ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)
இதன் மூலம் பகிர்ந்திட
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்என்றநம்பிக்கையான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ள தொடங்குங்கள்! இந்த மூன்று பகுதி தொடரில் உங்களுடைய திருப்புமுனைக்காக ஏன் நீங்கள் தேவனை தொடர்ச்சியாக நம்பலாம் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் கற்பிக்கிறார். தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் உயர்ந்த அன்பை அனுபவிக்கிற இந்த பயணத்தை நீங்கள் தொடங்கும்போது ஊக்கமடைவீர்கள்.
எனக்கு வேலை கிடைக்கும்னு நான் நம்புறேன். எனக்கு அது ரொம்பவே தேவை.
என் மகளை இந்த ஸ்கூல்ல சேர்த்துக்குவாங்கன்னு நம்புறேன். இந்த ஏரியால இதுதான் சிறந்ததாகும்.
எனக்கு இருக்கிற இந்த நோய் சரியாவிடும். இது மோசமாகாதுன்னு நான் ரொம்பவே நம்புறேன்.
நிறைய பேர் இந்த உணர்வுகளை வெளிப்படுத்துறத கேள்விப்பட்டிருக்கேன். அவங்கள மாதிரியே இன்னும் நிறைய பேர் தாங்கள்பார்க்க விரும்புறது நடக்கும் என்ற உண்மையான நம்பிக்கையின் உணர்வு இல்லாமஇருக்காங்க. பெரும்பாலும் அவங்களோட நம்பிக்கையின் வெளிப்பாடுகள் ஏமாற்றத்தாலும் அதுக்கு நேர் எதிரா தான் நடக்கும் என்ற கவலையாலும் நிறைஞ்சுருக்கும்.
தற்செயலாவோ அல்லது வெளிப்புற சக்திகளாலோ, நிலையற்றமனுஷங்களோட விருப்பங்களாலோ, கற்பனைகளாலோ விடப்படாதநம்பிக்கையை பெறுறது எப்படி? நம்மோட தவறுகளால பாதிக்கப்படாதஅல்லது நம்மோட வரையறுக்கப்பட்ட அறிவு மற்றும் திறன்களை சார்ந்து இல்லாத நம்பிக்கையை எப்படி பெறலாம்?
என் நண்பரே, நான் “பைபிள் நம்பிக்கை” என்று அழைப்பதை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன் – உங்களை சோர்வடைய வைக்காத அல்லது உங்களை ஏமாற்றாத நம்பிக்கை.
அது ஏன் இவ்வளவு நிச்சயமானதா உறுதியானதா இருக்கு? ஏன்னா அது பெயர்க்க முடியாத, அசைக்க முடியாத, முற்றிலும் நம்பகமான கிறிஸ்துவின் அன்பு மற்றும் கல்வாரில அவரோட முடிக்கப்பட்ட வேலை மேல நங்கூரமிடப்பட்டிருக்கு.
இன்னைக்கு நீங்க உங்களுக்குள்ள இத ஆழமா புரிஞ்சுக்க நான் உங்களுக்காக ஜெபம் பண்றேன்: எந்த ஒரு விஷயமும் கிறிஸ்துவின் அன்பை விட்டு உங்களை பிரிக்க முடியாது. எதாலையும் அவரோட முடிக்கப்பட்ட வேலையைமாத்தமுடியாது. 100% நீங்க நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு நபர் இருந்தார்னா, அவர் ஒருபோதும் உங்களை தோக்க விட மாட்டார், அது கிறிஸ்து இயேசு தான். நீங்க அவர் மேலயும், அவர் உங்க மேல வச்சிருக்கற அன்பு மேலயும் வைக்கிறப்ப அந்த நம்பிக்கை உங்களை ஏமாத்தாது!
ஒரு தாயின் நம்பிக்கை நிறைவேறியது
அமெரிக்காவின் (அமெரிக்கா) வர்ஜீனியால ரெண்டு டீன் ஏஜ் குழந்தைகளோடு இருக்கும் ஒற்றைத் தாயான அனிதா, இந்த நம்பிக்கை தனக்குள்ள சரியாக எரிந்து கொண்டிருப்பது பற்றியும், இது தன்னோட திருப்புமுனைக்காக காத்திருந்த அந்த நாட்கள் முழுசும் தனக்கு பலத்த தந்தது பற்றியும் என்கிட்ட சாட்சியா பகிர்ந்துக்கிட்டாங்க.
