உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)
உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)
இதன் மூலம் பகிர்ந்திட
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ள தொடங்குங்கள்! இந்த மூன்று பகுதி தொடரில் உங்களுடைய திருப்புமுனைக்காக ஏன் நீங்கள் தேவனை தொடர்ச்சியாக நம்பலாம் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் கற்பிக்கிறார். தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் உயர்ந்த அன்பை அனுபவிக்கிற இந்த பயணத்தை நீங்கள் தொடங்கும்போது ஊக்கமடைவீர்கள்.
கிறிஸ்துவுக்குள் உங்களுடைய உண்மையான அடையாளத்தை தெரிந்து கொள்ளுங்கள்
Aஅன்பானவர்களேநம்மோட அடையாளப்புரிதல் அல்லது நாம யார்னுநம்மள நினைக்கிறோமோஅது ரொம்பவே முக்கியமாகும். இன்னைக்கு பல டீனேஜர்கள் உண்மையாகவே தங்களோட அடையாளத்துல போராடுறாங்க. அவங்க அன்பு சுயமதிப்பு மற்றும் அடையாளம் போன்ற சொந்த உணர்வுகளை தவறான எல்லா இடங்கள்லயும் தேடுறாங்க. அது அவங்களுக்கு வீட்லயோ அல்லது சர்ச்லையோ கிடைக்காதப்ப,அவங்க அத கேங்குகள்லயும்,தவறான வழிபாடுகள் இருக்கிற இடத்துலையும் தன்னை ஏத்துக்கிட்டு அருமையான ஒரு அடையாளத்தை தர்ற ஏதோ ஒரு குழுவுலயும் அதைத் தேடுறாங்க.
நீங்க ஒரு பெற்றோரா இருப்பீங்கன்னாஉங்க குழந்தையோட அடையாள உணர்வ உருவாக்குறதுலநீங்க முக்கியமான பங்குவகிக்க உங்கள நான் ஊக்குவிக்கிறேன். அவங்க யார்ங்கிறத வரையறுக்குறத மீடியா கிட்டையோ அல்லது ஸ்கூல்கிட்டையோ அல்லது அவங்களோட நண்பர்கள்கிட்டையோ விடாதீங்க. என்ன நம்புங்க, அவங்க வேற யார்கிட்டயும் இருந்து கேட்கிறதை விட, தன்னோட தாய், தந்தையிடம் இருந்து கேட்க விரும்புவாங்க. உங்க வார்த்தைகள்.
கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்–நீங்கள் தேவனுடைய நீதியா, மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவங்களா, மிகவும் தயவு பெற்றவங்களா, அவரால் மிகவும் நேசிக்கப்படுறவங்களா இருக்கீங்க.
தேவன் அவங்கள எவ்வளவு நேசிக்கிறார்ங்கிறதஅவங்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துங்க: நீ பிதாவாகிய தேவனின் அன்புக்குரிய குழந்தை, அவர் உன் மேல ரொம்ப அன்பா இருக்கார். நீ ராஜாவின் குழந்தை, ஒரு சாம்பியன்!” அதோடு நீங்க அவங்கள எவ்வளவு நேசிக்கிறிங்கங்கிறதையும் சொல்ல மறக்காதீங்க: “நீ எப்பவுமே அப்பாவுக்கு அம்மாவுக்கும் செல்லமா இருப்ப. நீ எங்களுக்குமிக விலைமதிப்பற்றவன், அதோடு நீ தப்பு செஞ்சாலும் கூட நாங்க உன்னை எப்பவுமே நேசிப்போம், ஏத்துக்குவோம்.”
