் தண்ணீர் ஊற்றப்பட்டு கழுவப்படுவது போல் இருந்தது.

இயேசுவை குறித்து அவர் பேசும் பொழுது என் இருதயம் எரிந்து கொண்டிருந்தது.

அதற்கு முன்பாக நான் ஒருபோதும் கேட்டிராத வண்ணமாய் தேவனுடைய அன்பின் இருதயத்தை குறித்து அவர் வெளிப்படுத்தினார். அவருடைய போதனைகள் எல்லாம் பெரும்பாலும் சுவிசேஷத்தை அடிப்படையானதாக இருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் வளர்க்கப்பட்டிருந்தாலும் கிருபையின் சத்தியமானது என்னுடைய ஆவியிலே சத்தியமாக எதிரொலித்தது.

ஒரு நாள் பாஸ்டர் பிரின்ஸ் இளைய குமாரனை குறித்து பிரசங்கிப்பதை கேட்டேன். முரட்டாட்டமுள்ள இளைய குமாரனை தகப்பனார் மன்னித்த போது மூத்த குமாரன் அதற்காக கோபப்பட்டான். ஏனென்றால் அவனது சகோதரன் எந்தவித உழைப்புமின்றி அதை பெற்றுகொண்டான் என்று வலியுறுத்தினார். அந்த நேரத்தில் நான்தான் அந்த மூத்தகுமாரன் என்பதை புரிந்து கொண்டேன்.
நான் தேவன்மீது கோபமாக இருந்தேன். ஊழியத்திற்காக கடினமாக உழைத்தேன். நாங்கள் எதை செய்ய பயிற்றுவிக்கப்பட்டோமோ அதை நானும் என் கணவரும் நேர்த்தியாக சகலத்தையும் செய்தோம். நாங்கள் ஜெபித்தோம். நாங்கள் உபவாசித்தோம். நாங்கள் ஆவியானவருக்கு செவி கொடுத்தோம். நாங்கள் கடினமாக உழைத்தோம். இருப்பினும் சபை வெற்றியுள்ளதாக, ஆரோக்கியமுள்ளதாக, வளர்கிற சபையாக காணப்படவில்லை. அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவன் எங்களை கைவிட்டார் என்று உணர்ந்தேன்.
“பிதாவிடம் இருக்கின்ற சகலமும் வெளிப்படையாக காணப்படாவிட்டாலும் அவை ஏற்கனவே எனக்கு சொந்தமானவை என்பதை புரிந்து கொண்டேன்.”

பிதாவிடம் இருக்கின்ற சகலமும் வெளிப்படையாக காணப்படாவிட்டாலும் அவை ஏற்கனவே எனக்கு சொந்தமானவை என்பதை புரிந்து கொண்டேன்

என்னுடைய சுயநீதியிலிருந்து நான் மனம்திரும்பி, நான் பெற்றுக் கொண்டதாய் நினைத்த காரியத்தை தேவன் தரும்படியாக எதிர்பார்த்தேன். நான் கிருபையை தெரிந்து கொள்ள தீர்மானித்தேன்.

கடந்த சில மாதங்களில் நான் தேவனுடைய கிருபையை குறித்து தியானிக்க, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டான சகல பலன்களை குறித்த மேலான புரிந்து கொள்ளுதலை பெற்றுக் கொண்டேன். தேவன் என்னுடைய சகல பாவங்களையும் மன்னித்து விட்டார் என்றும் அவர் ஒருபோதும் என் மீது கோபமாக இருப்பதில்லை என்பதையும் கற்றுக் கொண்டேன். எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் நன்மையான காரியங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன், அது என்னுடைய கிரியைகளினால் உண்டானது அல்ல, இயேசுவின் மூலமாக உண்டானவை, தேவனுடைய வாக்குத்தத்தங்களும் ஆசீர்வாதங்களும் என் மேல் வந்து அமரும்.

இப்போது என்னுடைய கவனம் என்னுடைய திறமைகள் மீது இல்லாமல் கிறிஸ்து இயேசுவின் மீதும் எனது சார்பாக செய்து முடிக்கப்பட்ட அவருடைய கிரியை மீதும் செலுத்தினேன்.

