உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை பகுதி (பகுதி 3/3)
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை பகுதி (பகுதி 3/3)
இதன் மூலம் பகிர்ந்திட
உங்களுக்கு இருக்கிற குறைவுகளால சோர்வையும் பாரத்தையும் உணர்றீங்கன்னா, வருத்தப்படாதீங்க! உங்களோட பயங்கரமான கனவுகளுக்கு அப்பால் உங்களையும், உங்க சூழ்நிலையையும் மாற்ற தேவனோட எல்லையற்ற கிருபை இருக்கு. நீங்க தோற்றுப் போய் இருந்தாலும் கூட தேவன் ஏன் இன்னும் உங்களுக்கு தன்னோட கிருபையை தர்றார்ங்கிறதயும், அதை நீங்க எப்படி பெறலாம்னும் இந்த மூணு பகுதி தொடர்ல ஜோசப் பிரின்ஸ் உங்களுக்கு காட்டுவார். கடந்த காலத்தில் நீங்க தப்பு செஞ்சு இருந்தாலும் கூட தேவனால் இப்பயும் உங்களை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும் நீங்க கத்துக்கோங்க.
கிருபை–உங்களுடைய பலவீனத்திற்கு பதில்
உங்களோட பலவீனங்கள் மற்றும் இயலாமைகள்ல கர்த்தர் கிட்ட நேர்மையா இருந்து உதவிக்காக அவர் கிட்ட நீங்க திரும்புறப்ப உங்களோட பள்ளத்தாக்குல இருந்து உங்களை வெளியே கொண்டு வந்து விடுதலை, பூரணம் மற்றும் வெற்றியை நோக்கி உங்களை நடத்துவார். நீங்க அவர்கிட்ட கேட்கக்கூடிய எல்லாத்தையும் விட அவர் உங்களுக்கு ஓய்வு தரவும், புதுப்பிக்கவும், ஆசீர்வதிக்கவும் செய்வார். இயேசுவோட மிகுதியான கிருபையும், அற்புதம் செய்ற வல்லமையும் உங்களுக்காக நீங்க செய்ய முடியாதத உங்களுக்காக செய்யும்.
அவருடைய கிருபை உங்களுக்கு போதும்; உங்களுடைய பலவீனத்திலே அவருடைய பலம் பூரணமாய் விளங்கும்.
அவருடைய கிருபை உங்களுக்கு போதும்; உங்களுடைய பலவீனத்திலே அவருடைய பலம் பூரணமாய் விளங்கும்கிறத நீங்க பாப்பீங்க (2 கொரிந்தியர் 12:9). இந்த உண்மையை நிரூபிக்கிற ஒரு வல்லமையான சாட்சியை உங்ககிட்ட நான் பகிர்ந்துக்கிறேன்.
நியூசிலாந்தச் சேர்ந்த ஒரு அருமையான சகோதரர் தேவனோட கிருபை எப்படி தனக்கு இருந்த நீண்டகால போதைப் பழக்க அடிமைத்தனத்துல இருந்து தன்னை விடுதலையாக்குச்சுன்னு எனக்கு எழுதியிருக்கார். அவர் ரட்சிக்கப்பட்டதற்கு பிறகும் கூட ஆபாச படம், சுய இன்பம் மற்றும் நிக்கோடின் போதை பழக்கத்தோடு போராடிக்கிட்டு இருந்தார். ஒரு கிறிஸ்தவரா இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் செய்யக்கூடாதுன்னு அவருக்கு தெரிஞ்சதுனால, மிகவும் குற்ற உணர்ச்சியோடு, வேதனையோடு தேவனை விட்டு ரொம்ப தூரமா இருக்கிறதா உணர்ந்தார். இந்த ரெட்டை வாழ்க்கை வாழ்றத அவர் வெறுத்தார், அதோடு இந்த போதை பழக்கங்கள்ல இருந்து வெளியே வரதன்னால முடிஞ்ச எல்லாத்தையும் அவர் முயற்சி செஞ்சார். அவர் சிறப்பா முயற்சி செஞ்சாலும் கூட அவரோட மன உறுதி குறைஞ்சப்ப மறுபடியும் மறுபடியும் அவர் தோற்றுப் போனார். பத்து வருடங்களுக்கு மேல இந்த வெறுப்பான தனிமை போராட்டத்தை அவர் போராடுனார்.
