ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்

12 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது உடன்படிக்கையின் விசுவாசிகள் இன்னைக்கு அத எதுக்காக பயன்படுத்தலாம்? அபிஷேக எண்ணெய் கிறிஸ்துவையும், அவரோட பூரணமான செயலையும் பற்றி என்ன சொல்லுதுங்கிறத ஜோசப் பிரின்ஸ் பைபிள்ல இருந்து விளக்குகிறார். இத நீங்க புரிஞ்சிக்கிறது ஆரோக்கியம், முழுமையான நல்வாழ்வு மற்றும் தேவைகளுக்கான தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட பூர்த்தி செய்தல பெற்றுக்கொள்ள உங்களுக்கு வழிவகுக்கும்.

பைபிள் பல இடங்கள்ல தானியம், திராட்சை ரசம் மற்றும் எண்ணெய் பற்றி சொல்லுது. கர்த்தர் ஏன் இந்த மூன்று பொருட்களையும் எப்பவுமே ஒன்னா குறிப்பிடுறார்னு பல வருஷங்களா நான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அதனால நான் கர்த்தர் கிட்ட கேட்டேன், அந்தத் தேடலுக்கு ஒரு முடிவு கிடைச்சதுக்காக அவருக்கு நன்றி சொல்றேன்.

தானியம், திராட்சை ரசம் மற்றும் எண்ணெய் மூலமோ, நாம நம்மோட செயல்கள் மூலமோ, இல்லனா முயற்சிகள் மூலமோ அல்ல, கிருபையால மட்டுமே இயேசுவின் எல்லா நன்மைகளையும் பெற முடியும். ஏதேன் தோட்டத்துல மனுஷன் சாப்பிட்டது மூலம் தான் சிக்கல்ல மாட்டிக்கிட்டான். அதே மாதிரி இன்னைக்கு நீங்களும் சாப்பிடுறது மூலமே தேவனோட ஆசீர்வாதங்களுக்குள்ள மீண்டும் வர முடியும்.

தானியம், திராட்சை ரசம் மற்றும் எண்ணெயில் கிறிஸ்துவை பார்த்தல்

தானியமும், திராட்சை ரசமும் இயேசுவின் பிட்கப்பட்ட சரீரத்தையும், அவர் சிந்திய ரத்தத்தையும் பற்றி பேசுற பரிசுத்த திருவிருந்தக் குறிக்குது. நீங்கஅப்பம் செய்ய கோதுமையையோ இல்லனா தானியத்தையோ எடுத்து, அதை மாவாக்க அதை இடித்து, அரைப்பீங்க. பிறகு மாவப் பிசைஞ்சு, அத அப்பமாஆக்க தீயின் வெப்பத்துல வைப்பீங்க. அதுதான் நம்மோட ஆண்டவராகிய இயேசுவுக்கு சிலுவைல நடந்துச்சு-அவர் நம்மோட ஜீவ அப்பமானார்.

திராட்சை ரசம் பெற, திராட்சை பழங்கள் பறிக்கப்படுவது மட்டுமில்லாம, அவை நசுக்கப்பட்டு, மிதிக்கப்படவும் செய்யணும். அதே மாதிரி தான் நம்மோட ஆண்டவராகிய இயேசு தேவனோட நியாயத்தீர்ப்பால நசுக்கப்பட்டு, நம்ம எல்லாருக்கும் அவர் புது திராட்சை ரசமா ஆனார்.

ஒலிவ எண்ணெய் ஒலிவ பழத்துல இருந்து வருது. ஆனா நீங்க பழத்தை ரொம்ப கடினமா பிழிஞ்சா எண்ணெய் கிடைக்காது, வெறும் வெள்ளைச் சாறு மட்டுமே கிடைக்கும். அதோடு அந்தப் பழம் ரொம்ப கசப்பா இருக்கும். எண்ணெய் எடுக்க பழமும், அதோட விதையும் ஒலிவ ஆலைல பெரும் பாரத்தால் நசுக்கப்படணும். அந்த அழுத்தம் தான் கசப்ப நீக்கும். அதே மாதிரி இயேசு நம்மோட பாவங்களின் பாரத்தாலயும், சுமைகள்னாலயும் நசுக்கப்பட்டார். இன்னைக்கு நம்மள குணமாக்கும் அபிஷேக எண்ணெயா மாத்துறதுக்காக அவர் நசுக்கப்பட்டார்.