உங்க குழந்தைங்கஅவங்க எவ்வளவு நேசிக்கப்படுறாங்க, உண்மையாவே தங்கள் யார் என்று அவர்கள் தெரிந்து கொள்வது அவங்க தெரிஞ்சுகிற,அவங்க பாதுகாப்பையும், உறுதிப்பாட்டையும்வேற எங்கேயும் தேட மாட்டாங்க. சோதனைகள் வர்றப்ப, அவங்க உறுதியா நின்னு தங்களோட நண்பர்கள்கிட்ட, “உங்கள் அங்கீகாரத்தைப் பெற நான் புகைபிடிக்கத் தேவையில்லை. எனக்கு ஏற்கனவே என் அப்பாவின் அங்கீகாரம் இருக்கிறது!”ன்னு சொல்ல அவங்களுக்கு வலிமை கிடைக்கும். “இயேசு என்னை மிகவும் மதிக்கிறார், அவர் எனக்காக மரித்தார்”, மதிப்புமிக்கவனாவும் முக்கியத்துவம் வாய்ந்தவனாவும் உணர என் உடலை ஒருவருக்கு நான் ஏன் கொடுக்க வேண்டும்?”னு நம்பும் மற்றும் தைரியமாகச் சொல்லும் இளைஞர்களை நாம வளர்ப்போம்.
அன்பானவர்களே, நீங்க ஒரு குழந்தையா இருந்தாலும் சரி, டீனேஜராக இருந்தாலும் சரி, பெரியவரா இருந்தாலும் சரி, கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்—நீங்கள் தேவனுடைய நீதியா, மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவங்களா, மிகவும் தயவு பெற்றவங்களா, அவரால் மிகவும் நேசிக்கப்படுறவங்களா இருக்கீங்க. மேலும், இந்த விலைமதிப்பற்ற அடையாளம் உங்களோட கீழ்ப்படிதலால் அல்ல, மாறாக சிலுவைல கிறிஸ்துவின் கீழ்ப்படிதலால்தான்கிறத தெரிஞ்சுக்கிறதும் அதுக்கு இணையா முக்கியமாகும்.
அந்த எண்ணங்களை மாற்றுங்கள்—இயேசுவைப் பற்றி தியானியுங்கள்
கிறிஸ்துவின் கீழ்ப்படிதலைப் பற்றி நாம சிந்திக்கவோ அல்லது தியானிக்கவோ தேவன் விரும்புறார். பாருங்க, அந்த எதிர்மறை எண்ணங்களை பாட்டில், உரத்த இசை, போதைப்பொருள் அல்லது உங்களோட“மன சக்தி” மூலம் தடுக்க முடியாது. கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் மற்றும் கிருபையைப் பற்றி தியானிப்பதன் மூலம் அவற்றை மாற்றணும். பவுல் நமக்குச் சொல்றான்:
…உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
— பிலிப்பியர் 4:8
பாஸ்டர் பிரின்ஸ் என்னோட மனசு ஏற்கனவே ரொம்ப பாதிக்கப்பட்டு சோர்வா இருக்கு, என்னால நேரா சிந்திக்க முடியாது, இவை அனைத்தையும் தியானிப்பது ஒருபுறம் இருக்கட்டும்னு நீங்க சொல்லலாம்.
என் நண்பரே உங்களோட குழப்பம் எனக்கு புரியுது. ஆனா உண்மையா நீங்க செய்ய வேண்டியது என்னன்னா அமைதியா உட்கார்ந்து, நிம்மதியா இயேசுவை பற்றியும் அவர் உங்களுக்கு செஞ்சுருக்கிறது பற்றியும் இருக்கிற பிரசங்கங்களை கேட்கிறது மட்டும்தான். சிடி பிரசங்கங்களை ரிப்பீட் மோடுல ஓட விடுங்க அல்லது எங்கேயும் போகணும்னா mp3 பிளேயர்ல ஓட விடுங்க. முழு பிரசங்கமும் உங்களுக்கு புரியலைன்னா கவலைப்படாதீங்க. குற்றம் சாட்டுறவங்களோட குரலுக்கு பதிலா கிருபையின் குரல தொடர்ந்து கேளுங்க. இயேசுவோட அழகையும், பிதாவுக்கு கீழ்ப்படிஞ்சுஅவர் உங்களுக்கு செஞ்ச எல்லாத்தையும் உற்று கவனிங்க, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ள ஆழமா செயல்படட்டும். இது உங்களோட கீழ்படிதல்னாலையோ அல்லது நீங்க செஞ்சுகிட்டு இருக்கிற விஷயங்களாலையோ கிடையாது, இது எல்லாமே கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் பற்றியது அவர் உங்களுக்காக செஞ்சிருக்கிற விஷயங்களைப் பற்றியதுங்கிறத மறக்காதீங்க. இந்தப் பிரசங்கத்தை மட்டும் தொடர்ந்து கேளுங்க, அப்ப நீங்க அவரோட முடிக்கப்பட்ட வேலைல இளைப்பாறுதலை பார்ப்பீங்க.
