ஏமாற்றம் அளிக்காத நம்பிக்கை (பகுதி 3/3)

5 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு
எதிர்மறையான எண்ணங்களை உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளைக்குறித்த தேவனுடைய நன்மைகளை எதிர்ப்பாக்ககூடிய திட நம்பிக்கையை வளர்ந்துகொள்ள துவங்கிடுங்கள். மூன்று பகுதிகளை கொண்ட இந்த தொடரில், பாஸ்டர் பிரின்ஸ் எப்படி நீங்கள் தொடர்ந்து உங்களுடைய ஊடுருவலை பெற தேவனை நம்புவது என்பதை காண்பிக்கிறார். உங்களுக்கான தேவனுடைய மேலான அன்பின் அனுபத்தின் பயணத்தை துவங்குவதற்கு உற்சாகமடைந்திடுங்கள்!

உங்கள் நம்பிக்கையை பற்றிகொண்டிருங்கள் – தொடர்ந்து கேளுங்கள்

உங்கள் ஆசீர்வாதம் வெளிப்படுவதற்கு பொறுமையோடு காத்திருக்கும் வேலையில் உங்கள் நம்பிக்கை எப்படி பற்றிகொண்டிருப்பீர்கள்? நீங்கள் தேவனுடைய நன்மையையும் உண்மையையும் குறித்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருங்கள்!

பிரியமானவர்களே, ஒரு அற்புதத்திற்காக நீங்கள் தேவனை தொடர்ந்து நம்பியிருக்கிறபடியால், உங்களுக்கான அவருடைய அன்பையும் கிருபையையும், உங்கள் தேவைகளை எவ்வளவாய் சந்திக்க விரும்புகிறார் என்பதைக் குறித்த செய்திகளை தொடர்ந்து கேளுங்கள்.

அவருடைய வார்த்தையில் உள்ள புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களால் உங்களை நிரப்பிடுங்கள் தொடர்ந்து தகுதியற்றவருக்கு அவர் அருளும் தயவின் மீது கவனமுள்ளவர்களாய் இருந்திடுங்கள்

ஒன்றை அறிந்துகொள்ளுங்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது அல்ல, ஆனால் உங்கள் ஆசீர்வாதத்தை பாதுக்காக்கும்படி அவர் சிலுவையில் என்ன செய்தார் என்பதே முக்கியம். தொடர்ந்து தேவனுடைய நன்மையையும் உண்மையையும் குறித்து கேட்டுகொண்டே இருந்தது ஆலிஸ்க்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினது. அவர்கள் சொல்லுகிறதாவது:

நான் திரும்ப திரும்ப உங்களுடைய செய்திகளை கேட்டுகொண்டிருந்தேன் அவை என்னை என்னுடைய அறிகுறிகளில் இருந்து விலகி கிறிஸ்துவின் மீதும் தேவ வாக்குத்தத்தங்கள் மீது கவனம் செலுத்த உற்சாகப்படுத்தினது. அந்த செய்திகளில் ஒன்றில், நீங்கள் சொல்லுவதை கேட்டேன், “தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்,” இதை பலமுறை சொல்ல கேட்டேன். நீங்கள் சொன்ன ஒவ்வொரு முறையும், என் ஆவியில் நம்பிக்கை எழும்புவதை உணர்ந்தேன்.

என்னோட மனசு சொன்னது, “பல வருஷங்களாயிடுச்சு. நம்பிக்கையை விட்டுட்டு ஏதாவது நடக்கும் என்று காத்திருப்பதினால் உன்னை நீயே வருத்தப்படுத்துவதை நிறுத்திக்கோ.” ஆனா நீங்க சொல்வதை கேட்கும்போது “தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்” என்று சொன்னது அதிகாரத்தோட இருந்தது, அந்த நம்பிக்கையின் வெளிச்சத்தில் என்னோட மனசுல கேட்ட சத்தங்கள் மங்கிப்போனது, என்னுடைய ஆவியில் ஆழமாக நான் ஏற்றுகொள்ளும்விதமாக பரிசுத்த ஆவியானவர் அத்தனை முறை உங்களை அப்படி சொல்லும்படி நடத்தினார் என விசுவாசிக்கிறேன்.

