இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)

5 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு
வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள். இந்த மூன்று பகுதித் தொடரில் ஜோசப் பிரின்ஸுடன் இணைந்து, வசனத்தில் இயேசுவைத் தேடுவதற்கும் காண்பதற்கும் என்ன அர்த்தம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தச் செயல்முறை இயேசுவுடன் அதிக நெருக்கம், தெய்வீக சுகம் மற்றும் செழிப்பான வாழ்விற்கு எவ்வாறு வழிவகுக்கிறது என்பதை நீங்களே அனுபவித்து உணருங்கள்.

தேவனின் வார்த்தை வாழ்வை அளிக்கிறது

சிறுவன் கேப்ரியல் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தான். என் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவரான அவனுடைய தந்தை, குழந்தைகளில் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவனை என் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். ஆனால், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து துறுதுறுப்பான இளமைத் துள்ளலுடன் ஓடியாடி விளையாடுவதற்கோ, அல்லது சமீபத்திய கேமிங் கருவியில் உள்ள பொத்தான்களை வெறித்தனமாக அழுத்துவதற்கோ பதிலாக, அந்தப் பிரகாசமான கண்களைக் கொண்ட சிறுவன் ஒரு அமைதியான மூலையில் அமர்ந்து தீவிரமாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பதை நான் கண்டேன்.

சற்று ஆர்வத்துடன், அவன் என்ன புத்தகம் படிக்கிறான் என்று பார்க்க நான் அவனருகே சென்றேன். எனக்கு ஆச்சரியமாக, அவன் வேதாகமத்தைப் படித்துக்கொண்டிருந்தான்! அது எனக்கு எவ்வளவு ஒரு அருமையான காட்சி. இந்த ஆறு வயதுச் சிறுவன் தேவனுடைய வார்த்தையின் மீது ஆர்வம் காட்டுவதைக் கண்டது என் இதயத்தைத் தொட்டது. ஆனால் நான் குனிந்து உற்றுப் பார்த்தபோது, ​​அவன் வேதாகமத்தின் அறிமுகம் மற்றும் முன்னுரையைப் படித்துக்கொண்டிருந்தான் என்பதை உணர்ந்தேன்—அதாவது, அவனுடைய வேதாகமத்தின் முதல் சில பக்கங்களை!

என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை, அந்தச் சிறுவன் மீது எனக்கு அன்பு பொங்கியது. வேதாகமத்தைப் படிப்பதில் கேப்ரியலுக்கு இருந்த உண்மையான ஆவலில், அவன் எதையும் தவறவிட விரும்பவில்லை என்பதை நான் அறிந்தேன். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குப் பொக்கிஷமாக இருந்தது, அவனுடைய இளம் மனதில், அது அறிமுகம் மற்றும் முன்னுரையில் உள்ள வார்த்தைகளையும் உள்ளடக்கியிருந்தது. அவன் தன் வேதாகமத்தை முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை படிக்க விரும்பினான்—அதாவது, வார்த்தைக்கு வார்த்தை! இந்த அருமையான குழந்தை சரியான திசையில் சென்றுகொண்டிருந்தது, ஆனால் அவனுக்கு நிச்சயமாக சில வழிகாட்டுதல்கள் தேவை என்று நான் எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். அவன் அறிமுகம் மற்றும் முன்னுரையில் சலிப்படைந்து, குழப்பமடைந்து அல்லது சிக்கிக்கொண்டு, “போதகர் பிரின்ஸ், வேதாகமம் சலிப்பாக இருக்கிறது!” என்று சொல்வதை நான் விரும்பவில்லை.

அதனால் நான் அந்தச் சிறுவனிடம், “ஏய், கேப்ரியல், நீ வேதாகமத்தைப் படிக்கிறாயா? அது அருமை! நீ அதை ரசித்து படிக்கிறாயா? நான் எங்கே இருந்து படிக்கத் தொடங்குவேன் தெரியுமா? நான் சுவிசேஷங்களில் இருந்து படிக்கத் தொடங்குவேன். நம்முடைய கதாநாயகனான இயேசுவைப் பற்றியும் அவர் செய்த அற்புதமான காரியங்களைப் பற்றியும் நீ படிக்கலாம்,” என்று சொன்னேன். நான் அவனை சுவிசேஷப் பகுதிக்கு அழைத்துச் சென்றேன், அவன் இன்னும் அதிக உற்சாகமடைந்திருப்பதைக் கண்டேன்!