உங்களுடைய வெற்றிக்கான வழியை கேளுங்கள்
கோனி என்ற சகோதரி கிட்ட இருந்து ஒரு அற்புதமான சாட்சி எனக்கு வந்திருக்கு. தன்னோட காதலனால கைவிடப்பட்ட பிறகு ரொம்ப மனம் சோர்ந்து போயிருந்தாங்க. நிராகரிப்பு மற்றும் வலி உணர்வுகள்ல மூழ்கி கிறிஸ்துவ சேனல்கள்ல தேவன அவங்க தேடுனப்பதான், என்னோட நிகழ்ச்சியை அவங்க பாத்துருக்காங்க.
தேவனோட கிருபை பற்றியும் கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலையை பற்றியும் நான் செஞ்ச பிரசங்கத்தை அவங்க கேட்டப்ப, தன்னோட பிரச்சனைகளை எல்லாம் தேவன் கிட்ட ஒப்புக்கொடுத்து, மிகுதியான கிருபையே அவங்க பெற்றாங்க. தொடர்ந்து மூணு நாட்கள் நிகழ்ச்சிய பார்த்தாங்க, கவனிச்சாங்க, மேலும் இயேசுவ பற்றியும் அவங்க மேல அவருக்கு இருக்கிற அன்பு பற்றியும் அவங்க கேட்டாங்க. அவங்க சொல்றாங்க:
மூணு நாளைக்கு பிறகு அந்த காயம் அற்புதமா மறைஞ்சுடுச்சு. நான் சோகமா இருக்கல, என்ன நடந்தாலும் தேவன் என்ன நேசிக்கிறத உணர்ந்தேன், அதோடு என்னோட மனசுல நிம்மதியும் மன திருப்தியும் எனக்கு வந்துச்சு. அன்றிலிருந்து தேவன் என் மேல வச்சிருக்கிற அன்புக்காகதொடர்ந்து அவரை துதிக்கிறேன், அதோடு அவரோட கிருபையையும் ஆசீர்வாதங்களையும் தொடர்ந்து நான் பெற்றுகிட்டு இருக்கேன்.
கோனி தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தது மூலமா தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல அவங்களோட மனசுலையும் இதயத்திலும் செஞ்சார். தேவனோட சமாதானமும் அன்பும் அவங்களோட மனசுல இருந்த வெற்றிடத்த நிரப்புனப்ப அவங்களோட ஆத்மா ஆசீர்வதிக்கப்படத் தொடங்குச்சு.
இயேசு உங்களுக்கு இளைப்பாறுதல் தந்து, உங்களுக்கு கிருபையான வார்த்தைகளை பேசுவாராக!
என் நண்பரே நீங்களும் கோனி மாதிரி எல்லா பாதகமான எண்ணங்களால் சோர்ந்து போய் இருப்பீங்கன்னா, பிரசங்கிக்கப்படுற சுவிசேஷத்தை தொடர்ந்து கேளுங்க. சுவிசேஷம் கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் பற்றியதும் உங்க முழு நல்வாழ்வுக்கான தேவபெலனாயிருக்கிறது (ரோமர்1:16)! நீங்க இயேசு கிட்ட வந்து அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தரவும் உங்க மேல கிருபையின் வார்த்தைகள் சொல்லவும் இடம் தாங்க. உங்க இதயத்துலயும் மனசுலையும் அவரோட கிருபையும் ஆவியானவரும் செயல்பட இடம்தாங்க. அவரோட கிருபையயும், அவரோட முடிக்கப்பட்ட வேலையின் பெரிய வெளிப்பாட்டையும், அவருக்குள்ள இருக்கிற நீதியையும் நீங்க அதிகமா பெறுறப்ப பயம் மற்றும் சோர்வின் கட்டுகள் அவிழ்றத நீங்க பாப்பீங்க.
