மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
இதன் மூலம் பகிர்ந்திட
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திரும்பவும் அந்த புத்தகத்தை என் கையில் எடுத்தேன். நான் எந்த பகுதியில் நிறுத்தினேனோ அங்கிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். அங்கு பாஸ்டர் பிரின்ஸ் தாவீது எப்படி கோலியத்தை வீழ்த்தினான் என்பதை குறித்து எழுதி இருந்தார்.
அந்த சமயத்தில், நான் என்னுடைய மகனுக்கு அவனுடைய தேர்வுக்கு ஆயத்தம் செய்ய உதவிக் கொண்டிருந்தேன். அந்த அத்தியாயம் தேவன் என்னோடு பேசுவதுபோல இருந்தது. அதுவரைக்கும் என்னுடைய மகனுக்கு கணக்கு பாடம் கடினமானதாக இருந்தது, அவன் அதில் சிறப்பற்றவனாகவும் இருந்து வந்தான். சொல்லப்போனால் இரண்டு நாட்கள் கழித்து வருகின்ற கணித பரிட்சையில் அவனுக்கு தன்மீது சற்றேனும் நம்பிக்கை இல்லாத நிலையில் இருந்தான்.
அந்த அத்தியாயத்தை வாசித்த பிறகு என் மகன் தாவீதைப் போல இருப்பதையும் அவனது கணக்குப் பாடம் அவனுக்கு கோலியாத்தை போல இருப்பதையும் நான் உணர்ந்தேன். கர்த்தருடைய சேனை தன் பக்கம் இருக்கிறது என்பதை ஒருவேளை என்னுடைய மகன் அறிக்கை செய்தால் அவனால் அவனது கோலியாத்தை மேற்கொள்ள முடியும் என்று நான் நம்பினேன்.
அன்று இரவு நான் பரவசத்தோடு இருந்தேன். இது என்னுடைய மகனுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று தேவன் எனக்கு சொல்லுவதாக நான் உணர்ந்தேன். பின்னிட்டு பார்க்க இடமில்லை, வருகின்ற நாட்களில் அவன் மேலான வெற்றியை அனுபவிப்பான் என்று நம்பினேன்.
அடுத்த நாள் நான் அதிகாலமே எழுந்து பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய அனுதின தியான புத்தகத்தை வாசித்தேன். அன்றைக்கு தியான பகுதியில் தாவீது கோலியாத்தை வீழ்த்துகின்ற மற்றொரு கண்ணோட்டம் சொல்லப்பட்டிருந்தது. இது தற்செயலாய் நடந்தது அல்ல என்பதை உடனடியாக அறிந்து கொண்டேன். என் மகனோடுகூட தேவன் இருக்கிறார் என்பதையும் அதனால் அவன் இந்த தேர்வை சிறப்பாக எழுதுவான் என்பதையும் நான் நம்பினேன்.
என்னுடைய மகனின் தேர்வுக்கு முந்தின இரவு, நான் வாசித்த தியான பகுதியை அவனோடு பகிர்ந்து கொண்டு அவன் பயப்படாமல் இருக்கும்படி அவனுக்கு சொல்லி, ஏதேனும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் அவனுக்கு பிரச்சனை இருந்தால் தேவனை நோக்கி பார்க்கும்படி அவனை உற்சாகப்படுத்தினேன்.
மறுநாள் அவனுடைய தேர்வு முடிந்த பிறகு, என் மகன் எப்படி உணருகிறான் என்பதை என்னிடத்தில் அவன் சொல்லவில்லை. ஆனால் பரீட்சையின் நேரத்தில் தத்தளித்து நின்ற நிலையில் அவன் தேவனை நோக்கி உதவும்படி கேட்டதாக மட்டும் என்னிடம் கூறினான்.
பரீட்சை முடிவுகள் வந்தபொழுது நான்கு பாடங்களில் என்னுடைய மகன் அவனுடைய கோலியாத்தாக இருந்த கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இயேசுவுக்கே சகல மகிமையும் உண்டாவதாக!
என் மகன் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. கர்த்தராகிய இயேசு நல்ல தேவன். அவர் என்னுடைய மகனின் மோசமான பாடத்தை அவனது சிறந்த பாடமாக மாற்றிவிட்டார்.
இப்போது என் மகன் கணிதத்தில் நான் சிறப்பானவன் அல்ல, எனக்கு வராது என்று சொல்லுவதை நான் கேட்பதே இல்லை. உண்மையில் அவனைப் பொருத்தவரைக்கும் எந்தெந்த கேள்விகளுக்கெல்லாம் தேவனிடம் உதவியை கேட்டானோ அவை அனைத்தும் சரியாகவே இருந்திருக்கிறது. நிச்சயமாகவே, நம்முடைய கர்த்தராகிய இயேசு நாம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறார், மேலும் இயேசு எப்படி இருக்கிறாரோ அப்படியே என்னுடைய மகனும் இருக்கிறான். தேவனோடுகூட என் மகன் நிச்சயமாகவே வெற்றியுள்ளவனாக காணப்படுகிறான்.
தங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
இதுபோல இன்னும் பல
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...
கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்
விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...
திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது
எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை
பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்
நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...
தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்
என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்
என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...