இது இயேசுவோடு ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவோருக்குரியதாகும்

5 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு
ARTCL_171

உங்களோட தினசரி வாழ்க்கைல இயேசுவை இன்னும் அதிகமா எப்படி பங்கெடுக்க வைக்கிறதுன்னு நீங்க எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா? ஆனா அது எப்படின்னு உங்களுக்கு தெரியலையா? ஒரு தடவ நீங்க இயேசுவை காலைலசாப்பிட கூப்பிட்டு இருப்பீங்க. ஆனா அடுத்த நொடியே அவரைப் பற்றி ஒரு தடவை கூட நினைக்காம, அன்னைக்கு மீதி நேரம் போய்ட்டது மாதிரி உங்களுக்கு தோணும். ஒருவேளை இது ஒரு கிறிஸ்தவரா நீங்க தோத்துட்டீங்க என்ற உணர்வையும் உங்களுக்கு தந்திருக்கலாம்.

இந்த விஷயங்கள் உங்களுக்கு பொருந்துச்சுன்னா நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அஞ்சு விஷயங்கள் இங்க இருக்கு.


1. இயேசுவோடு இருக்கும் உங்களுடைய உறவில் நீங்கள் அடைய வேண்டிய எந்த ஒரு “சரியான தரம்” என்பது இல்லை.

நல்ல செய்தி! இயேசுவை பற்றி ரொம்ப புரிதலோட வாழ்றதயும், அவரோடுஆழமான உறவு ஏற்படுத்துறதையும், ஒரு சுமையாவோ இல்லனா கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய வேலைகளோட பட்டியல்ல இருக்கிற ஒரு வேலையாவோ இருக்க வேண்டியது கிடையாது. நீங்க அவர்கூட ஆழமான உறவ ஏற்படுத்தஒரு குறிப்பிட்ட மணி நேரங்களோ, இல்லனா முழங்கால்லசெலவு செய்ய வேண்டிய நேரம்னோ எதுவும் கிடையாது. மாறாக உங்களுக்கான அவரோட கிருபையையும், அன்பையும் நீங்க அனுபவிக்கிறப்ப அவர் கூட நேரத்தை செலவு பண்றத நீங்க இயல்பாவே அனுபவிக்கணும்னு தேவன் விரும்புறார். நீங்க உங்களுக்காக ஏற்படுத்திக்கிற அந்த எதிர்பார்ப்புகளை கூட தேவன் உங்க மேல வைக்கிறது கிடையாது. இத நீங்க புரிஞ்சுக்கிறப்ப, அவர் கூட இருக்கிற இந்த பயணத்தை அனுபவிக்க அது உங்களை விடுவிக்கும்.


2. இது நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை பற்றியது அல்ல, மாறாக அவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை பற்றியதாகும்.

என் தோழி ஒருத்தர் இயேசு எப்பவுமே தன் கூட இருக்கார்ங்கிறஆழ்ந்த உணர்வோடு அவங்க வாழ்ந்த விதம் என்ன ரொம்பவே ஊக்குவிச்சது. அவங்க கூட இருந்த உரையாடல்கள் எனக்கும் இயேசு கூட இது மாதிரியான ஒரு நெருங்கிய உறவு வேணும்ங்குற ஏக்கத்தை எனக்குள்ள ஏற்படுத்துச்சு. இதை என்னால அடைய முடியலங்கிற விரக்தி எனக்கு வந்தப்ப அதோட ரகசியம் என்னன்னு அவங்க கிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க “இயேசு என்னுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறார்.என் கூட இருக்க விரும்புகிறார்ங்கிறதநான் தெரிஞ்சுக்கிறப்ப, நானும் அவர் கூட இருக்க விரும்புறது எனக்கு எளிதாகுதுன்னு” பதில் சொன்னாங்க.

சங்கீதம் 139:17-18 (TPT) இத விவரிக்கிற விதம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு:

ஒவ்வொரு கணமும் நீர் என்னைப் பற்றிநினைத்துக் கொண்டிருக்கிறீர்! உம்முடைய ஒவ்வொரு சிந்தனையிலும் நீர் என்னை இடைவிடாமல் நேசிக்கிறீர் என்பதை நினைப்பது மிகவும் விலையுயர்ந்ததும், அற்புதம் ஆனதும் ஆகும்! தேவனே, என் மீதான உம்முடைய விருப்பங்கள் ஒவ்வொரு கடற்கரையிலும் உள்ள மணல் துகள்களை விட அதிகமாகும்! நான் ஒவ்வொரு காலையிலும் விழித்தெழும்போது நீர் இன்னும் என்னுடன் இருக்கிறீர்.

அன்பு, நட்பு அல்லது தாராள மனப்பான்மையோடு ஒருத்தர் முதல்ல உங்ககிட்ட வர்றப்ப அவங்களுக்கு பதில் சொல்றது ஈஸிங்கிறத நீங்க ஒப்புக் கொள்ள மாட்டீங்களா? இயேசு எப்பவுமே உங்களை பற்றி தான் சிந்திச்சுக்கிட்டு இருக்கார். எப்பவுமே உங்கள அதிகமா நேசிக்கும் ஒருத்தரா இருக்கிறதுதான் அவரோட மகிழ்ச்சியாகும்.