தேவனால் ஏற்படுத்தப்பட்டது

பரிசுத்த அபிஷேகஎண்ணெயின் முக்கியத்துவத்தை நாம உணர்ற ஒரு இடத்துக்கு தேவன் சர்ச்ச கொண்டு வர்றார். நாம இயல்பா செய்ய வேண்டியத செய்யணும்ங்கிறது தான் தேவனோடவழியாகும், நம்மால செய்ய முடியாதத அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்துல நிறைவேற்றுவார். அபிஷேக எண்ணெயப் பயன்படுத்துறது பைபிளுக்கு உட்பட்டது மற்றும் தேவனால நியமிக்கப்பட்டதாகும். அதனால அபிஷேக எண்ணையப் பயன்படுத்த நீங்க மூடநம்பிக்கை உள்ளவர்னு மத்தவங்க உங்களை சொல்ல அனுமதிக்காதீங்க.

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

– யாக்கோபு 5:14–15

ஆரம்பகால சர்ச்ல வியாதிப்பட்டவங்களுக்கு அபிஷேக எண்ணெய் பூசுறது ஒரு வழக்கமா இருந்துச்சு. அதனால சர்ச் மூப்பர்கள் வியாதிப்பட்டவங்களை சந்திக்கிறப்ப, கர்த்தரோட நாமத்துல அந்த நோயாளிக்கு எண்ணெய் பூசுனாங்க. “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்கிறது” ஒரு மூடநம்பிக்கை கிடையாது, மாறாக அது விசுவாசத்தோடு செய்யப்படும் ஒரு செயல்ங்கிறத இது நமக்கு தெளிவா காட்டுது. நீங்க எப்படி விசுவாசத்தப் பெறுவீங்க? “… விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” அதனால ஒரு குறிப்பிட்ட விஷயத்துல பைபிள் என்ன கத்துத்தருதுங்கிறதுப் பற்றி உங்களுக்கு ஒரு வெளிப்பாடு கிடைக்கிறப்ப, அந்த பகுதிக்கான விசுவாசம் வரும்.

புது உடன்படிக்கையின் புதிய தைலம்

ஓய்வு நாள் சங்கீதமான 92வது சங்கீதத்தை நாம பாப்போம். “என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்னு” அதன் 10வது வசனத்துல சொல்லியிருக்கு. எண்ணெய் தேங்கிப் போறப்ப அது பழசாகிடுங்கிறதுனால, நாம புது எண்ணெய் உள்ளவங்களா இருக்கணும்னு தேவன் எதிர்பாக்குறார்.

எபிரேய மொழில “புதிய” என்ற வார்த்தைக்கு raanan என்ற வார்த்தை இருக்கு, அதோட அர்த்தம் “பச்சை” என்பதாகும். சுத்தமான ஒலிவ எண்ணெய் பச்சை நிறத்துல இருக்கிறத பாருங்க. பச்சை நிறம் புதுமையையோ அல்லது இளமையையோ குறிக்குது. பழைய உடன்படிக்கையின் எண்ணெய் பழசாகிட்டதுனால, அந்த எண்ணெய் புதிய உடன்படிக்கைக்கு உரியதா இருக்கணும்.

தேவன் உங்க உடலை குணமாக்குறதுக்கு முன்ன நீங்க அவருக்கு கீழ்ப்படியணும்னு பழைய உடன்படிக்கை சொல்லுது. சிலர் அத நம்புறாங்க. அப்ப அவங்க விசுவாசம் பழசாகுது. தவறான நம்பிக்கையின் காரணமாக அவங்க மெதுவா தேவனை விட்டு விலகுவாங்க.