தேவனுடைய அன்பையும் உங்களுக்கான வாக்குத்தத்தையும் தொடர்ந்து கேட்டுகொண்டே இருப்பது எப்படி நம்பிக்கையை உட்புகுத்துகிறது என்று பார்த்தீர்களா? நீங்கள் நம்பிக்கை உடையவர்களாய் இருக்கும்படி தேவன் விரும்புகிறார் (ரோமர் 15:13ஐ பார்க்கவும்). ஆலிஸ்சுடைய வாழ்க்கையை போல, தொடர்ந்து இயேசுவின் நற்செய்தியை குறித்து கேட்பதினால் நீங்கள் நம்பிக்கையினால் சூழப்பட்டு இருப்பீர்கள், எதிர்மறையான சத்தங்களை நிசப்தமாக்குவீர்கள், உங்கள் மனதை காத்துக்கொள்வீர்கள். தெசலோனிக்கேய விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதாக சொல்லுகிறார் இரட்சிப்பின் நம்பிக்கை என்னும் தலைசீராவை தரித்துக்கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 5:8). நம்பிக்கை என்பது தேவன் உங்களை எதிலிருந்து விடுவிக்கும்படி விரும்புகிறார் அவற்றிலிருந்து உங்களை விடுவிக்க கூடியதான உங்கள் மனதை பாதுகாத்து தொடர்ந்து செயல்பட செய்கிற ஆவிக்குரிய ஆயுதமாக இருக்கிறது.

வேதாகம நம்பிக்கை பேசுவதாகவும் காண்பதாகவும் இருக்கிறது

வேறு எப்படியெல்லாம் வேதாகம நம்பிக்கை உங்கள் இருதயத்தில் வளர முடியும்? அது, நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை பேசுவதால் நடக்கும். எபிரெயர் 10:23, “அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.”

உங்களுடைய வார்த்தைகள் எந்த அளவிற்கு தேவனுடைய அசைவில்லாத வாக்குத்தத்தத்தையும் உண்மைத்துவத்தையும் சார்ந்த வேதாகம நம்பிக்கையினால் சாரமேற்றப்பட்ட இருக்கிறதோ, அவ்வளவாய் உங்கள் ஆசீர்வாதங்கள் வெளிப்படுவதற்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்.

நீங்கள் காலையில் எழுந்திருக்கும்போது, “இது மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று சொல்வதற்கு பதிலாக, உங்களுக்கான தேவ அன்பை நினைவுப்படுத்துகிறவர்களாக, “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை நேசிக்கிறபடியால் இந்த நாள் சிறப்பாக இருக்குமென்று அறிந்திருக்கிறேன். உம்முடைய பூரண அன்பை என்னை சூழ்ந்திருக்க சகல பயத்தையும் அது புறம்பே தள்ளுகிறது. எனக்கு நன்மையாக இருக்கும் கதவுகளை திறக்கும்படி உமது தயவு என்மேல் இருக்கிறது. இது உம்முடைய நன்மையினால் நிறைந்த அழகான நாளாக இருக்கபோகிறது!”

