திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
இதன் மூலம் பகிர்ந்திட
நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒரு அலர்ஜியை ஏற்படுத்தி நிமோனியா அல்லது அங்குள்ள ரத்த நாளங்களில் நோய் தொற்றை உண்டாக்கும் ஒரு விதமான பாக்டீரியா) அதனால் தாங்க முடியாத வேதனை என் தலையிலும் கரங்களிலும் கால்களிலும் உண்டானது.
இரண்டு வருடங்களுக்குள்ளாக 14 முறை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றேன், எனக்கு அதிகப்படியான ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் அதிக அளவிலான மருந்துகள் கொடுக்கப்பட்டது. கொஞ்ச நேரத்திற்கு காய்ச்சல் இல்லாமல் இருந்தாலும் வேதனை வலி நீங்காது. அதன் பின்பு எனக்கு மார்ஃபைன் கொடுப்பார்கள், ஏனென்றால் வேற எந்த வலி மாத்திரைகளும் எனக்கு உதவாது. இரண்டு வருட சிகிச்சைக்கு பிறகும் எந்த பலனும் இல்லை, மருத்துவர்கள் இதற்கு மேல் எனக்கு எந்த உதவியும் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். நான் நம்பிக்கையை இழந்து போனேன்.
அந்த நேரத்தில் இந்த வியாதியினால் தேவன் எனக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறார் அல்லது இது நான் செய்த பாவங்களுக்கான விளைவாக இருக்கிறது என்று எனக்கு போதிக்கப்பட்டது.
பல வருடங்களாக, எனது மார்ஃபைன் மருந்தின் அளவு உச்ச நிலையை அடையும் வரை அதிகரித்துக் கொண்டே இருந்தது. நான் அந்த மார்ஃபைன் மருந்திற்கு அடிமையானேன். என்னால் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. எட்டு வருடங்களுக்கு முன்பு, நான் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டேன், 14 நாட்களுக்குள்ளாக அதை நிறுத்துவதினால் ஏற்பட்ட அறிகுறிகள் மிகவும் பயங்கரமாய் இருந்தபடியினால் அதை நிறுத்தினார்கள். மருத்துவர்கள் மார்ஃபைன் என்பது ஒரு சிந்தடிக் மாத்திரையாக இருப்பதினால் அதை நிறுத்தும்போது ஏற்படுகிறதான அறிகுறிகள் அனைத்தும் அதை உட்கொள்ளும் போது இருக்கிறதான வேதனையை விட அதிக வேதனையாய் இருக்கும் என்பதை எனக்கு விளக்கி கூறினார்கள்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு, எங்களுடைய சபைக்கு ஒருவர் வந்து தொலைக்காட்சியில் ஜோசப் பிரின்ஸ் என்கிறதான ஒரு பிரசிங்கி யார் பிரசங்கிப்பதை குறித்து எங்களுக்கு கூறினார். ஆர்வமாக இருந்தாலும், நான் எச்சரிப்போடும் சந்தேகத்தோடும் பாஸ்டர் பிரிண்ட்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை இரகசியமாக பார்க்க ஆரம்பித்தேன்.
எவ்வளவு அதிகமாய் அவருடைய பிரசங்கங்களை பார்த்தேனோ அவ்வளவு அதிகமாய் எனக்குள் விடுதலையையும் நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டேன். இறுதியாக, தேவனுடைய கிருபை எனது கிறிஸ்தவ வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றினது. கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை என்பதை கற்றுக் கொள்வது எனக்கு மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது
அன்று முதல் நான் நாள் ஒன்றுக்கு பாஸ்டர் பிரன்ஸ் அவர்களுடைய செய்திகளை இரண்டு முறை கேட்பேன். தொடர்ந்து கர்த்தருடைய பந்தியை அனுசரித்து வந்தேன். அவருடைய தழும்புகளால் நான் ஏற்கனவே குணமாகியிருக்கிறேன் என்பதை விசுவாசித்தேன். நான் கிறிஸ்துவுக்குள் அனுதினமும் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன் என்பதையும் தொடர்ந்து அறிக்கை செய்து வந்தேன்.
கடந்த வருடத்திலிருந்து, கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு, நான் மார்ஃபைன் மாத்திரையின் அடிமைத்தனத்திலிருந்தும் வலியிலிருந்தும் முற்றிலுமாய் விடுதலையாக்கப்பட்டிருக்கிறேன். இதில் எந்த உழைப்பும் இல்லை, இதனால் எனக்கு எந்தவித அறிகுறிகளும் ஏற்படவும் இல்லை.
எல்ஜி
ஜெர்மனி
இதுபோல இன்னும் பல
சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்
எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....
முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது
சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...
தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது
என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...
மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்
நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...
அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன
2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்
என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...
தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது
எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...