ஆனா புது உடன்படிக்க அப்படி கற்றுத் தரலங்கிறது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தோல்விகள் இருந்தாலும் தேவன் உங்களை சுகமாக்குவார்னு அது போதிக்குது. யாக்கோபு 5:15ல முன்ன பார்த்த மாதிரி ஒருத்தர் பாவம் செஞ்சுருந்தாலும், விசுவாச ஜெபம் மூலமா தேவன் அந்த நபரோட பாவங்கள மன்னிக்கிறதுனால அவர் தகுதி இல்லாதவர்ன்னு உணர தேவையில்லை. மிகப்பெரிய தடையான பாவம் நீக்கப்பட்டதுக்குப் பிறகு தேவன் கிட்ட இருந்து நாம பெற்றுக் கொள்றது தடுக்க என்ன இருக்கு?

நாம ஒலிவ எண்ணெய்க்காக ஜெபம் செஞ்ச பிறகு, அது பரிசுத்த அபிஷேக எண்ணையாக மாறுது. “பரிசுத்தம்னா” தேவனோட நோக்கங்களுக்காக பிரிக்கப்பட்டதுன்னு அர்த்தமாகும். இருள்ல இருந்து ஒளிக்கும், குறைவிலிருந்து நிறைவுக்கும், நோயிலிருந்து முழுமையான ஆரோக்கியத்துக்கும் “பிரித்தெடுக்கப்பட்டதுன்னு” அர்த்தமாகும். இவ்வாறு அபிஷேக எண்ணெய் இனி வரும் சாதாரண எண்ணையாக இருக்காது. அடுத்த வசனம் இப்படி சொல்லுது:

என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

– சங்கீதம் 92:11

நீங்க பசுமையான அல்லது புது எண்ணெயால அபிஷேகம் செய்யப்படுறப்ப அது உங்களோட கண்கள்லயும், காதுகள்லயும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களோட கண்கள் வெற்றியை காணும், உங்களோட காதுகள் வெற்றிய கேட்கும். அப்ப “துன்மார்க்கரோ” அல்லது உங்களோட எதிரிகளோ செய்றது வாய்க்காது, ஆனா நீங்க செய்றது வாய்க்கும்!

நீங்க பைபிளை படிக்கிறதுக்கு முன்னகர்த்தர் கிட்ட “கர்த்தாவே, என் கண்களை நான் அபிஷேகம் செய்றேன். பைபிள் வசனங்கள்ல உங்கள புதுசா காணும்படி எனக்கு உதவுங்கன்னு” சொல்லலாம். அப்ப நீங்க பைபிள் ஜீவனோடு இருக்கிறத பாப்பீங்க. நீங்க உங்களோட சொந்த புத்திசாலித்தனத்தை நம்பாமல், உங்களுக்கு வெளிப்பாடுகள் கிடைக்கிறதுக்கும், எல்லா சத்தியங்களுக்குள்ளேயும் உங்கள வழிநடத்துறதுக்கும் பரிசுத்த ஆவியானவர சார்ந்திருப்பீங்க.

நுகங்கள் அழிக்கப்பட்டன, சுமைகள் நீக்கப்பட்டன

அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால நுகம் [சாத்தானின் கட்டு] முறிந்துபோம்.

