வலுவான தொழிற்சாலை காத்தாடியிலிருந்து அதிக காயங்களின்றி பாதுகாக்கப்படுதல்
வலுவான தொழிற்சாலை காத்தாடியிலிருந்து அதிக காயங்களின்றி பாதுகாக்கப்படுதல்
இதன் மூலம் பகிர்ந்திட
சங்கீதம் 91 பற்றிய பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் செய்தியை கேட்டதிலிருந்து தேவனுடைய பாதுகாப்பை தத்ரூபமாக நான் அனுபவிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் என் அடைக்கலமும் கோட்டையுமாய் இருக்கிறார் என்பதை அறிக்கை செய்துகொண்டு இருந்தேன். நான் அவருடைய செட்டைகளின் கீழ் பாதுகாப்பாய் இருக்கிறேன் என்பதை பிரகடனம் பண்ணினேன்.
அந்த நாட்களில் நான் ஒரு பட்டறை கூடத்தின் சுகாதாரப் பணிகளின் மேற் பார்வையாளனாக நியமிக்கப்பட்டிருந்தேன். என்னுடைய ஊழியர்களும் நானும் இரண்டு மாடி உயரத்திற்கு இருந்த மேற்கூரையிலிருந்து காத்தாடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ஒருவரும் அந்த கட்டிடத்தின் நடுப்பகுதியின் மேற்கூரையில் தொங்கிக் கொண்டிருந்த காற்றாடியை கீழே இறக்குவதற்கு முன் வரவில்லை ஏனென்றால் அதற்கு சுற்றிலும் எங்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லாமல் இருந்தது.
அன்று காலையிலே பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய தேவ பாதுகாப்பின் பிரசங்கத்தை கேட்ட நான், அந்த காத்தாடியை கீழே இறக்குவதற்கு முட்டாள்தனமாக முன் வந்தேன். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நான் ஏணியில் ஏறி அந்த காத்தாடியின் அடி பகுதியில் நான்கு புறங்களில் உள்ள திருகாணிகளை கழற்றினேன். அதை கீழே இறக்குவதற்கு முன்பு சற்று உயர்த்தி பிடிக்க நான் திட்டமிட்டிருந்தேன்.
அந்த ஆணிகளை நான் கழற்றிக் கொண்டிருக்கும் பொழுது அந்த ஆணி சட்டென பிடுங்கப்பட 15 கிலோ எடையுள்ள தொழிற்சாலை காற்றாடி என்மேல் விழுந்தது. இமைப்பொழுது நான் அந்த காற்றாடியோடு கீழே விழுந்தேன். ஏதோ ஒன்று என்னை ஏணியிலிருந்து பின்னுக்கு தள்ளியது போல நான் உணர்ந்தேன்.
கீழே இருந்த என் ஊழியர்கள் சத்தமிட்டு கொண்டிருந்தார்கள், என் மனதில் சங்கீதம் 91:12 தொனித்துக் கொண்டிருந்தது, “உன் பாதம் கல்லில் இடராதபடிக்கு அவர்கள் உன்னை தங்கள் கைகளில் ஏந்தி கொண்டு போவார்கள்.”
எந்தவித பாதுகாப்பு கவசங்களுமின்றி எந்த உதவியுமின்றி வலுவான காத்தாடி என் மேல் விழுந்திருக்க என்னை பத்திரமாக வெளியே இழுப்பது சற்று அசாத்தியமானதாய் காணப்பட்டது. என்னுடைய கர்த்தராகிய இயேசு என்னை காக்கும்படி தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
என்னுடைய வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நான் தேவ பாதுகாப்பையும் தயவையும் அனுபவித்து இருக்கிறேன். நான் தேவனுடைய கிருபையை ஞானத்தை தயவை சார்ந்து கொள்ளும்பொழுது வேலையும் எனக்கு சற்று அழுத்தம் இல்லாததாக காணப்படுகிறது. சகலமும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது எனக்கு எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அளிக்கிறது. அதற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
நான் எங்கு சென்றாலும் தேவனுடைய பிரசன்னத்தில் திடநம்பிக்கையோடு தைரியமாய் இருக்கும்படி எனக்கு போதித்ததற்காக உங்களுக்கு எனது நன்றி பாஸ்டர் பிரின்ஸ். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
பெயர் தெரியவில்லை
சிங்கப்பூர்
இதுபோல இன்னும் பல
அபிஷேக எண்ணெயை பூசின பிறகு புயலிலிருந்து வீடு பாதுகாக்கப்பட்டது
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் எங்களுடைய பட்டணத்தில் 30 ஆண்டுகளாக கண்டிராத மோசமான புயல் உ...
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...