பிறகு அவருக்கு தேவனோட மிகுதியான கிருபை அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து அவர் அதை பெற்றப்ப எல்லாமே மாறத் தொடங்குச்சு. அவர் இப்படி எழுதியிருக்கார்:
பாஸ்டர் பிரின்ஸ் நான் உங்களோட Destined To Reign புக்க படிச்சு முடிச்சதுல இருந்துதேவன் என் வாழ்க்கைல அற்புதங்களை செஞ்சுருக்கார். நான் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பேன். பல தடவை நிறுத்த முயற்சி செஞ்சாலும் அதுல நான் வெற்றி பெறல.
ஆனா Destined To Reign புக்க படிச்ச ரெண்டு மாசத்துக்குள்ள சிகரெட் மேல இருந்த ஆசை எனக்கு முற்றிலும் போயிடுச்சு. நான் என்னோட சொந்த முயற்சில முயற்சி செஞ்சப்ப இருந்த ஏக்கம் மாதிரி எனக்கு இப்ப இல்ல. எல்லா மகிமையும் தேவனுக்கே உண்டாகட்டும்!
பத்து வருடங்களுக்கு மேல ஜெயிக்கநான் முயற்சி செஞ்சிருந்தேன்,ஆனா இதுக்கு நான் சத்தியத்தை தெரிஞ்சுக்கவும், சிலுவைல இயேசுவின் முடிக்கப்பட்ட வேலைல ஓய்வு எடுப்பது மட்டும் தான் தேவைப்பட்டுச்சு.
தேவனோட கிருபையால என்னோட பாலியல் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையானேன். எட்டு வாரங்கள் அல்லது அதுக்கு மேற்பட்ட குறுகிய காலமே என்றாலும், இது எனக்கு ரொம்ப பெரிய விஷயமாகும், ஏன்னா இத ஜெயிக்க நான் ரொம்ப கடினமா முயற்சி செஞ்சுருக்கேன். இது இப்ப மிகவும் எளிமையானதா இருந்துச்சு.
இயேசுவின் முடிக்கப்பட்ட வேலைலயும், அவரோட மன்னிப்புலயும், அவரோட வெற்றிலயும், அவரோட கிருபைலயும், அவரோட அன்புலயும் நான் ஓய்வெடுக்க முடிவு செஞ்சேன். அப்ப ஆபாசம் மற்றும் சுய இன்பம் என்ன ஆதிக்கம் செலுத்த வலிமை இல்லாமல் போச்சு
இது உண்மையாவே ரொம்ப அற்புதமாகும், ஏன்னா முக்கியமா இதை ஜெயிக்க பத்து வருஷங்களுக்கு மேல நான் முயற்சி செஞ்சு இருந்தேன், ஆனா இப்பநான் சத்தியத்தை தெரிஞ்சுக்கவும், சிலுவைல இயேசுவின் முடிக்கப்பட்ட வேலைல ஓய்வு எடுப்பது மட்டும் தான் தேவைப்பட்டுச்சு.