– ஏசாயா 10:27

சில நேரங்கள்ல நீங்க மன அழுத்தத்தோடும், நிறைய கவலைகளோடும் இருக்கிறதாவும் உணர்வீங்க. ஒரு சண்டை அல்லது வாக்குவாதத்துக்குப் பிறகு உங்க தோள்கள்லஒரு பாரத்தை உணர்வீங்க. மேலே இருக்கிற வசனத்துல உள்ள “அவன்” என்ற வார்த்தை அக்காலத்துல இஸ்ரேலின் எதிரிகளா இருந்த அசீரியர்களை குறிக்குது. இன்னைக்கு அது உங்கள ஒடுக்க முயற்சி செய்கிற அந்தி கிறிஸ்துவின் ஆவியையோ அல்லது பிசாசையோ குறிக்குது. ஒரு மாடு வண்டிய இழுக்கிறதுக்காக அதோடு கழுத்துல நுகம் பூட்டப்பட்டிருக்கும். அதே மாதிரி தான் பிசாசு நீங்க எங்க போகணும்னு அவன் விரும்புறானோ, அங்க உங்கள இழுத்து கொண்டு போக உங்க கழுத்துல ஒரு நுகம் பூட்ட விரும்புறான். உதாரணமா நீங்க நிக்கோடின் பழக்கத்துக்கு அடிமையா இருந்தீங்கன்னா, பிசாசு உங்ககிட்ட, “நீ புகை பிடிக்காமல் இருக்க முடியாது, நீ என்னோட கட்டுப்பாட்டுல இருக்கேன்னு” சொல்லுவான்.

ஆனா இந்த நுகத்தை அழிக்கக் கூடிய ஒன்னே ஒன்னு அபிஷேக எண்ணெய் தான் ஆகும். “பாஸ்டர் பிரின்ஸ், அந்த எண்ணை பரிசுத்த ஆவியானவரோட வல்லமைய குறிக்குதுன்னு” நீங்க சொல்லலாம். ஆமா, இதுல பரிசுத்த ஆவியானவர் 100% சம்பந்தப்பட்டிருக்கார். ஆனா இந்த இடத்துல தேவன் “அபிஷேக எண்ணெயப்” பயன்படுத்தும்படி சொல்றார். அப்ப பரிசுத்த ஆவியானவரோட வல்லமை உங்க வாழ்க்கைல இருக்கிற ஒவ்வொரு சாத்தானோட கட்டுகளையும் அழிச்சுடும்.

அந்த நுகம் ‘உடைக்கப்படாம’ ‘அழிக்கப்படும்கிறத’ கவனிங்க. இந்த ரெண்டு வார்த்தைகளுக்கும் நடுவுல ஒரு வித்தியாசம் இருக்கு. ஒரு பொருள் உடையுறப்ப அத சரி பண்ணிடலாம். ஆனா ஒரு பொருள் அழிக்கப்பட்டதுன்னா அதை சரி செய்யவே முடியாது. தேவனோட அபிஷேகஎண்ணெய் உங்க வாழ்க்கைல இருக்கிற எல்லா சாத்தானோட கட்டுகளையும் சரிசெய்ய முடியாதபடிக்கு அழிச்சுடும்.

நேரத்தையும் குடும்ப வாழ்க்கையையும் புதுப்பித்தல்

பிசாசு உங்கள தாக்க நினைக்கிறப்ப அவன் உங்களுக்கு எதிரா வர்ற வழிகள்ல ஒன்னு உங்ககிட்ட இருந்து திருடுறதுதான். உபாகமம் 28வது அதிகாரத்துல சாபங்களப் பற்றி சொன்ன பகுதில கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான சத்தியம் இருக்கு.

மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும். திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும். ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.

– உபாகமம் 28:38–40

இங்கே இருக்கிற “விதைங்கிறது” தானியத்த குறிக்குது, அதோடு “திராட்சை தோட்டங்கள்ல” உங்களுக்கு திராட்சை ரசம் கிடைக்கும். பிசாசு உங்களோட தானியத்தையும், திராட்சைரத்தையும் அழிக்க துடிக்கிறான்கிறத கவனிங்க. அதனாலதான் அவன் வெட்டுக்கிளிகளையும், புழுக்களையும் அனுப்புறான். அவன் உங்களோட எண்ணெய்யயும் அழிக்க முயற்சி செய்றான்.

