தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்
தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்
இதன் மூலம் பகிர்ந்திட
என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தபோது நான் கிறிஸ்தவனானேன். அந்த தருணத்திலிருந்து ஊழியத்தில் ஈடுபட்டு என்னுடைய மாவட்டத்தில் வாலிபர்களுக்கு மேற்பார்வையாளனாக ஊழியம் செய்ய தீர்மானித்தேன்.
நான் என்னுடைய தலைவர்கள் மற்றும் நான் சப்ஸ்கிரைப் செய்திருந்த உபகரணங்கள் வழியாக கற்றுக் கொண்டதை பிரசிங்க ஆரம்பித்தேன். பரிசுத்தமாய் நடப்பதும் சரியான சுபாவத்தோடு இருப்பதும் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான வழி என்பதை வலியுறுத்தினேன். செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என்று வாலிபர்கள் மத்தியில் அழுத்தமாய் தைரியமாய் சொல்ல ஆரம்பித்தேன். இப்படியே ஆறு வருடங்கள் கடந்தது மேலும் மற்றவர்களைவிட நான் “சிறப்பான கிறிஸ்தவன்” என்கிறதான பெருமை உடையவனாய் காணப்பட்டேன்.
பின்நாட்களில் என்னுடன் பணியாற்றியவர்கள் என்னுடைய விசுவாசத்தை சவாலிட ஆரம்பித்தனர். அவர் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் ஊழியத்தை எடுத்துரைத்து மக்கள் சட்டரீதியற்ற நிலையிலும் பரிசுத்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை கூறினார். இது எனக்கு ஆர்வத்தை தூண்டினது. நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை தேடி ஆராய்ந்து கேட்க ஆரம்பித்தேன்.
தேவன் என்னுடைய செயல்பாடுகளை அல்ல இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியையினாலே என்னை ஆசீர்வதிக்கிறார் என்பதை நான் கற்றுக் கொண்ட போது அது என் மனதை உலுக்கியது. நான் அதை விசுவாசித்து அந்த சத்தியத்தை விசுவாசத்தினாலே ஏற்றுக் கொண்டால் போதுமானதாய் இருக்கிறது. இதுதான் சத்தியம் என்பது நம்ப முடியாத அளவுக்கு இருந்தது.
மேலும் நித்திய இரட்சிப்பானது தேவனிடமிருந்து பெறக்கூடியதான ஈவு என்பதை கற்றுக் கொண்டேன். அது தற்காலிகமானதோ அல்லது நம்முடைய கிரியைகளினாலே பெறக்கூடியதோ அல்ல. இவை என்னை மார்க்க ரீதியான வாழ்க்கை வாழ்வதிலிருந்து விடுவித்து எனக்கு சொல்லி முடியாத சந்தோஷத்தை அளித்தது. அதற்கு முன்பு என்னுடைய இரட்சிப்பை இழக்கக்கூடும் என்றே நான் அவ்வப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.
வாலிபர்கள் ஊழியத்தில் அத்துணை ஆண்டுகள் ஊழியம் செய்ததை திரும்பிப் பார்க்கும்பொழுது நான் தேவனுடைய தயவை பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டு இருந்தேன் என்பதையும் மற்றவர்களுக்கும் அதையே போதித்தேன் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் உண்மையில் சிலுவையின் மூலமாக ஏற்கனவே அவருடைய சகல ஆசீர்வாதங்களும் எனக்கு உரியதாக அளிக்கப்பட்டிருக்கிறது.
என்னுடைய வாழ்வில் இந்த கிருபையின் புரட்சியானது தடுத்து நிறுத்த முடியாததாய் மாறினது. வாலிபர்களுக்கும் என்னுடைய வேலை ஸ்தலத்தில் இருப்பவர்களுக்கும் தேவனுடைய விவரிக்க முடியா அன்பை பிரகடனம் பண்ணுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை. சுவிசேஷத்தை கேள்விப்பட்ட யாவரும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
என்னுடைய தொழிலும் முற்றிலுமாய் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருந்தது. நான் இந்த சுவிசேஷத்தை கேட்க துவங்கினது முதலாய் சாதாரண ஆளை தொழிலாளியாக இருந்த நான் ஏழு வருடங்களில் ஒரு சோலார் நிறுவனத்தின் முதல்வராக மாறினேன். எனக்கு அருமையான கிறிஸ்தவ குடும்பம் உள்ளது – எனக்கு அழகான, அன்பான மனைவியும் அருமையான இரண்டு ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இயேசுவினாலே என் குடும்பம் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக, நல்ல ஆரோக்கியத்தோடு, சகலமும் நிறைவாக பெற்று, சமாதானமும் ஞானமும் தயவும் பெற்று வருகிறோம்.
பாஸ்டர் பிரின்ஸ் உங்களுக்காக நான் தேவனை துதிக்கிறேன். நீங்கள் இயேசுவின் சுவிசேஷத்தை மிக எளிமையான விதத்தில் தூய்மையான நிலையில் என் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பிரசங்கித்திருக்கிறீர்கள். மேலும் இந்த சந்ததியாரை கிருபையின் சத்தியத்தினால் விடுதலையாக்கும்படிக்கு தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தப்படுவீர்களாக.
வின்சின்டீ அல்டோனி டோமியால்
பிலிப்பைன்ஸ்
இதுபோல இன்னும் பல
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்
எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...
சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்
எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...
தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது
நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....
கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது
என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...
இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...
மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்
சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...
பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை
என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்
நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...
தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக
என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...
வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது
2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...