கிருபையின் விதத்தை நம்பிடுங்கள்
கிருபையின் விதத்தை நம்பிடுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
விசுவாசமா நற்கிரியைகளா எது முதலில் வருகிறது? அப்போஸ்தலனாகிய பவுல் மற்றும் யாக்கோபு வேதாகமத்தில் எழுதியிருக்கிற காரியங்களை முன்வைத்து இதற்கான பதிலை வெளிப்படுத்துகிற விதமான இந்த செய்தியில் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களோடு இணைந்திடுங்கள். “”கிரியை செய்கிற விசுவாசம்”” என்றால் என்ன என்பதை குறித்தும் தேவனுடைய கிருபை எப்படி உங்கள் வாழ்க்கையில் என்றென்றைக்குமான மறுரூபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் விளக்கி கூறுகிறார். சிலுவையானது எப்படி உங்களுக்கு நீதிக்கான நிலையான அஸ்திபாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்பதையும் நியாயத்தீர்ப்புக்கு தேவையான அனைத்தும் கல்வாரியிலே நிறைவேற்றப்பட்டது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். ஏன் நீங்கள் கிருபையின் விதத்தை முழுமையாக நம்ப முடியும் என்பதை அறிந்துகொண்டு தேவனுக்கு முன்பாக எந்த பிரயாசமுமின்றி நீங்கள் இளைப்பாறுதலோடு கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட கிரிகைகளை சார்ந்து நிற்க முடியும் என்பதையும் அறிந்து உற்சாகப்படுங்கள்
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த பிரசங்கமானது தேவனுடைய கிருபையை நம்பிடுங்கள் என்று செப்டம்பர் 14 2025ல் ஜோசப் பிரின்ஸ் அவர்கள் பிரசங்கித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.




