பிசாசு உங்க வாழ்க்கைல இருந்து இந்த காரியங்களை ஏன் எடுத்துக்க விரும்புகிறான்கிறத தெரிஞ்சுக்க அடுத்த வசனத்தை பாக்கலாம்.

நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

– உபாகமம் 28:41

தானியம், திராட்சை ரசம் மற்றும் எண்ணெய் இது எல்லாம் குறைவுபடுற நேரமெல்லாம் உங்க குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும். நீங்க ஆழமா நேசிக்கிற பிள்ளைகள் உங்களுக்கு இருக்கலாம், ஆனா அவங்க வளர்ந்த பிறகு நீங்க அவங்கள இழந்திடுவீங்க. தவறான சகவாசத்தில் சிக்கி, அவங்க குடிப்பழக்கத்துக்கும், பார்ட்டிகளுக்கும், போதைப் பொருள் பழக்கங்களுக்கும் அடிமையாகிடுவாங்க.
ஆனா தேவன் உங்களுக்காக ஒரு பாதையை ரெடி பண்ணி வச்சிருக்கார்.

அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிறையும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.

– யோவேல் 2:23–24

எபிரேயத்துல “முன்மாரி”, மழைங்கிறதுநீதியப் போதிக்கிற ஒரு ஆசிரியரக் குறிக்குது. தேவன் உங்களுக்கு ஒரு நீதியின் ஆசிரியரை அனுப்புறதுக்கான காரணம் சர்ச், உங்க வீடு மற்றும் நீங்க வேலை பார்க்கிற இடம் தானியத்தால நிரம்பி, புதிய திராட்சை ரசத்தாலும் எண்ணெயாலும் நிரம்பி வழியனும்கிறதுக்காகதான்னு அடுத்த வசனம் சொல்லுது.

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
– யோவேல் 2:25

இங்க “பட்சிக்கும் வெட்டுக்கிளிங்கிறது” புழுவக் குறிக்குது. கிங் ஜேம்ஸ் பைபிள் “palmerworm”. என்ற வார்த்தையை பயன்படுத்துது. உங்க வாழ்க்கை தானியம், திராட்சை ரசம் மற்றும் எண்ணெயால் நெறஞ்சுருக்கிறப்ப, வெட்டுக்கிளிகளும், புழுக்களும் பட்சித்தவருஷங்களின் பலனை தேவன் உங்களுக்கு திரும்ப தருவார். பாஸ்டர் பிரின்ஸ் “வருஷங்கள் கடக்கிறப்ப, அவைகளும் போயிடுச்சுன்னு” நீங்க சிலர் சொல்வீங்க. ஆனா காலங்கள உருவாக்கியவர் வீணான வருஷங்களின் பலனை உங்களுக்கு திரும்ப தருவேன்னு அவர் சொல்றார்.

ஒலிவமரத்தின் அழகை வெளிப்படுத்துதல்

ஒலிவ மரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறதுனாலநீங்க அந்த மரத்தப் பற்றி படிக்கிறப்பநீங்க ஆசீர்வதிக்கப்படுவீங்க. இன்னைக்கு நீங்க கெத்சமெனே தோட்டத்துக்கு போவீங்கன்னா, முறுக்கிய தண்டுகளோடு கூடிய ரொம்ப பழமையான ஒலிவ மரங்கள பாப்பீங்க. சுவாரசியமா பெரும்பாலான மரங்களை மாதிரி இல்லாம ஒலிவ மரத்தோட தண்டு உள்ளுக்குள்ள காலியா இருக்கும்.

ஒலிவ மரத்தோட தண்டு ஏன் உள்ள காலியா இருக்கு? ஒலிவ மரம் நம்ம ஒவ்வொருத்தரையும் குறிக்குது, நாமநம்மளையோ அல்லது சாத்தானையோ கொண்டு இல்லாம தேவனை மட்டுமே தனக்குள்ள கொண்டிருக்கிறது காக அவரால் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை நாம் எப்போதுமே ஞாபகத்துல வச்சுக்கணும்னு தேவன் விரும்புகிறார்.

