தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க
தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க
இதன் மூலம் பகிர்ந்திட
உங்க ஜெபங்களுக்கு பதில் வரனும்னா தேவன் விரும்புற அளவுக்கு நீங்க தகுதியானவர் இல்லங்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கா? இல்லனா “சரியா” எப்படி ஜெபிப்பதுனு தெரியலயேன்னு உணர்ந்திருக்கிங்களா? தேவன் உங்க ஜெபத்திற்கு பதிலளிப்பதற்கு முன், நீங்க பரிபூரணமாகவும் மிகச் சிறந்த சொற்கள பேசுபவராகவும் இருக்கனும்ங்கிற தவறான எண்ணத்த தேவனுடைய வார்த்தையின் மூலம் தகர்த்தெறிங்க. பழைய ஏற்பாட்டுல இருக்க பிரதான ஆசாரியர பற்றி ஜோசப் பிரின்ஸ் விளக்கும்போது, பின்வருவத நீங்க எப்படி மேற்கொள்ளலாம்னு தெரிந்து கொள்வீங்க:
• பயம், குற்ற உணர்வு போன்ற தடைகள் ஏதுமில்லாம, தேவனிடம் தைரியமா வருவது.
• கிறிஸ்துவுக்குள் உங்க அடையாளத்த உறுதியா உணரும்போது, உங்க இருதயத்திலிருந்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஜெபிப்பது.
• “இயேசுவின் நாமத்தில்” ஜெபிக்கிறதோட உண்மையான அர்த்தத்த புரிந்துகொண்டு, அதன் பலன்கள அனுபவிப்பது.
அன்பானவர்களே, முழு நம்பிக்கையோட தேவனுடைய பிரசன்னத்திற்குள் அடியெடுத்து வைங்க; உங்க ஜெபங்கள் பரலோக சிங்காசனத்த போய் சேருது என்பத அறிந்து, தைரியமான ஜெபங்கள செய்யத் தொடங்குங்க!
இன்றைய நிகழ்ச்சியை பற்றி
நவம்பர் 18, 2018 அன்று ஜோசப் பிரின்ஸ் பேசிய “தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க” (Dare To Pray Bold Prayers) என்ற பிரசங்கத்த நீங்க பார்க்கறீங்க.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு


