ஒரு உற்பத்தி ஆலைலஉற்பத்தி மேற்பார்வையாளர்பதவில இருந்து நீக்கப்பட்ட அனிதா, நல்ல சம்பளத்துல ஒரு வேலை கிடைக்கிற வரைக்கும்வீட்டு செலவுகளை கவனிக்கிறதுலையும், சாப்பாடு செலவுகளை பாக்குறதுலயும் பயங்கரமான நிதி நெருக்கடியை சந்திச்சார். வேலையில்லாத இந்த நேரத்துல பயத்தையும், கவலை தரக்கூடிய எண்ணங்களையும் வெறுத்து, அதுக்கு பதிலா அனிதாகர்த்தரையும், அவரோட அன்பையும், அவரோட வார்த்தைல தனக்காக இருக்கிற அவரோட அற்புதமான வாக்குறுதிகளையும் நோக்கிபாக்க முடிவு செஞ்சார். அவங்க கர்த்தரோட கிருபைல கவனம் செலுத்துனாங்க, தூங்குற நேரம் கூட தொடர்ந்து என்னோட பிரசங்கங்கள கேட்டாங்க.
அவங்க கர்த்தரோட அன்புல நிரம்பி, தனது கனவு வேலையான மனித வள மேலாளர் வேலையை ஜெபம் பண்ணி கேட்டாங்க.
வேலைக்காகக் காத்திருந்த மாதங்களில், ஆழ்ந்த உறுதியும், நம்பிக்கையும்எப்படி தன் இதயத்தைப் பாதுகாத்தன என்பதை அவர் என்னிடம் சொன்னார்.
தனக்கும், தன்னோட குடும்பத்துக்கும் தேவையானத கர்த்தர் தருவார் என்ற நம்பிக்கை அவங்களுக்கு அதிகமா இருந்துச்சு, அதனால மத்தவங்க கேட்குறப்பஎல்லாம் சரியாகிடும்னு அசைக்க முடியாத நம்பிக்கையோடு அவங்க சொன்னாங்க.
அவங்களுக்குள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையை உயிரோடு வைத்திருந்தது எது? மேலும் அதோட விளைவு என்னன்னு அனிதாவே சொல்லுவாங்க.
நான் பிரசங்கங்களை கேட்டப்ப பரலோக பிதா மற்றும் இயேசுவின் அன்பும் என்னோட மனசுல ரொம்ப உண்மையானதுனால எல்லாமே சரியாயிடும் என்ற நம்பிக்கை எனக்குள்ள வந்துச்சு. பில்கள் கட்ட வேண்டிய நேரத்துல எல்லாம், “நாளைக்காக கவலைப்படாதே; என் கிருபை உனக்கு போதும்னு” சொல்ற கர்த்தரோட குரலை நான் கேட்பேன். அப்ப எல்லாமே தொடர்ந்து சரியாகுச்சு.
பத்து மாசங்களுக்குப் பிறகு ஒரு நிறுவனத்தோட சிஇஓ எனக்கு போன் பண்ணுனாங்க. முன்னாள் மனித வள மேலாளரின் டேபிள்ல என்னோட விண்ணப்பத்தை பாத்ததாவும் என்ன இண்டர்வியூ பண்ண விரும்புறதாவும் அவங்க என்கிட்ட சொன்னாங்க. இண்டர்வியூல அந்த இடத்துலேயே என்ன வேலைக்கு தேர்ந்தெடுத்துட்டாங்க. என்னோட சம்பள எதிர்பார்ப்புகளை நான் சொன்னப்ப நான் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகமான தொகைய தர்றதா பதில் சொன்னாங்க. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இப்பகனவு கண்ட என்னோட வேலைல நான் இருக்கேன். தேவன் தான் என்னை இங்க அனுப்புனார்னு எனக்கு தெரியும். இது மிகப்பெரிய அற்புதமாகும்!
ரொம்பவே உத்வேகம் தர்ற ஒரு சாட்சியாகும்! அனிதா அனுபவித்த உறுதியான நம்பிக்கைஅவங்களுக்கு வேலை இல்லாம இருந்த நேரத்துல முடக்கும் பயங்கள், கவலை மற்றும் மோசமான பண பிரச்சனைகள்ல இருந்து அவங்களோட இதயத்தை பாதுகாத்துச்சு.
கர்த்தர் தன்னை எவ்வளவு நேசிக்கிறார் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்ததுனால தான் அவங்களோட நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்துச்சு. மேலும் அவங்க ஏமாற்றம் அடையாம இருந்தாங்க.
அவங்க குடும்பத்துல தேவைகள் வந்தப்ப அதை பூர்த்தி செய்ய கர்த்தர் தவறவே இல்லை. அவங்களோட ஜெபத்துக்கு பதில் தந்து அவங்களோட கனவு வேலையை தந்தது மட்டும் இல்லாம அவங்க எதிர்பார்த்ததை விட அதிகமான சம்பளமும் அவர் தந்தார்.
