தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
இதன் மூலம் பகிர்ந்திட
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகும் எனக்கு எந்தவித வருமானமும் இல்லை. வாராந்திர விற்பனை கூட்டங்கள் எனக்கு மிகவும் மன அழுத்தத்தை தந்தது, எனவே நான் நம்பிக்கையற்றவனாய் ஏமாற்றம் நிறைந்தவனாய் காணப்பட்டேன்.
நான் காலையில் எழும்பும்போது தேவனை குற்றப்படுத்தினேன். எதுவும் நடக்கவில்லை என்றால் நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவேன் என்று அவரிடம் சொன்னேன். நான் ஜெபித்தேன், காத்திருந்தேன், நம்பிக்கையோடு இருந்தேன், இருப்பினும் மீண்டும் மீண்டுமாக ஏமாற்றத்தையே சந்தித்தேன். இந்த கடுமையான சுழற்சியானது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க நான் வெற்றியுள்ள விற்பனையாளராக இருப்பேன் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து விட்டேன்.
நான் தொடர்ந்து காத்திருந்தபோதிலும், நான் ஜெபிக்கவும் விடாமுயற்சியோடு இருக்கவும் கற்றுக் கொண்டேன். தேவனுடைய கிருபையினாலே விற்பனையாளராக எனக்குள் இருந்த சிறு சிறு தோல்விகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். சந்தை வெளி பற்றியும் நான் எங்கே முன்னேற வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
நான் ஜோசப் பிரின்ஸ் ஊழியங்களுக்கு எனது ஜெப விண்ணப்பத்தை அனுப்பி தேவனுக்காக காத்திருந்தேன். இந்த காலகட்டத்தில் நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அதிக இளைப்பாறுதலோடு இருந்தேன். தேவன் என் மூலமாக கிரியை செய்ய அனுமதித்தேன், அவர் எனக்கு தமது ஞானத்தை அருளி என் கையின் கிரியைகளை ஆசீர்வதிக்கிறார் என்கிற விசுவாசத்தோடு இருந்தேன்.
அதுமட்டுமல்ல, விரக்தியான உணர்வோடு வேலை செய்வதை நிறுத்திவிட்டேன். யுத்தம் அவருடையது என்பதையும் என்னுடைய சொந்த கைகளால் நான் மிகப்பெரிய பட்டயத்தை கொண்டு போராடினாலும் அதில் பிரயோஜனம் இல்லை என்பதையும் நம்பினேன். 100% நான் தேவனை சார்ந்து கொண்டேன். ஏனென்றால் அவர் மூலமாக மட்டுமே ஜெயம் நிச்சயமாய் வரும்.
வெகுவிரைவில் இரண்டு வாரங்களுக்குள்ளாக நான் இரண்டு மடங்காக விற்பனையை முடித்தேன். அது அந்த மாதத்திற்கான என்னுடைய இலக்கின் 50 சதவீதத்தை அடையும்படி செய்தது.
இவற்றில் நான் கற்றுக்கொண்ட மேலான பாடம் என்னவென்றால் தேவன் மாத்திரமே வெற்றியைத் தர முடியும். நம்முடைய சொந்த பலத்தினாலே நாம் எதையும் கட்டாயப்படுத்தி அடையும்படி செயல்பட முடியாது. மாறாக நாம் இளைப்பாறுதலோடு சந்தோஷமான இருதயத்தோடு அமர்ந்திருந்து வெற்றியை காண முடியும். ஏனென்றால் தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். தேவன் நாம் நம்முடைய சுயபுத்தியின்மேல் சாயாமல் முழு இருதயத்தோடும் அவரை நம்பும்படியாக விரும்புகிறார்.
இப்போது நான் வேலைக்கு செல்வதற்கு முன்பாக ஒவ்வொரு காலையிலும் தேவனோடு பேசுகிறேன். மேலும் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய அனுதின தியானத்தை ஒவ்வொரு மணி நேரமும் வாசித்து சமாதானத்தையும், என்னை நானே தேவனுடைய கிருபையின் மையத்தில் வைத்துக்கொள்வதையும் பார்த்துக் கொள்கிறேன். அவை என்னுடைய அன்றாட வாழ்வில் சமாதானத்தோடும் சிறப்பாற்றலோடும் இருக்க உதவுகிறது.
பாஸ்டர் பிரின்ஸ், தேவனுடைய கிருபையை பற்றிய உங்களுடைய செய்திக்காக நன்றி. 2013 நீங்கள் பிரசங்கித்ததை கேட்டதிலிருந்து என்னுடைய வாழ்க்கை முற்றிலுமாக அற்புதமாக மாற்றமடைந்து இருக்கிறது. எனக்காக ஜெபித்த உங்களுடைய குழுவினருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜோஸ்பின் குயின்
வியட்நாம்
இதுபோல இன்னும் பல
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்
என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...