நான் இப்போது பயம், வருத்தம், மன அழுத்தம், குற்றப்படுத்துதல், ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். இப்போது நான் தொடர்ந்து இளைப்பாறுதலின் நிலையில் இருக்கிறேன். இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நம்பிக்கையையும் அனுபவித்து வருகிறேன். என்னுடைய சரீரத்தை சுகப்படுத்தினார். நான் விரைவாக சுகம் அடைகிறேன் என்று சொல்லி என் மருத்துவர் ஆச்சரியப்பட்டார். இதற்கு காரணம் கிருபையின் செய்தியானது என்னுடைய மனதையும் இருதயத்தையும் சமாதானத்தில் வைத்திருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். சிக்காகோவில் நாங்கள் செய்த ஊழியத்திற்கான கனியை தேவன் பரலோகத்தில் எங்களுக்கு காட்டுவார் என்று நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த இக்கட்டான காலகட்டத்தை தேவன் பயன்படுத்தி என்னை என்னுடைய சுயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்படி செய்து அவருடைய கிருபையை காணும் படியாக செய்தார்.
” ஊழியத்திற்கான எங்களுடைய சொப்பனத்தை தேவன் புதுப்பித்தார்.”
இப்போதும் தேவன் என்னையும் என் கணவரையும் போதக பிதாக்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இளைப்பாறுவதற்கு ஒரு புத்துணர்வு மையத்தை ஆரம்பிக்கும்படி அழைத்திருக்கிறார். எங்களுடைய புத்துணர்வு மையத்திற்கு வருகிறவர்களோடு இந்த கிருபையின் செய்தியை நான் பகிர்ந்து கொள்ள தேவன் என்னை வழிநடத்தினார் என்பதை உணருகிறேன். இவை அனைத்தும் எங்களுடைய எந்த உழைப்புமின்றி ஒன்றுகூடி வருவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். தேவ மனிதர்கள் எங்களுடைய புத்துணர்வு மையத்திற்கான தரிசனத்தை பிடித்துக் கொண்டனர். அவர்கள் எங்களுக்காக ஒரு நிலத்தை வாங்கி தந்து, இப்போது அந்த கட்டிடம் உருவாகும்படியான நன்கொடையை சேகரித்து வருகிறார்கள்.

ஊழியத்திற்கான எங்களுடைய சொப்பனத்தை தேவன் புதுப்பித்தார்.

இப்போதும் தேவன் என்னையும் என் கணவரையும் போதக பிதாக்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இளைப்பாறுவதற்கு ஒரு புத்துணர்வு மையத்தை ஆரம்பிக்கும்படி அழைத்திருக்கிறார். எங்களுடைய புத்துணர்வு மையத்திற்கு வருகிறவர்களோடு இந்த கிருபையின் செய்தியை நான் பகிர்ந்து கொள்ள தேவன் என்னை வழிநடத்தினார் என்பதை உணருகிறேன். இவை அனைத்தும் எங்களுடைய எந்த உழைப்புமின்றி ஒன்றுகூடி வருவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். தேவ மனிதர்கள் எங்களுடைய புத்துணர்வு மையத்திற்கான தரிசனத்தை பிடித்துக் கொண்டனர். அவர்கள் எங்களுக்காக ஒரு நிலத்தை வாங்கி தந்து, இப்போது அந்த கட்டிடம் உருவாகும்படியான நன்கொடையை சேகரித்து வருகிறார்கள்.

கிருபைக்காக நான் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். பாஸ்டர் பிரின்ஸ் தேவனுக்கு கீழ்ப்படிந்து கிருபையை குறித்து போதிப்பதற்காக, பிரசங்கிப்பதற்காக உங்களுக்கு நன்றி. பிதாவின் இருதயத்தை அறிந்து கொள்ள நீங்கள் எனக்கு உதவியிருக்கிறீர்கள். நான் அவருடைய அன்பிலும் கிருபையிலும் இளைப்பாறுகிறேன். இப்போது தேவனுக்காக நான் செய்கின்ற ஒவ்வொன்றும் அவர் மீது இருக்கிற அன்பின் நிமித்தம் செய்கிறதாய் காணப்படுகிறது.

பயமின்றி அவருடைய சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை கட்டவும் தேவன் தாமே உங்களை தொடர்ந்து பெலப்படுத்துவாராக.

இதை எழுதியவர்கள் தங்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை
மினிசோட்டா, யுனைடெட் ஸ்டில்ஸ்

இதுபோல இன்னும் பல

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...

1 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details

தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்

என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...

2 நிமிட வாசிப்பு
View details

அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்