மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் பிறகு, பரிசுத்த ஆவியானவர் என்னை பாஸ்டர் பிரின்ஸின் Grace Revolution என்ற புத்தகத்தைப் படிக்க வழிநடத்தினார்.

அந்த நேரத்தில், விவாகரத்திற்குப் பிறகு நான் தனியாக வாழ்ந்துவந்தேன், ஆண்டவரின் வழிகாட்டுதலைத் தேடி கொண்டிருந்தேன். குற்ற உணர்ச்சியிலும் அவமானத்திலும் முழ்கியிருந்ததால், பரலோகத் தகப்பனின் அன்பை அனுபவிக்க முடியவில்லை.

Grace Revolution புத்தகத்தை படித்த பிறகு, எனக்கு இயேசுவை இன்னும் அதிகமாக வேண்டும் என்று தோன்றினது. நான் பாஸ்டர் பிரின்ஸின் மற்றொரு புத்தகமான 100 Days of Right Believing என்பதையும் பெற்றுச் சென்றேன். அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது, தேவனுடைய ஆவியானவர் என்னை என் குடும்பத்திற்குத் திரும்பி போகும்படி கூறினார்.

ஆச்சரியமென்னவென்றால், என் முன்னாள் மனைவி, எங்கள் குழந்தைகளுடன் நானும் விடுமுறைக்கு செல்லும்படி எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கியிருந்தார் — ஆனால் விடுமுறைக்கும் மேலாக, தேவன் எங்களுக்காக பெரிதான ஒன்றை வைத்திருந்தார் என்பதை அறிந்துகொண்டோம். இன்றைக்கு, எங்கள் குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். தேவன் எங்கள் வீட்டை மீண்டும் கட்டி வருகிறார்!

இவை அனைத்தும் என்னுடைய 57வது வயதில் ஜூப்ளி ஆண்டில் சம்பவித்தது. தேவனின் மேலான கிருபையால், என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முழுமையான மீட்பின் நிலை உண்டாக காத்திருக்கிறேன். அவருடைய முடிக்கப்பட்ட கிரியையை என் வாழ்க்கையில் வெளிப்படுத்த அவர் கிரியை செய்யும்படி அனுமதித்து சாந்தமாக இருக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்.

பாஸ்டர் பிரின்ஸ், தேவனின் கிருபையையும், நீதியின் வரத்தையும், இளைப்பாறுதலையும் பிரசங்கித்ததற்கு நன்றி. 20 ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசியாக இருந்தபோதிலும், இயேசுவின் அன்பை இவ்வளவு உண்மையாக அனுபவித்ததே இல்லை. உங்கள் செய்தி ஜீவியங்களை மாற்றி, மக்களை தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற உதவி செய்கிறது.

இயேசு உங்களை நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாக மிகுதியாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

சுவெல்தூ மடாசா
தென் ஆப்ரிக்கா

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்

என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்