அதே சமயத்தில், தேவனுடைய வாக்குத்தத்தங்களினால் சொல்லப்பட்ட வார்த்தைகளை கொண்டு நேர்மறையான காட்சியை கற்பனை செய்யும் பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். மனுஷனுடைய தன்மை என்னவென்றால் மோசமான சம்பவங்களை கற்பனை செய்வது. ஒருவேளை நீங்கள் வியாதிப்பட்டு படுக்கையில் இருப்பீர்களானால், நீங்க திடகாத்திரமாக ஜீவனோடு இருப்பதாக கற்பனை செய்திடுங்கள், அல்லது உங்கள் நண்பர்களோடு மனதார திருப்தியாக சாப்பிடுவதை கற்பனை செய்திடுங்கள். சொல்லுங்கள், “ஆண்டவரே, உம்முடைய தழும்புகள் எனக்கு சுகத்தை வாங்கி கொடுத்திருக்கிறது (ஏசாயா 53:5) என்னால் சுகமடையாமல் இருக்க முடியாது!” குழந்தைக்காக நீங்கள் தேவனை விசுவாசித்து கொண்டிருப்பீர்கள் என்றால், குழந்தையை தழுவதுபோல கற்பனை செய்திடுங்கள். அதனுடைய டயப்பரை மாற்றும்போது பிள்ளையோடு நீங்கள் கொஞ்சி விளையாடுவது போல உங்களை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். தேவனிடம் சொல்லுங்கள், “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் (சங்கீதம் 127:3), என்னுடைய ஆத்துமாவிற்கு மனமகிழ்ச்சியை தருகிற உம்முடைய இறாஜ்யத்திற்கென்று மேலான காரியங்களை செய்யப்போகிற ஒரு சாதனையாளனை நான் பெற்றெடுக்க போகிறேன்!”

நம்புவதற்கான காரணம்

அருமையானவர்களே, உலகத்தின் மக்களை போல இல்லாமல், உங்களுக்கு எதிரான சூழ்நிலைகள் எழும்பும்போது நீங்கள் நம்புவதற்கு எல்லா காரணங்களும் இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் தயவு நிறைந்த இடத்தில் நின்றுகொண்டு இருக்கிறீர்கள்.

இயேசு உங்களுக்காக செய்த தியாகத்தின் மூலமாக, நீங்கள் இப்போது தேவனுடைய பிரியமான பிள்ளையாக இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் முற்றிலும் நீதிமானாக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகுதி பெற்று இருக்கிறீர்கள். பிரியமானவருக்குள் கிறிஸ்துவுக்குள் நீங்கள் என்றென்றைக்கும் தயவு பெற்று இருக்கிறீர்கள். தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார், உங்கள் வாழ்வின் சகல கோணங்களிலும் அவரே உங்கள் ஜெயமாக இருக்கிறார்!

நீங்கள் ஆபிரகாமை போல இருக்கலாம், ” தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான் (ரோமர் 4:18). ஆபிரகாம் சாத்தியமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டான். யோசித்து பாருங்கள்: கிட்டத்தட்ட நூறு வயது, அவனுடைய இனப்பெருக்க மண்டலம் செத்தநிலையில் இருந்திருக்கும். முதிர்வயதுடைய அவன் மனைவி, சாராள், இப்போது இளம் வயதில் இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு மலட்டு நிலையில் இருக்கிறாள் (ரோமர் 4:19ஐ பார்க்கவும்.). இந்த தம்பதிகள் சந்தித்த எதிர்கொண்ட எல்லா ஏளனங்கள் புறங்கூருதல்கள் எல்லாவற்றையும் யோசித்து பாருங்கள், குறிப்பாக தேவன் ஆபிராம் என்ற அவன் பெயரை அவர்களுக்கு ஒரு பிள்ளைகூட இல்லாதபோது “ஜாதிகளுக்கு தகப்பன்” என்ற அர்த்தமுள்ள ஆபிராம் என்று மாற்றினார்.

இருப்பினும், இவைகளின் மத்தியில், ஆபிரகாம் நம்பிக்கை உடையவனாக இருந்தான், இந்த நம்பிக்கை தன் சொந்த பெலத்தால் பிள்ளையை பெறப்பண்ண முடியாது, ஆனால் அவன் விசுவாசிக்கிற மாறாத தேவன் அவருடைய அன்பும் வாக்குத்தத்தங்களும் மாறாது என்பதன் மீது இருந்தது.