தங்களுக்கான தேவனோட நோக்கத்தை நிறைவேற்ற அல்லது ஏத்துக்க மறுக்கிறவங்க உள்ளுக்குள்ள ஒரு வெறுமையை உணர்வாங்க. தங்களை திருப்திப்படுத்த அவங்க நிறைய காரியங்களை செய்யலாம்–இன்பத்துக்காக வாழலாம், நிறைய பணம் சம்பாதிக்கலாம். அவங்களுக்கு புடிச்சதெல்லாம் அவங்க பெறலாம்— ஆனா கடைசில அவங்க வெறுமைய மட்டும்தான் உணர்வாங்க. நீங்க அவங்களோட கண்களை உத்து பார்த்தீங்கன்னா, நீங்க கூட வெறுமையை பாக்கலாம். ஆனா தேவனால நிரம்பி இருக்கிறவங்களை நீங்க பார்த்தீங்கன்னா, அவங்க போற இடத்துலெல்லாம் அவங்களோட கண்கள்ல ஒரு நெருப்பையும், அவங்களோட நடைகள்ல ஒரு துள்ளலையும் நீங்க பார்ப்பீங்க.

பைபிள்ல தேவன் தன்னோட ஜனங்களான இஸ்ரவேலரை “பச்சையான ஒலிவமரம்னு” விவரிக்கிறார் (எரேமியா 11:16). முன்பு புறஜாதியாராக இருந்த நாம், இந்த ஒலிவமரத்தில் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 11:13-25). ஒலிவ மரம் நீண்ட காலம் வாழக்கூடியது. அதனால நீங்களும் ஒரு நல்ல நீண்ட வருஷங்கள் வாழ்வீங்கன்னு எதிர்பார்க்கலாம். ஒலிவ மரம் எப்படி நீண்ட காலம் வாழுதுன்னு நீங்க எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா?

சிலுவையின் மூலம் வெளிப்பட்ட ஒலிவ எண்ணையின் நன்மைகள்

சில வருஷங்களுக்கு முன்னாடி இயேசுவின் சொந்த ஊரான கப்பர்நகூமில் நான் இருந்தப்பநான் ஒரு ஒலிவ எண்ணெய் ஆலையப் பார்த்தேன். ஒலிவப் பழங்கள் அந்த ஆலைலபோடப்பட்டு, ஒரு பெரிய கல்லை கொண்டு நசுக்கப்படுவதா வழிகாட்டி விளக்கினார். முதல் முறை பிழிவதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் யூத ஆலயத்தில் விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படுது. ரெண்டாவது முறை பிழிவதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மருந்துக்காக பயன்படுத்தப்படுது. அதே சமயம் மூணாவது மற்றும் கடைசி முறை பிழிவதிலிருந்து கிடைக்கும் என்னை சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படுது.

அந்த நேரத்துல “கெத்செமனேயில் இயேசுவுக்கு இதுதான் நடந்ததுன்னு” பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார். “எண்ணெய் ஆலைன்னு” அர்த்தமுள்ள கெத்செமனே தோட்டத்துல இயேசு இருளின் நேரத்துல முதல் முதல்ல நசுக்கப்பட்டார் (லூக்கா 22:53). அதனால நாம ஒளில இருக்கவும், ஒளில நடக்கவும் முடியும்.

இயற்கையாகவே உங்களோட போட்டியாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகளால் பார்க்க முடியாததை பார்க்கும்படி அந்த ஒளி உங்களுக்கு செய்து. பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு ஆவிக்குரிய அறிவொளியை தர்றார். உதாரணமா ஜனங்க தாவீத ஆடு மேய்க்கிற ஒரு வாலிபனா பார்த்தாங்க. ஆனா சாமுவேல் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் கீழ, தாவீது கிட்ட ஒரு ராஜாவ பார்த்தான். எனவே அபிஷேகத் தைலம் தேவன் பாக்குறது மாதிரியே உங்கள பாக்க வைக்கும். அவர் பாக்குற மாதிரியே நீங்க பார்க்கிறப்ப அவர் அனுபவிப்பதை நீங்களும் அனுபவிப்பீங்க.