அது மட்டும் கிடையாது. நாலு மாசங்கள் வேலையில்லாமல் இருந்ததுக்குப் பிறகுஅவருக்கு ஒரு புது விற்பனை வேலை கிடைச்சுச்சு, அதுல அவர்சிறப்பா செயல்படுறார், இந்த ஆசீர்வாதத்துக்கான, அவருக்கு இருக்கிறவிற்பனை செயல்திறனுக்கான புகழ்ச்சியை அவர் கர்த்தருடைய தகுதி பார்க்காத கிருபைக்கு செலுத்துறார். இன்னைக்கு இந்த சகோதரர் விடுதலை, சமாதானம் மற்றும் ஓய்வின் வாழ்க்கையை அனுபவிச்சுக்கிட்டு இருக்கார்:
கிருபைக்கு கீழஇருக்கிறதுன்னா என்ன, இயேசுவின் முடிக்கப்பட்ட வேலைல எப்படி ஓய்வு எடுக்கிறதுன்னு இப்ப நான் புரிஞ்சுகிட்டேன். இப்ப நான் பாவ உணர்வோடு இருக்கிறதுக்கு பதிலாநான் தொடர்ந்து என் மன்னிப்பு பற்றிய உணர்வோடும், மேலும் நான் கிறிஸ்துவுக்குள் தேவனோட நீதியா இருக்கேன்னு எப்பவுமே அறிக்கை செய்றவனா இருக்கேன்.
நீதி என்பது எப்பவுமே என்னோட செயல்கள் மூலமா எனக்கு கிடைக்கிற ஒரு வெகுமதியா நினைச்சேன், அதோடு என்னோட செயல்கள் மூலமா அத நான் சம்பாதிக்க முயற்சி செஞ்சேன், ஆனா இப்ப நான் இயேசு சிலுவைல முடித்த செயல் மூலமா நீதியின் பரிச பெற்றிருக்கேன்னு நான் தெரிஞ்சுகிட்டேன்.
என் பாவத்தை விட தேவனோட கிருபை பெரியதுன்னு நான் தெரிஞ்சுக்கிறதும், மேலும் வெற்றிக்காக நான் போராட வேண்டியது இல்லன்னும் தெரிஞ்சுக்கிறதும், ஆனா அவரோட வெற்றில நாம ஓய்வு எடுக்கலாம், வாழ்க்கையை ஆளுகை செய்யலாம்னு நாம தெரிஞ்சுக்கிறது நம்மள ஊக்குவிக்கிறதா இருக்கும். அற்புதமாய் இருக்கும். இன்னைக்கு இதுவரைக்கும் எனக்குள்ள இல்லாத ஒரு நிம்மதி எனக்கு இருக்கு. மேலும்ஒரு மிகப்பெரிய விடுதலையஉணர்றேன், நல்ல விஷயங்கள் மட்டுமே என் வழில வரும்கிற ஒரு நம்பிக்கையோடு இருக்கேன்.
அன்பானவர்களே அதுதான் சரியான நம்பிக்கையின் வல்லமையாகும். இந்த சகோதரர் தேவனோடகிருபையின் சத்தியத்தை கேட்டு அத நம்புனப்ப, அவரோட மன உறுதி, குற்ற மனப்பான்மை மற்றும்சுய முயற்சி செய்ய முடியாதஒரு பரிசுத்த வாழ்க்கை முறைய தந்துச்சு. அதுதான் சுவிசேஷத்தின் வல்லமையாகும்!’
இந்த சகோதரர் மாதிரி உங்களோட பலவீனத்துல தேவனோட பலம் பூரணமா விளங்கறது நீங்க பாக்க விரும்புறீங்கன்னா, தேவனோட பரிபூரண கிருபை பற்றிய உங்களோட வெளிப்பாட்டநீங்க தொடர்ந்து கேட்கவும் அதுல வளரவும் உங்களை நான் ஊக்குவிக்கிறேன்.
அப்படி நீங்க செய்றப்பநீங்க உங்களோட பலவீனத்தின்மேல வெற்றியா நடக்கிறத நீங்க பாப்பீங்க. இந்த அருமையான சகோதரர் மாதிரியே அந்த அடிமைத்தனத்தின் கட்டுல இருந்து விடுதலையாகி, உங்களுக்கு இனி அது பற்றிய எந்த ஒரு ஆசையும் இல்லாம இயேசுவின் விடுதலைல நடக்கிறத நீங்க பாப்பீங்க. உங்க சரீரம் மூலமா வாழ்க்கை மூலமா தேவனை மகிமைப்படுத்த புது தெய்வீக ஆசைகளோடு ஒரு புது நபரா நீங்க மாறி நடக்கிறது பாப்பீங்க.