தேவனின் வார்த்தை வாழ்வை அளிக்கிறது

நீங்கள் அறிந்திருப்பதுபோல, நம்மில் பலரும் அந்தச் சிறிய கேப்ரியேலைவிட அதிகம் வேறுபட்டவர்கள் அல்ல. தேவனுடைய வார்த்தையை வாசிக்க வேண்டும் என்ற ஆசை நமக்குள்ளது; ஆனால் அதை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். என் நண்பரே, கேப்ரியேலுக்கு நான் கொடுத்த அதே ஆலோசனையை உங்களுக்கும் ஊக்கமாகச் சொல்லுகிறேன்: நீங்கள் உங்கள் வேதத்தைத் திறக்கும் போது, நேராக இயேசுவை நோக்கி கவனம் செலுத்துங்கள். நம் அழகிய இரட்சகர்மேல் உங்கள் பார்வையையும் இருதயத்தையும் நிலைநிறுத்துங்கள். அப்போது, தேவனுடைய வார்த்தையை வாசிக்கும் போது நீங்கள் உண்மையான ஜீவனை அனுபவிப்பீர்கள்.

தேவன் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஜீவனை வழங்கும் பணியில் இருக்கிறார்.

நீங்கள் இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆசையுடன் தேவனுடைய வார்த்தைக்கு வரும்போது, அவரை வார்த்தையில் கண்டுகொண்டு அவரை நோக்கி தியானிக்கும்போது, உங்களுள் ஒரு விசேஷமான காரியம் நடக்கிறது. அதாவது, தேவனுடைய ஜீவன் உங்களுக்கு அதீதமாக அளிக்கப்படுகிறது.

உண்மையில், தேவன் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஜீவனை வழங்கும் பணியில் இருக்கிறார். நீதிமொழிகள் புத்தகத்தில், தேவனுடைய வார்த்தைகள் “அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஜீவனாகவும், அவர்களின் மாம்சமெல்லாம் ஆரோக்கியமாகவும் இருக்கின்றன” (நீதிமொழிகள் 4:22) என்று சொல்லப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் சோர்வாக இருந்தால், தேவனுடைய வார்த்தையை வாசிப்பது உங்களை மீண்டும் புதுப்பித்து, சக்தியூட்டும். நீங்கள் மனச்சோர்வில் இருந்தால், அது உங்களை அந்த இருளிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து, உங்கள் சிந்தனைகளை விடுதலை செய்து, சமாதானத்தையும் சந்தோஷத்தையும் உங்களுக்குள் கொண்டுவரும். நீங்கள் நோயுற்றிருந்தால், அது உங்கள் உடலுக்கு குணமடையும் அலைப்பெருக்கத்தையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் கொண்டு வரும்!

உண்மையாகவே, தேவனுடைய ஜீவனைப் பெறுவது என்பது உங்கள் வாழ்க்கையில் வறட்சியாகவோ மரித்ததாகவோ தோன்றும் பகுதிகளில் உயிர்ப்பையும் உயிர்த்தெழுதலையும் அனுபவிப்பதாகும். உங்கள் சூழ்நிலைகளில் மரணத்தின் அடையாளங்களைப் பார்க்கும்போது, தேவனுடைய ஜீவனே உங்களுக்கு மிக அவசியமானது.

உங்கள் திருமணம் சிதைவடைகிறதா? உங்கள் கனவுகள் நசுங்கிவிட்டதா அல்லது புறக்கணிக்கப்பட்டுள்ளதா? உங்கள் நிதி நிலை கடன் கடலில் மூழ்கிவிட்டதா? அன்புக்குரியவரே, உங்கள் வாழ்க்கையின் எந்த பகுதியிலும் மரணம் செயல்படுகிறதென்றால், மனம் உடையாதீர்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள்!

விஷயங்களை நடக்கச் செய்ய போராடவும், முயற்சிக்கவும், திட்டமிடவும் வேண்டாம். “உங்கள் கவலைகளை கர்த்தர்மேல் போடுங்கள்; அவர் உங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தையில் நேரம் செலவிடுங்கள்; அப்போது அவருடைய ஜீவனின் வழங்கலை நீங்கள் பெறுவீர்கள்.