நம்பிக்கை தேவனுடைய அன்பில் ஊன்றியிருக்கிறது
என் நண்பரே உங்களுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கைதான் இருக்கணும்னு நான் விரும்புறேன். பைபிள் நம்பிக்கைங்கிறது உங்களுக்கு நன்மை நடக்கும் என்று வலுவான மகிழ்ச்சியான நம்பிக்கையான எதிர்பார்ப்பு உள்ளதாகும். இது மாறுற மனுஷனோட வார்த்தைகளின் அடிப்படைல இல்லாம மாறாத தேவனோட வார்த்தையின்அடிப்படைல உள்ளதாகும். இது மனுஷனோட குறைவுள்ள, திறமை இல்லாத அன்புல அல்ல, பூரணமான கர்த்தரின் அன்புல ஊன்றியிருக்கு. மேலும் கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலை அதின் உறுதியான, அசைக்க முடியாத அடித்தளமாக இருக்கு.
அதனாலதான் ரோமர் 5:5 இப்படி சொல்லுது, “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” அவரோட அன்பு தான் நம்மோட நம்பிக்கையை உறுதி செய்து. தேவன் நம்மள நேசிக்கிறதுனால நமக்கு நல்லது நடக்கும்னு நாம நம்புறது மட்டும் இல்லாம அத நாம அறிந்தும் இருக்கோம். தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி (ரோமர் 8:32 பார்க்க)?
பிரியமானவர்களே, நிச்சயமற்ற தன்மைகள், கவலைகள் மற்றும் பயங்களால் சூழப்பட்ட, நிச்சயமற்ற, நம்பிக்கையற்ற கண்ணோட்டத்துடன் வாழ்க்கையின் புயல்களைக் கடந்து செல்வதை தேவன் விரும்பவில்லை.
அவர் விரும்பல, அவர் உங்கள ரொம்ப நேசிக்கிறார், மேலும் உங்க ஆத்துமா நிலையானதாவும் பைபிள் நம்பிக்கை என்று சொல்லப்படுகிற நம்பிக்கை ஒருபோதும் ஏமாத்தாத அவர்கிட்ட இருந்து நன்மை நடக்கும் என்ற நல்ல நம்பிக்கையான எதிர்பார்ப்பான பைபிள் நம்பிக்கையில் நங்கூரமிட்டு இருக்கணும்னு அவர் விரும்புறார். ஒவ்வொரு சோதனைகளையும் உங்கள ஆச்சரியமான திருப்புமுனை மற்றும் வெற்றிகளுக்கு கொண்டு போகும் நிச்சயமான உறுதியான நம்பிக்கையை நீங்க அனுபவிக்கனும்னு அவர் விரும்புறார்.
அதனால நீங்க கர்த்தர் மேலேயும், அவரோட அன்புல சிலுவைல மூலமா அவர் உங்களுக்கு செஞ்ச செயல்கள் மேலையும் நம்பிக்கை வைக்க இன்னைக்கு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஒருவேள நீங்க பண பிரச்சினைல இருப்பீங்கன்னா, விஷயங்கள் மோசமா இருக்கு. ஆனா அதை நான் சமாளிச்சிடுவேன்னு நம்புறேன்னு சொல்றதுல இருந்து இயேசு என்னை நேசிக்கிறதுனால நிலைமைகள் மாறும். என்னோட தேவைகள் பூர்த்தி செய்யப்படும்னு சொல்றதுக்கு நீங்க மாற நான் விரும்புறேன். பைபிள் நம்பிக்கை இத நீங்க நம்பவும், இத சொல்லவும் உங்களுக்கு நம்பிக்கையை தரும்.
நண்பரே நீங்க உலக ஜனங்கள் மாதிரி இல்லாம உன்னதமான தேவனோட பிள்ளையா இருக்குறதுனால நீங்க உங்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு தினமும் வாழலாம். உங்கள கவனமா கவனிக்கிற, உங்களை ஆழமா நேசிக்கிற, உங்களுக்கு ரொம்ப தயவு காட்டுற, உங்க வாழ்க்கைக்கு நல்ல திட்டங்களை மட்டுமே அல்லாமல் வேற எதுவும் வச்சு இருக்காத ஒரு பரலோக தந்தை உங்களுக்கு இருக்கார்!
இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.
இதுபோல இன்னும் பல
கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்
தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...
இது இயேசுவோடு ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவோருக்குரியதாகும்
உங்களோட தினசரி வாழ்க்கைல இயேசுவை இன்னும் அதிகமா எப்படி பங்கெடுக்க வைக்கிறதுன்னு நீங்க எப்பவாவது யோசி...
ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...
இன்று தேவனுடைய பாதுகாப்பில் நடங்கள்
தேவனோட வார்த்தைல அவரோட அன்பான பிள்ளைகளுக்கு அவரோட பாதுகாப்பின் வாக்குறுதிகள் நிரம்பி இருக்கு. உதாரண...
உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)
வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அ...
ஏமாற்றம் அளிக்காத நம்பிக்கை (பகுதி 3/3)
எதிர்மறையான எண்ணங்களை உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளைக்குறித்த தேவனுடைய நன்மைகளை எதிர்ப்பாக்ககூடிய திட நம...
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...