இயேசு கெத்செமனேல இருந்து கொண்டு வரப்பட்டு வாரினால் அடிக்கப்பட்டதற்கு பிறகு ரெண்டாவது பிழிதல் நடந்துச்சு. இயேசுவே நம்மோட “மருந்தாவார்,” ஏன்னா அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசாயா 53:5).

எங்க சர்ச்சை சேர்ந்த ஒருத்தர் தன் இடது தொடைல கொஞ்ச நாட்களா சொறி சிரங்கு இருந்ததா என்கிட்ட சொன்னார். அவர் தன்னோட தொடைல பலவிதமான மருந்துகளை பூசியிருந்தார். ஆனா அந்தச் சிரங்கு குணமாகல. நான் முதல்முறையா அபிஷேக எண்ணெய் பற்றி பிரசங்கம் செஞ்சப்ப, அவர் கொஞ்சம் ஒலிவஎண்ணெய வாங்கி, அதுக்காக ஜெபம் செஞ்சுட்டு, ஒரு வாரம் அந்த எண்ணெயை பூசத்தொடங்குனார். இன்னைக்கு அவர் சொறிசிரங்குல இருந்து குணமாகிட்டார்!

எண்ணெய் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட கடைசி பிழிதல் சிலுவைல நடந்துச்சு. பரிசுத்தமும், நீதியுமான தேவனோட முக்கியமான கோபத்தின் கீழே இயேசு நசுக்கப்பட்டார். நம்மோட பாவங்களுக்குரிய நியாயத்தீர்ப்பையும், தண்டனைகளையும் அவர் அனுபவிச்சார். அவரோட ரத்தம்நம்மள நம்மோட பாவங்கள்ல இருந்து சுத்திகரிச்சுருக்கு.

இயற்கையான ஒலிவ எண்ணெய நீங்க சாப்பிட்டாலோ இல்லனா பயன்படுத்தினாலோ தவிர அது உங்க மேல எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனா இயேசுவின் நாமத்தில் உங்க கைல இருக்கிற இயற்கையான ஒலிவ எண்ணெய் பாட்டில்மேல கை வச்சி நீங்க ஜெபம் பண்றப்ப, தேவன் அது தனியா பிரிக்கிறார், அப்ப அது பரிசுத்தமான அபிஷேக எண்ணெயா மாறுது. தேவனோட மகிமைக்காக அந்த எண்ணெய்ப் பயன்படுத்தி, உங்க வாழ்க்கைல அவரோட அற்புதங்களையும், தேவைகளை பூர்த்தி செய்றதையும், புதுப்பித்தலையும் பாருங்க!

அபிஷேக எண்ணெய்க்கான ஜெபம்

உங்களோட உள்ளூர் சர்ச் பாஸ்டரையோ, அல்லது தலைவரையோ உங்களுக்காக ஜெபிக்கவும், உங்கள் எண்ணெயை அர்ப்பணிக்கவும் நீங்கள் அணுகலாம். கிறிஸ்துவுக்குள் நீங்க ஒரு ராஜாவாவும், ஆசாரியனாவும் (வெளிப்படுத்துதல் 1:6) இருக்கிறதுனால, நீங்களும் அந்த எண்ணெய்காக ஜெபம் பண்ணி அதை பரிசுத்தமா இருக்கும்படி பிரிக்கலாம். பரிசுத்தப்படுத்துவதற்கான ஒரு ஜெபம் இங்கே தரப்பட்டிருக்கு:

பரலோகத்தில் உள்ள அன்புள்ள பிதாவே, இந்த எண்ணெய் பாட்டில் அது தனியா வெறும் எண்ணெய் மட்டும்தான். ஆனா பிதாவே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே என் கைகள்ல நான் பிடிச்சிருக்குற இந்த எண்ணெய அபிஷேகம் செய்யும்படி உங்ககிட்ட கேட்கிறேன். இத அபிஷேகம் செஞ்சு, உங்களோட பரிசுத்த நோக்கங்களுக்காக இது தனியா பிரிங்க. இது ஒரு பரிசுத்த அபிஷேக எண்ணெயா மாற்றுங்க.