நண்பர்களே இன்னைக்கு நீங்க எப்படிப்பட்ட பாதகமான எண்ணங்களோடும், கடினமான விஷயங்களோடும், கெட்ட பழக்கங்களோடும் போராடிகிட்டு இருந்தாலும், கர்த்தர் ஏற்கனவே உங்களுக்குள்ள நல்ல செயல தொடங்கிட்டார்ங்கிறதுல எனக்கு சந்தேகமில்ல. அவர் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாம உங்களை நேசிக்கிறார், அதோடு 100% உங்களுக்காக அவர் இருக்கார். உங்க மனசும் உடலும் விடுதலையாவும், திருப்தியாவும் இருக்க அவர் விரும்புறார். உங்களோட ஆத்மா வாழ்வது போல நீங்க எல்லா பகுதிகளையும் செழித்து இருக்கணும்கிறது தான் அவரோட விருப்பமாகும்.
இப்ப எதிரி எப்படி செயல்படுறான்னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் (உங்களோட மனம் தான் அவனோட போர்க்களமாகும், உங்களோட எண்ணம் தான் அவன் தேர்ந்தெடுக்கும் ஆயுதமாகும்), இது போரில் பாதி வெற்றியாகும்! நீங்க ஒரு நல்ல தொடக்கத்துக்கு போயிட்டீங்க. இங்க இருந்து கிறிஸ்துவ பற்றியும் சிலுவைலஅவர் உங்களுக்காக செஞ்சு முடிச்சுருக்கிறது பற்றிய பிரசங்கங்களை தொடர்ந்து கேளுங்க. இது ஏன் உங்களுக்கு நடந்துச்சு? இது யாரோட தவறு அப்படின்னு எல்லாத்தையும் கண்டு பிடிக்க முயற்சி செய்யாதீங்க. அவரோட கிருபையை மட்டுமே சார்ந்து அவர் உங்களுக்காக செஞ்சிருக்கிறதுல நீங்க ஓய்வெடுங்க, அப்ப அவ உங்க மனசையும், சரீரத்தையும் உங்க வாழ்க்கையையும் மகிமைக்கு மேல மகிமை அடைய வைக்கிறத நீங்க பாப்பீங்க. சிலுவை மூலமா உங்களுக்காக அவர் ஏற்கனவே போற ஜெயிச்சுட்டார்!
என் நண்பரே தேவன் உங்களுக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோத்தேயு1:7). மத்தவங்க உங்களை பற்றி என்ன சொன்னாலும் பரவால்ல. இயேசுவின் கீழ்ப்படிதலினாலே நீங்க தேவனோட நீதியாகவும் மிகவும் தயவு பாராட்டப்பட்ட பிள்ளையாகவும் இருக்கீங்க. அவரோட ராஜ்ஜியத்துல நீங்க பலசாலியா இருக்கீங்க. அவரோட பார்வைல நீங்க அழகானவங்களா இருக்கீங்க. மேலும் அவரைப்போலவே உங்களுக்கு தெளிந்த சிந்தையும் இருக்கிறது (1கொரிந்தியர் 2:16). அதை நம்பி அதன்படி வாழுங்க.
இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.
இதுபோல இன்னும் பல
போலி கிருபையின் ஆபத்துகளை எச்சரிக்கையுடன் கவனியுங்கள்
நாம் மிகுந்த உற்சாகம் நிறைந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போஸ்தலர் பவுலுக்கு முதலில் அள...
கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்
தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...
நீதி என்பது ஒரு ஈவு
உங்களோட நற்செயல்களால தேவனோட ஆசீர்வாதங்களை உங்களால பெற முடியாது. ஆரோக்கியம், கிருபை மற்றும் வெற்றி உட...
ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...
இன்று தேவனுடைய பாதுகாப்பில் நடங்கள்
தேவனோட வார்த்தைல அவரோட அன்பான பிள்ளைகளுக்கு அவரோட பாதுகாப்பின் வாக்குறுதிகள் நிரம்பி இருக்கு. உதாரண...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றிபெறுதல் (பகுதி 1/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)
வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அ...
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்எ...