விசுவாசத்தின் மூலம் கிருபையினால்
நீங்க கடினமான நேரத்தை எதிர்கொண்டு இருந்தாலும் சரி, உங்களுக்குள்ள பலவீனத்தை நீங்க பலவீனத்தை எதிர்கொண்டாலும் சரி, நீங்க பலவீனமா இருக்குறப்ப அவரோட கிருபையாலயும், கிறிஸ்துவின் அற்புதங்களை செய்யும் வல்லமையாலயும் நீங்க பலமா இருக்கீங்கங்கிறத புரிஞ்சுக்கணும்னு தேவன் விரும்புறார் (2 கொரிந்தியர் 12:10).
நாம் அவருடைய கிருபையை எவ்வளவு அதிகமாகப் பெற்று, அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய பலவீனமான பகுதிகளில் அவருடைய கிருபை மிகுதியாக இருப்பதை அனுபவிப்போம்.
பலவீனம் தாக்குதல் மற்றும் பாவம் எவ்வளவு அதிகமா இருக்குதோ அது அவரோடு நன்மை தயவு மற்றும் உங்களுக்கான அற்புதமான திட்டங்களின் மறுக்க முடியாத உதாரணமா மாறுற வரைக்கும் அவரோட மிகுதியான கிருபை உங்க தேவைகளை பூர்த்தி செய்யவும் விடுவிக்கவும் மாற்றவும் இருக்கும்.
இயேசுவை நோக்கி பாக்குறதும் அவரோட முடிக்கப்பட்ட வேலையை தொடர்ந்து தியானிக்கிறதும்நாம அனுபவிக்க விரும்புற மாற்றத்தை விசுவாசத்தால தொடர்ந்து பாக்குறதும் தான் நம்மோட பகுதியாகும். நாம அவரோட கிருபைய எவ்வளவு அதிகமா பெற்று, அதுக்காக அவருக்கு நன்றி சொல்றோமோ, அவ்வளவு அதிகமா நம்மோட பலவீன பகுதிகள்ல அவரோட மிகுதியான கிருப இருக்கிறத நாம அனுபவிப்போம்.
அன்பானவர்களே, நாம எல்லாம் சுய முயற்சிகள்ல இருந்து விலகி, நம்மோட பலவீனங்கள தேவன் கிட்டையும், அவரோட மாற்றுகிற கிருபை கிட்டயும் தயங்காம ஒப்புக்கொடுப்போம். அவரோட கிருபை ஏற்கனவே நம்மோட சோதனைகள் மற்றும் பலவீனப் பகுதிகள்ல மிகப்பெரிய அளவுல விடுவிக்கப்பட்டு இருக்குங்கிறதநாம நம்ப முடிவு செய்றப்ப, இந்த huperperisseuo கிருபை அவரோட மிகப்பெரிய மகிமைக்காக நம்மள விடுதலை செஞ்சுநம்மள பூரணமானவங்களா ஆக்கும்!
இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.
இதுபோல இன்னும் பல
போலி கிருபையின் ஆபத்துகளை எச்சரிக்கையுடன் கவனியுங்கள்
நாம் மிகுந்த உற்சாகம் நிறைந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போஸ்தலர் பவுலுக்கு முதலில் அள...
நீதி என்பது ஒரு ஈவு
உங்களோட நற்செயல்களால தேவனோட ஆசீர்வாதங்களை உங்களால பெற முடியாது. ஆரோக்கியம், கிருபை மற்றும் வெற்றி உட...
ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றிபெறுதல் (பகுதி 1/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 2/3)
உங்களுக்கு இருக்கிற குறைவுகளால சோர்வையும் பாரத்தையும் உணர்றீங்கன்னா, வருத்தப்படாதீங்க! உங்களோட பயங்க...
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 1/3)
உங்களிடம் உள்ள குறைகளால் நீங்கள் சோர்வடைந்து, பாரம் சுமப்பவராக உணர்ந்தால், கவலைப்படாதீர்கள்! உங்களைய...