அதன் விளைவு? தேவன் அவர்களுக்கு அழகான அற்புதமான குழந்தையை கொடுத்தார் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர், ஈசாக்கின் மூலமாக, ஆபிரகாம் மெய்யாகவே அநேகம் ஜாதிகளுக்கு தகப்பனானான்.” (ரோமர் 4:18)

காரியங்கள் எப்படி இருந்தாலும் நம்பிக்கை யுள்ளவர்களாய் இருக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன் ஏனென்றால் ஆபிரகாம் சாராளை போல, உங்களை நேசிக்கிற உங்களை கைவிடாத அசாத்தியங்களின் தேவன் உங்களுக்கு இருக்கிறார். அறிக்கைகள் என்ன சொன்னாலும் சரி, கணக்கெடுப்புகள் எதை காட்டினாலும் சரி. தேவனுடைய அன்பில் நங்கூரம் கொண்டிருக்கும் வேதாகம நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், உங்கள் அற்புதம் வெளிப்படுவதற்கு சில காலங்களே ஆகும்.

ஒரு குழந்தைக்காக தேவனை விசுவாசித்து பெற்றுகொண்டதோடு ஆலிஸ் தனது சாட்சியை முடித்தது எனக்கு பிடித்திருக்கிறது. அவர்கள் இதைதான் சொன்னார்கள்:

நம்முடைய தேவன் புள்ளியியல் நிகழ்தகவு அல்ல. அவர் மெய்யான நம்பிக்கையாக இருக்கிறார் மேலும் சகலமும், அவரால் கூடும். என்னுடைய கர்ப்பகாலத்தில் இரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் என்னுடைய மருத்துவ வரலாற்றை பார்த்துவிட்டு பலமுறை இந்த மருத்துவம் தோல்வியடைந்த போதிலும் எப்படி இப்போது நான் கர்பந்தரித்தேன் என்று ஆச்சரியப்பட்டார்கள். அதற்கு நான் “தேவனுடைய கிருபையினால்” என்று பதிலளித்தேன்.

தேவன் சகல வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுகிறார் ஏனெனில் இயேசு நம்மை நூறு சதவிகிதம் தகுதியுள்ளவராக மாற்றியிருக்கிறார், அவருக்காக அவர் நம்மிடத்தில் சாக்குபோக்கு சொல்லுகிறதில்லை! மாறாக, ஆபிரகாமை போல அவருடைய வாக்குத்தத்தங்களை நாம் பற்றிகொண்டிருக்கும்படி கூறுகிறார், அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்பும்படி சொல்லுகிறார்.” தேவனுடைய வார்த்தையில் உள்ள ஒவ்வொரு நல்ல வாக்குத்தத்தமும் நமக்காக எழுதப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்தது – தேவன் புள்ளியியல் நிகழ்தகவு அல்ல. அவர் மெய்யான நம்பிக்கையாக இருக்கிறார் மேலும் சகலமும், அவரால் கூடும். பிரியமானவர்களே, இவர்தான் உங்கள் தேவன்! இதினிமித்தம் நீங்கள் எல்லா நம்பிக்கைக்கும் எதிராக நம்பிக்கை வைக்க முடியும் அந்த நம்பிக்கை உங்களை ஏமாற்றாது. இதினிமித்தம் உங்களுக்கு நன்மையானது நடக்கும் என்ற திடநம்பிக்கையோடு சந்தோஷத்தோடு எதிர்ப்பார்ப்புடன் வாழ முடியும் ஏனென்றால் தேவன் உங்களை நேசிக்கிறார்!

இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.

இதுபோல இன்னும் பல

கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்

தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...

11 நிமிட வாசிப்பு
View details

இது இயேசுவோடு ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவோருக்குரியதாகும்

உங்களோட தினசரி வாழ்க்கைல இயேசுவை இன்னும் அதிகமா எப்படி பங்கெடுக்க வைக்கிறதுன்னு நீங்க எப்பவாவது யோசி...

5 நிமிட வாசிப்பு
View details

உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)

அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...

7 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

5 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

4 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)

வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அ...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்எ...

5 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்