பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
இதன் மூலம் பகிர்ந்திட
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட்டேன் -பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், விளையாட்டுகளில், வேலை ஸ்தலத்திலும் கடைசி நபராக இருப்பேன். எந்த ஒரு காரியத்திலும் நான் வெற்றியை அனுபவித்ததே இல்லை. எனவே வாழ்க்கையில் எனக்கு வெற்றி இல்லை என்றே எண்ணினேன்.
2005ல், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, பணிநீக்கம் செய்யப்பட்டேன். என் மனைவியும் நானும் எங்கள் சொந்த ஊரான கேப் டவுன் செல்லும்படியாக தீர்மானித்தோம். 2006ல், தொழில் அதிபராக இருக்கின்ற என்னுடைய மூத்த சகோதரன் அவருடைய நிறுவனத்தில் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தார். அது வருகிறவர்களுக்கு இருப்பிட வசதி செய்து தரும் நிறுவனமாகும். அந்த நாட்களில், அந்த நிறுவனத்தின் பொருளாதார நிலை தோல்வி அடைந்திருக்க அதனை எப்படி வெற்றியுள்ள நிலைக்கு நடத்திச் செல்வது என்று ஒன்றும் புரியவில்லை.
ஒரு நாள் கர்த்தர் என்னிடத்தில் பேசினார், இது நான் உனக்கு கொடுத்திருக்கிற உன்னுடைய தொழில். நீ என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய முற்படு. நான் உன்னை வழிநடத்துவேன் என்றார். எனவே நான் தொடர்ந்து என்ன செய்தால் நிறுவனத்தின் வெற்றிக்கு சரியாக இருக்குமோ அதை செய்யும்படியாக முற்பட்டேன்.
நிச்சயமாகவே கர்த்தர் உண்மையுள்ளவராய் இருந்து என்னுடைய தொழிலை முற்றிலும் மாற்றி அமைக்க உதவி செய்தார். அவர் என்னுடைய மனைவியையும் என்னையும் அபரிவிதமாக ஆசீர்வதித்தார் – அது நாங்கள் நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் மிகவும் அதிகமாக இருந்தது. இப்பொழுது எங்களுக்கென்று சொந்தமாக சொத்துக்களும் வீடுகளும் இருக்க பெற்றிருக்கிறோம்.
இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் ஒரு தொழிலை குறித்து நான் அறிந்து கொள்வதற்கு முன்னமே, தேவன் எனக்கு தேவையான அனைத்தையும் ஆயத்தப்படுத்தி என்னை அதில் வெற்றி உள்ளவனாகவும் நிறுத்தி இருக்கிறார் – என்னுடைய அலுவலகத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் ஒரு வீட்டை வாங்க செய்தார். காரணம் அந்த வீட்டில் மிகப்பெரிய கராஜ் உள்ளது. எங்களுடைய நிறுவனத்தின் சுத்தம் செய்வதற்கான உபகரணங்களை அங்கே நாங்கள் பராமரித்து வருகிறோம். மேலும் எங்களுடைய வீட்டில் ஒரு அறையை நாங்கள் அலுவலக அறையாக மாற்றி அதிலே எங்களுடைய ஊழியர்கள் நிர்வாக வேலைகளை கையாளுவதற்கு பயன்படுத்துகிறோம்.
மெய்யாகவே தேவன் என்னை வளர்ச்சியடைய செய்து இந்த தொழிலில் என்னை வெற்றியுள்ளவனாக்கியிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் – நாங்கள் எந்த விதமான இழப்பையும் சந்திக்காமல் லாபத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம். எங்கள் தொழிலானது வியர்வை சிந்தி கஷ்டப்படும் நிலையின்றி வெற்றியுள்ளதாய் இருக்கிறது.
நான் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாய் இருக்கின்றேன், என்னுடைய கடந்த கால நிகழ்கால எதிர்கால பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டது என்ற கிருபையின் செய்தியை நான் முதன்முதலாய் கேட்ட பொழுது அது என் வாழ்க்கையை மாற்றினது. இந்த ஆசீர்வாதங்களுக்கு நான் பாத்திரனாய் இல்லாத பட்சத்திலும் என்னை ஆசீர்வதித்த அவருடைய அற்புதமான கிருபைக்காக தேவனுக்கே சகல மகிமையும் உண்டாயிருப்பதாக. இயேசுவை உமக்கு நன்றி.
கிரிஸ் ஸ்வார்ட் | தென் ஆப்ரிக்கா |
இதுபோல இன்னும் பல
வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்
என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...