வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒரு தேசிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் இருந்த என் வேலையை விட்டு, என் சொந்த ஊரான அராட் நகரத்திற்கு திரும்பி வந்தேன்.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நான் நேசித்த பெண்ணுடன் ஒப்புரவானேன். ஆனால் அதற்கு முன்பு நான் ஆறு மாதத்திற்கு மேல் வேலை இல்லாமல் இருந்தேன். அராட் நகரில் மூன்று தொலைக்காட்சி நிலையங்கள் இருந்தாலும், என்னுடைய துறையில் ஒரு வேலை கிடைப்பது சாத்தியமில்லை. அதனால் நான் மீண்டும் புக்கரெஸ்ட் நகரில் இருந்த என் பழைய வேலைக்குச் செல்ல விரும்பினேன்.

அப்போது, பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் மீட்பின் ஆண்டு என்ற செய்தியை கேட்டேன். 2015 ஆம் ஆண்டில் தேவன் என் வேலையை மீட்டுத்தருவார் என்று நம்ப ஆரம்பித்தேன். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில், அந்த தொலைக்காட்சி நிலையத்தில் மூன்று வேலை வாய்ப்புகள் திறக்கப்படலாம் என்று கேள்விப்பட்டேன். பரிசுத்த ஆவியானவர் என்னை பெட்டியை தயார்படுத்த உந்துதல் அளித்தும் நான் அவர் சத்தத்தை நிராகரித்தேன்.

ஒரு வாரம் கழித்து, என் முன்னாள் முதலாளியை தொடர்பு கொண்டு எனது வேலை வாய்ப்பு குறித்து கேட்டேன், ஆனால் அவர் அதிக நம்பிக்கையுடன் பேசவில்லை. சூழ்நிலைகள் நல்லதாக தெரியாதபோதும், தேவன் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் பிடித்துக் கொண்டேன். மீண்டும் அந்த வேலை எனக்குக் கிடைக்கும் என்று என் உள்ளத்தில் ஒரு உறுதி இருந்தது.

அடுத்த நாள், வேலை வாய்ப்பு குறித்த தகவலுடன் என் முன்னாள் முதலாளி என்னை அழைத்தார். நான் மகிழ்ச்சியால் பூரித்துப் போனேன்! தேவன் அழுத்தமான இடமாக இருந்த என் வேலை ஸ்தலத்தை சமாதானத்துடன் நான் வேலை செய்யக்கூடிய இடமாக மாற்றினார். முன்பைவிட மிகச் சிறப்பாக உள்ளது!

வேலையில் தேவனின் மீட்பை அனுபவித்ததற்கு மேலாக, நான் நேசித்த பெண்ணும் நானும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் மிக அழகாக நடந்தது. எங்களது முதல் காரையும் வாங்கினோம். இப்போது, எங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டைத் தரும்படி எங்கள் அன்பான பிதாவாகிய தேவனை நம்பி காத்திருக்கிறோம். அது 2016 ஆம் ஆண்டில் நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்புகிறேன்!

தேவனின் கிருபையைப் பற்றிய உங்கள் செய்திகளுக்காக நன்றி, பாஸ்டர் பிரின்ஸ். நீங்களும், உங்கள் குடும்பமும், உங்கள் சபையும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக!

பெயர் குறிப்பிடவில்லை
ரோமானியா

இதுபோல இன்னும் பல

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்

எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...

2 நிமிட வாசிப்பு
View details

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது

நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....

2 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்

என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்