உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மேலான அவருடைய அளவற்ற அன்பு
உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மேலான அவருடைய அளவற்ற அன்பு
இதன் மூலம் பகிர்ந்திட
தேவன் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதாகக் கருதினால், மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.
காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு மற்றும் காணாமற்போன மகன் ஆகிய மூன்று புகழ்பெற்ற உவமைகளின் வாயிலாக, தேவன் உங்களை மன்னித்துச் சீர்ப்படுத்தும் அவருடைய அளவற்ற வழிகளைப் பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் வெளிப்படுத்தும்போது, அவருடைய அன்பு உங்கள் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் மேலானது என்பதை நீங்கள் கண்டடைவீர்கள்
இந்தச் செய்தியின் மூலம், கர்த்தருடைய உருக்கமான இரக்கத்தையும் கிருபையையும் நீங்கள் எந்தளவுக்கு அதிகமாய் உணருகிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள்:
சந்தோஷத்திலும் சமாதானத்திலும் புதிய பரிமாணங்களை அனுபவிப்பீர்கள்.
பிறருக்குச் செய்யும் நற்கிரியைகளிலும் அன்பிலும் வழிந்தோடிப் பிரகாசிப்பீர்கள்.
தீய பழக்கவழக்கங்களிலிருந்து எவ்விதப் பிரயத்தனமுமின்றி விடுபட்டு, ஒரு மகிமையுள்ள சாட்சியாக விளங்குவீர்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் ஆவியானவராலே வழிநடத்தப்படுவீர்கள்.தேவனுடனான உங்கள் ஐக்கியத்தில் இன்னும் அதிகமாய் வளர்வீர்கள்.பிரியமானவர்களே, நீங்கள் அளவிட முடியாத அன்பினால் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து, தேவனுடைய ஆசீர்வாதங்களின் பூரணத்தை உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கத் தொடங்குங்கள்!
இந்த ஒளிபரப்பைக் குறித்துஉங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மேலான அவருடைய அளவற்ற அன்புஎன்ற தலைப்பிலான செய்தியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இது 20 ஜனவரி 2019 அன்று, ஜோசப் பிரின்ஸ் அவர்களால் பிரசங்கிக்கப்பட்டது.
இதுபோல இன்னும் பல

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.





