பிதாவே இதை உங்க மகிமைக்காக பயன்படுத்துங்க. மாற்கு 6:13 மற்றும் யாக்கோபு 5:14ல இருக்கிற உங்க வார்த்தையின் படியே இந்த எண்ணெய் பூசப்படுறவங்க ஆரோக்கியம் உள்ளவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும், இளமை தோற்றம் உள்ளவர்களாகவும் மாத்துங்க. வியாதிகளும், நோய்களும் அவங்கள விட்டு தூரமா விலகட்டும்.

பிதாவே இந்த எண்ணெய் இப்ப பரிசுத்தமான மற்றும் புனிதமான நோக்கங்களுக்காக பிரித்து வைக்கப்படுறதுனால அது உங்க மகிமையையும், உங்க அற்புதத்தையும் கொண்டு வரட்டும்னு ஜெபம் பண்றேன். அது எங்க பூசப்பட்டாலும், அது இருள ஒளியா மாற்றட்டும். குறைவ நிறைவா மாற்றட்டும். அது நோயை சுகமா மாற்றட்டும். அங்கு அற்புதமான புதுப்பித்தலும் பலனும் உண்டாகட்டும்.

பிதாவே, இப்ப இந்த எண்ணெய் பாட்டில் ஒரு பரிசுத்த அபிஷேக எண்ணெயா மாறிட்டதுக்காக உங்களுக்கு நன்றி சொல்றேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.

இதுபோல இன்னும் பல

போலி கிருபையின் ஆபத்துகளை எச்சரிக்கையுடன் கவனியுங்கள்

நாம் மிகுந்த உற்சாகம் நிறைந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போஸ்தலர் பவுலுக்கு முதலில் அள...

30 நிமிட வாசிப்பு
View details

கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்

தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...

11 நிமிட வாசிப்பு
View details

நீதி என்பது ஒரு ஈவு

உங்களோட நற்செயல்களால தேவனோட ஆசீர்வாதங்களை உங்களால பெற முடியாது. ஆரோக்கியம், கிருபை மற்றும் வெற்றி உட...

1 நிமிட வாசிப்பு
View details

இன்று தேவனுடைய பாதுகாப்பில் நடங்கள்

தேவனோட வார்த்தைல அவரோட அன்பான பிள்ளைகளுக்கு அவரோட பாதுகாப்பின் வாக்குறுதிகள் நிரம்பி இருக்கு.‌ உதாரண...

4 நிமிட வாசிப்பு
View details

உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...

5 நிமிட வாசிப்பு
View details

உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)

அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...

7 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

5 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

4 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)

வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அ...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்எ...

5 நிமிட வாசிப்பு
View details

உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை பகுதி (பகுதி 3/3)

உங்களுக்கு இருக்கிற குறைவுகளால சோர்வையும் பாரத்தையும் உணர்றீங்கன்னா, வருத்தப்படாதீங்க! உங்களோட பயங்...

5 நிமிட வாசிப்பு
View details

உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 2/3)

உங்களுக்கு இருக்கிற குறைவுகளால சோர்வையும் பாரத்தையும் உணர்றீங்கன்னா, வருத்தப்படாதீங்க! உங்களோட பயங்க...

6 நிமிட வாசிப்பு
View details

உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 1/3)

உங்களிடம் உள்ள குறைகளால் நீங்கள் சோர்வடைந்து, பாரம் சுமப்பவராக உணர்ந்தால், கவலைப்படாதீர்கள்! உங்களைய...

6 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்