3. இயேசு குற்றம் கண்டுபிடிப்பவராக அல்ல, உங்கள் நண்பராக இருக்கிறார்.

சுவிசேஷங்கள் முழுசும் இயேசு மக்களை அன்பு என்ற கண்ணோட்டத்தின் மூலம் எப்படி பாக்குறார்ங்கிறத நாம பாக்குறோம். ஒரு வரி வசூலிப்பவனா இருந்தாலும் சரி, விபச்சாரியா இருந்தாலும் சரி, அல்லதுயாரும் பழக விரும்பாத ஒரு குஷ்டரோகியா இருந்தாலும் சரி, இயேசு எப்பவுமே அவங்களோட செயல்களை தாண்டி நேர அவங்களோட மனச பார்த்தார்.

பழைய ஏற்பாட்டுலயும் இத நாம பாக்குறோம். தாவீது ராஜா பரிபூரணமானவனா இல்லனாலும் கூட, அவனோட வாழ்க்கைல நாம எல்லாருமே விரும்புறது அவன் கடந்து போன நல்ல, கெட்ட மற்றும் விரும்பத்தகாத எல்லா விஷயங்களை பற்றியும் கர்த்தர் கிட்ட அவன் பேசுற விதம்தான். கர்த்தர் அவனுக்கு ஒரு நல்ல சிறந்த நண்பர் மாதிரிதான் இருந்தார்; அவனோட வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள்லயும், வெற்றிகள்லயும், தவறுகள்லயும் அவன் கூட உறுதுணையா அவர் இருந்தார்.


4. நீங்கள் தவறுகிற ஒவ்வொரு முறையும் அவர் உங்களை மீண்டும் தூக்கி நிறுத்துவார்.

நமக்கு நல்ல நோக்கங்கள் இருந்தாலுமே கூட, நாம எதிர்பார்த்த விதத்துல இயேசுவை நம்மோட முடிவுகள்லயும், தேர்ந்தெடுக்கிற விஷயங்கள்லயும் ஈடுபடுத்த தவறுகிற நாட்கள் நமக்கு வரும்.ஏன்? ஏன்னா நாம மனுஷங்க! மேலும் என்னோட தோல்விகளை என் மனசுல நான் மீண்டும் மீண்டும் ஓட விடுறது தான் இயேசு கூட இருக்கிற என் உறவை சீர்குலைக்கிறதுக்கான மிகவும் உறுதியான வழின்னு நான் கண்டுபிடிச்சுருக்கேன்.

உண்மை என்னன்னா, உங்களோட மிக சிறிய குறைகளும் தோல்விகளும் கூட சிலுவைல அறையப்பட்டு விட்டது. அவரோட பரிபூரணமான நீதி உங்களுக்கு ஈவாக தரப்பட்டிருக்கு. மேலும் நீங்க செய்றதுனால அவர் உங்களை அதிகமாகவோ இல்லனா குறைவாகவோ நேசிக்க வைக்காது (ரோமர் 5:1 TPTயையைப் பார்க்கவும்).

அப்படின்னா, நீங்க தவறுறப்ப என்ன செய்வீங்க? இதை கற்பனை செஞ்சு பாருங்க; இயேசு உங்கள தூக்கி நிறுத்த, உங்க மேல இருக்கிற தூசியை தட்டிவிட்டு, உங்கள மீண்டும் உங்களோட கால்கள்ல நிக்க வைக்க,உங்க கூடவே அவர் நடந்து போக உடனே தன்னோட கையை உங்களுக்கு நீட்டுறதப்பாருங்க.


5. உங்களுடைய தினசரி வாழ்க்கையில் இயேசுவை ஈடுபடுத்த தொடங்க உங்களுக்கு உதவும் சில வழிகள்:

நாட்குறிப்பு/இயேசுவுக்கு செய்தி அனுப்புதல்

உடல்ரீதியான டைரி எழுதுறது உங்களுக்கு பழசாதெரிஞ்சா, உங்க ஃபோன்லயே நீங்க அதை உருவாக்கலாம் இல்லனா இயேசு கூடஒரு சாட் குரூப் நீங்க வச்சுக்கலாம். நம்மோட ஃபோன்கள் 24 மணி நேரமும் நம்மோட கைகள்ல இருக்கிறதுனால நண்பர்களுக்கு மெசேஜ் பண்றது அல்லது வாய்ஸ் ரெக்கார்டு அனுப்புறது நமக்கு இயல்பான ஒரு விஷயமாகிடுச்சு. நீங்க இயேசுவுக்கும்கூட மெசேஜ் அனுப்பலாம்கிறத நீங்க எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா? ஒரு நெருங்கிய நண்பர் கூட பேசுறது மாதிரியே இயேசு கூட பேசுறதும் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும்.

