தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பாக 20 வயதான என்னுடைய மகள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள், எங்கள் குடும்பத்தோடு தொடர்பு கொள்ளுவதை நிறுத்திவிட்டாள், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, மரபுகளை விட்டு, செய்ய தகாத பழக்கங்களில் ஈடுபட்டாள். அவள் வியாகுலத்தினாலும் வேதனையின் தாக்குதலினாலும் மிகவும் பாதிக்கப்பட்டாள். அவளை அப்படி பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது, ஏனென்றால் உங்களுக்கு அவளைத் தெரிந்திருந்தால் அவள் எவ்வளவு இனிமையானவள், இப்படிப்பட்ட அழகான மகள் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

என்னுடைய இளைய மகளும் பள்ளியில் பல்வேறு காரியங்களை கடந்து வந்ததில் முழுவதும் மோசமாக நடந்து கொள்ளவும், தொடர்ந்து பொய் சொல்லவும், இங்கும் அங்கும் அலைந்து திரியவும், காயப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபடவும் ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் தேவனுக்கடுத்த காரியங்களில் தொடர்பு இல்லாதவர்களாக தங்களையும் தங்கள் குடும்பத்தையும் ஆபத்தில் இழுத்துக் கொண்டு இருந்தார்கள். அது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. நான் அவர்கள் இருவரையும் நேசித்தேன். அவர்களுக்கு சிறந்ததை தர விரும்பினேன். அவர்கள் தொடர்ந்து காயமின்றி வேதனையின்றி விடுதலையில் வாழ விரும்பினேன். அவர்களுடனான எனது உறவு மிகவும் பாதிக்கப்பட்டு மறுபடியும் இணையக்கூடாதபடி உடைந்து போனது போல காணப்பட்டது.

ஒரு சில முறைகள் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் ஊழியத்திற்கு கடிதம் எழுதி என்னுடைய மகள்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். நான் அவர்களுக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பும் சுகமும் மீட்கப்படுதலும் விடுதலையும் உண்டாகும்படி ஜெபித்துக் கொண்டிருந்தேன். அவர்களுடைய இப்படிப்பட்ட சுபாவத்தின் மத்தியிலும் அவர்கள் தங்களை குறித்து என்ன யோசித்து கொண்டு இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாய் இருக்கிறார்கள், மீட்கப்பட்டவர்களாய், மன்னிக்கப்பட்டவர்களாய், சுத்திகரிக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்று நான் விசுவாசித்தேன். அவர்கள் மீது இயேசுவின் இரத்தத்தை நான் பிரகடனம்பண்ணி அவர்களுடைய இருதயம் தேவன் பக்கமாகவும், அவர்கள் குடும்பத்தின் பக்கமாகவும் திரும்பும் என்று அறிக்கை செய்து கொண்டு இருந்தேன்.

கர்த்தர் என் ஜெபங்களை கேட்டு என் உறவுகளை மீட்டுக் கொடுத்திருக்கிறார். இப்போது எனது மகள்களும் நானும் முன்பு ஒருபோதும் இல்லாத வண்ணம் சிறந்த உறவில் காணப்படுகிறோம். நாங்கள் நேர்மையாக உரையாடுகிறோம், ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவின் அன்பில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய இந்த உறவுகள் மீட்கப்பட்டதற்கான ஒரே காரணம் தேவனுடைய கிருபை என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

இந்தப் பகுதியில் நான் இன்னும் தேவனுடைய அதிகப்படியான தயவை பெற்றுக் கொள்ளும்படி தேவனை விசுவாசிக்கிறேன், எங்களுடைய உறவில் எங்களுக்குள்ளும், எங்களை தொடர்பு கொள்ளுகிற எல்லாருக்கும் அதிகப்படியான ஆசீர்வாதங்கள் உண்டாயிருக்கும்படி தொடர்ந்து பிரகடனம் பண்ணுகிறேன்.

பாஸ்டர் பிரின்ஸ், அன்பும் தேவனுடைய அழகான கிருபையும் நிறைந்த உங்களுடைய அருமையான ஊழியத்திற்காய் உங்களுக்கு நன்றி.

பெயர் குறிப்பிடவில்லை
ஜார்ஜியா
யுனைட்டட் ஸ்டேட்ஸ்

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

அபிஷேக எண்ணெயை பூசின பிறகு புயலிலிருந்து வீடு பாதுகாக்கப்பட்டது

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் எங்களுடைய பட்டணத்தில் 30 ஆண்டுகளாக கண்டிராத மோசமான புயல் உ...

1 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

வலுவான தொழிற்சாலை காத்தாடியிலிருந்து அதிக காயங்களின்றி பாதுகாக்கப்படுதல்

சங்கீதம் 91 பற்றிய பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் செய்தியை கேட்டதிலிருந்து தேவனுடைய பாதுகாப்பை தத்ரூபமாக...

1 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்