வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

2 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு போய் காணப்பட்டது. நான் வேதத்தை வாசிப்பேன், ஆனால் அதிலிருந்து ஒன்றையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியாது. இதின் நிமித்தம் நான் குற்ற உணர்வை அடைந்தவளாக நெடுநாட்களாய் வேதத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டேன்.

அந்த காலகட்டத்தில் நான் உங்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன், அதனால் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டேன். என்னுடைய கிறிஸ்துவ வாழ்க்கை அதிக அர்த்தமுள்ளதாய் காணப்பட்டது, அதனால் நான் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு அதிக சந்தோஷமுடையவளாய் இருந்தேன். ஒருநாள் உங்களுடைய பிரசங்கங்களில் எதை பார்க்கலாம் என்று நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி என்கிறதான தலைப்பிலான பிரசங்கத்தை பார்க்கும்படி உணர்த்தினார்.

நான் அதை பார்க்க ஆரம்பித்த போது நீங்கள், ‘அநேகர் தங்களுக்கு வசனங்களில் எந்த ஒரு வெளிப்பாடும் வரவில்லையே மற்றவர்கள் அநேக வெளிப்பாடுகளால் நிரப்பப்படுகிறார்களே என்று அதிக கரிசனையோடு இருக்கிறீர்கள்’ இந்த செய்தி உங்களுக்கானது என்று சொன்னது என் இருதயத்தை தொட்டது. நீங்கள் என்னுடைய இருதயத்தை இழுத்துக் கொண்டீர்கள் எனவே தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

நீங்கள் ரூத்தின் சம்பவத்தை மிக அழகாக அவள் எப்படி அதிகம் அறியாதவளாய் புது விசுவாசியாய் இருந்தாள் என்பதை விளக்கமாய் கூறினீர்கள், அவள் வயல்வெளியிலே போவாசை சந்திக்கும்படியாக போகிறாள். போவாஸ் தேவனுக்கு அடையாளமாய் இருக்கிறார், வயல் நிலம் அவருடைய வார்த்தைக்கு அடையாளமாய் இருக்கிறது. வயல் நிலத்தில் அறுக்கிறவர்கள் தேவ வார்த்தையினுடைய போதனையாளர்களாய் இருக்கிறார்கள் என்றீர்கள்.

நான்தான் ரூத் என்பதையும் இயேசுவை வசனங்களில் சந்திக்க விரும்புகிறவள் என்பதையும் புரிந்து கொண்டேன். அதற்கான திறவுகோல் தேவ ஊழியர்களுடைய போதனைகளை சேகரித்துக்கொள்ளுதல். நான் உங்களுடைய தேவனுடைய கிருபை, அவருடைய அன்பு, அவருடைய நீதி என்பது போன்ற செய்திகளை சேகரித்துக்கொண்டேன். இவை அனைத்தையும் நான் பற்றி கொண்டதினால் என்னுடைய இருதயம் சொல்லிமுடியாத சந்தோஷத்தினால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் இயேசுவை உணர்கிறேன்.

அன்றிலிருந்து எனக்கு அநேகம் காரியங்கள் சம்பவித்திருக்கிறது. அடிமைத்தனங்கள் முறிக்கப்பட்டன, நான் தேவனுடைய இளைப்பாறுதலில் ஜெயத்தில் நடக்க ஆரம்பித்தேன். நான் பெற்றுக் கொண்ட சில வெளிப்பாடுகளை அப்பியாசப்படுத்தும் பொழுது அற்புதங்கள் நடக்கிறதை கண்டேன். மிக முக்கியமாக அன்றிலிருந்து வெளிப்பாடுகளின் பெருவெள்ளம் புரண்டு போய்க் கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் உறக்கத்திலும் நான் வெளிப்பாடுகளை பெற்றுக் கொள்ளுகிறேன். என் வேதத்தோடு நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் எனக்குள்ளாய் இருக்கின்ற சந்தோஷத்தையும் சமாதானத்தையும் என்னால் விளக்கி சொல்ல முடியாது.

வாவ்! என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்புமுனை உண்டாகும் என்று நான் யோசித்ததே இல்லை. இதற்கு எந்த உளைப்புமில்லை. தேவனுக்கே ஸ்தோத்திரம். நான் உங்களுக்காகவும் கர்த்தருடைய வார்த்தையை உங்கள் முலமாய் பெற்றுக்கொள்ள என்னுடைய இருதயத்தை திறக்க செய்ததற்காகவும் இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன்.

நான் இன்னும் சந்தோஷத்தோடு சேகரித்துக் கொள்ளுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கே சகல மகிமையும் உண்டாவதாக.

மோனிஷா மிஸ்ரா
இந்தியா

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்