நீங்க அவருக்கு வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பலாம், லிங்க்குகள், வீடியோக்கள், ஃபோட்டோக்கள் ஆகியவற்ற அனுப்பலாம். சொல்லப்போனால் எதையும் அனுப்பலாம்! நீங்க சொல்றத கேட்கிறதுல அவர் எப்பவுமே சோர்ந்து போறது கிடையாது. அதோடு இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது மாதிரி தெரிஞ்சாலும், உண்மை என்னன்னா, இயேசு எப்பவுமே உங்க பக்கத்துலயே இருக்கார். மேலும் நீங்க சொல்றதக் கேட்கிறத அவர் ரொம்பவே விரும்புறார்.

சாதாரண தினசரி செயல்களிலும் அவரை அழையுங்கள்

நீங்க அவருக்காக ஒதுக்குற அந்த அமைதியான நேரத்துக்குள்ள இயேசு ‘சிக்கிகிறது கிடையாது’-அவர் உங்க கூட உட்கார்ந்து இருக்கார், உங்க கூட காபி குடிக்கிறார், ஏன், உங்க கூட உங்க வேலைகளையும் கூட செய்றார்!

இன்டர்நெட்ல வேடிக்கையான இல்லனா ஊக்குவிக்கிற எதையாவது நீங்க பார்த்தா அது அவர்கிட்ட சொல்லுங்க. யாராவது உங்க கோபத்தை தூண்டுற மாதிரி ஏதாவது சொல்றாங்களா? நீங்க அவர்கிட்ட உங்க ஆதங்கத்தை கொட்டலாம். நீங்க தினமும் சாயங்காலம் வாக்கிங் போக விரும்புனா, போற வழில நீங்க அவர் கிட்ட பேசிகிட்டே போகலாமே!

இயேசு இந்த பூமில வாழ்ந்தப்ப, அவர் எப்பவுமே வேலை மட்டுமே செய்றவரா இருக்கல. சொல்லப்போனா, மக்கள் கூட பழகுறத அவர் ரசித்தார்-நீங்க எந்த நேரத்துலயும் அவர்கூட பேசலாம் இல்லனா ஓய்வெடுக்கலாம்.

ஆவியில் ஜெபம் பண்ணுங்கள்

எனக்கு வார்த்தைகள் வராதப்ப, இல்லனா இயேசுவிடம் பேச தோனாதபோதோ பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்றது எப்பவுமே எனக்கு உதவும். இது உண்மை சம்பவம் ஆகும்.

நான் எவ்வளவு அதிகமா ஜெபம் பண்றேன்னோ, அவ்வளவு அதிகமா அவர் கூட உரையாட நான் தயாராகிறேன். அதோடு எங்கள் நட்பு பற்றி நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்–இந்த சுழற்சி மறுபடியும் மறுபடியும் தொடரும்! இது ஒரு சின்ன நீரோடை ஒரு பெரிய நீர்வீழ்ச்சியா மாறுறது மாதிரியான உணர்வத்தருது.

மனித புரிதலின் வரம்புகள் தோல்வியடையிறப்ப, நமக்கான தேவனோடு தனிப்பட்ட அன்பின் முழுமையை வெளிப்படுத்துறது நமக்குள்ள இருக்கிற பரிசுத்த ஆவியானவர் தான். (நீதிமொழிகள் 18:24TPT பார்க்கவும்).

அப்படின்னா, ஒவ்வொரு நாளும் இயேசு கூட நெருக்கமா நடக்கிறது எப்படி இருக்கும்? சுருக்கமா சொன்னா, இயேசு ஏற்கனவே உங்களைப் பற்றி எவ்வளவு நினைக்கிறார்ங்கிறதையும், உங்க கூட நெருக்கமா இருக்க விரும்புறார்ங்கிறதையும் தெரிஞ்சுக்கிறது தான் அதுவாகும்!

சில நட்புகள் நீண்ட காலம் நீடிப்பதில்லை,
ஆனால் உங்கள் இதயத்துடன் இணைந்த ஒரு அன்பான நண்பர் இருக்கிறார்,
அவர் மற்ற எவரையும் விட உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்!

– நீதிமொழிகள் 18:24 (TPT)

உங்களுக்கு நண்பராக இருக்கிறது இயேசுவுக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் கூட நீங்க வச்சுருக்கிற இந்த நட்பை முழுமையா அனுபவிச்சு, இந்த பயணத்தின் மூலமா அவரோட மனச இன்னும் நீங்க அதிகமா தெரிஞ்சுக்கணும்கிறது தான் என்னோட ஜெபமாகும்.

இதுபோல இன்னும் பல

கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்

தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...

11 நிமிட வாசிப்பு
View details

நீதி என்பது ஒரு ஈவு

உங்களோட நற்செயல்களால தேவனோட ஆசீர்வாதங்களை உங்களால பெற முடியாது. ஆரோக்கியம், கிருபை மற்றும் வெற்றி உட...

1 நிமிட வாசிப்பு
View details

உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)

அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...

7 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

5 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

4 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)

வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அ...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றம் அளிக்காத நம்பிக்கை (பகுதி 3/3)

எதிர்மறையான எண்ணங்களை உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளைக்குறித்த தேவனுடைய நன்மைகளை எதிர்ப்பாக்ககூடிய திட நம...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்எ...

5 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்