அவருடைய உயிர்த்தெழுதல் ஜீவன், உங்கள் திருமணத்தில் மீண்டும் அந்தத் தீப்பொறியை ஏற்றி, சாதாரண தண்ணீரை மதுபானமாக மாற்றும்! அது உங்கள் மரித்த கனவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் அல்லது உங்கள் இருதயத்தில் புதிய கனவுகளைப் பிறக்கச் செய்யும். உங்கள் நிதியில் “அப்பங்கள் பெருகும்” அற்புதத்தை ஏற்படுத்தி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் போதுமானதற்கும் மேலாக இருக்கச் செய்யும்!

வேதாகமத்தின் மையம் இயேசுவே

தேவனுடைய விதமான ஆரோக்கியமும் ஜீவனும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்படும். ஆனால் அது வெறும் மேலோட்டமாக தேவனுடைய வார்த்தையை வாசிப்பதினால் மட்டும் அல்ல; வார்த்தையில் இயேசுவைக் காண்பதினால்தான் வருகிறது.

நீங்கள் கேட்கலாம்: “பாஸ்டர் பிரின்ஸ், இது எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் ‘வார்த்தையில் இயேசுவைக் காண்பது’ என்றால் என்ன? தேவனுடைய ஜீவனின் வழங்கலைப் பெற நான் அதை எப்படிச் செய்ய வேண்டும்?”

இவை நல்லதும் நியாயமானதுமான கேள்விகள், என் நண்பரே. பொதுவாகப் பரவலாக இருக்கும் கருத்துக்கு மாறாக, வேதாகமம் சரியான வாழ்க்கைக்கான விதிமுறைகளின் புத்தகம் அல்ல என்பதை முதலில் விளக்க விரும்புகிறேன். இல்லை, வேதாகமம் முழுவதும் இயேசுவைப்பற்றியது. ஒவ்வொரு பக்கமும் தேவனுடைய குமாரனாகிய இயேசுவைப் பற்றியே பேசுகிறது—அவரே தேவனுடைய மகிழ்ச்சியின் மையம்!

வேதாகமம் முழுவதும் இயேசுவையும் கல்வாரியில் அவர் செய்த அன்பான பலியையும் பற்றியது.

ஒருமுறை, என் மகள் ஜெசிகா சிறுமியாக இருந்தபோது, வேதாகமம் எதைப் பற்றியது என்று அவளிடம் நான் கேட்டேன். அவள் சொன்ன பதிலை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்: “அப்பா, அது சிவப்பு நூல் இருக்கிற இயேசுவைப் பற்றிய ஒரு புத்தகம்.”

“சிவப்பு நூல்” என்றால், புத்தகத்தில் அடையாளமாக வைத்திருக்கும் மெல்லிய சிவப்பு துண்டை அவள் குறிப்பிட்டாள். ஆனால் அவள் சொன்ன வார்த்தைகளில் தேவனுடைய ஞானத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? சிறிய பிள்ளைகளின் வாயிலாகவே தேவன் நம்மிடம் பேசுவார் என்பதற்குக் கண்ணியமான உதாரணம் இது! எளிமையானது—ஆனால் மிக ஆழமானது.

ஆம், வேதாகமம் முழுவதும் இயேசுவைப்பற்றியது. ஆனால் இன்னும் குறிப்பாகச் சொன்னால், அது கல்வாரியில் அவர் செய்த அன்பான பலியைப் பற்றியது. அந்த சிவப்பு நூல் அல்லது “சிவப்பு (ஸ்கார்லெட்) நூல்” இயேசுவின் இரத்தத்தையும், சிலுவையில் அவர் மரித்த மரணத்தையும் குறிக்கிறது. அவருடைய இரத்தம் நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரித்தது; அவருடைய மரணம் நமக்கு மிகுந்தும் நித்தியமான ஜீவனையும் கொடுத்தது. ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை, நம் வேதாகமத்திற்கு ஒரே ஒரு மகத்தான கரு உள்ளது—நம்முடைய ஆண்டவர் இயேசுவும், அவர் செய்த பரிபூரண பலியும்.

ஆகவே, வேதாகமம் நம்மைப் பற்றியது அல்ல. அது முழுவதும் இயேசுவையும், அவர் நமக்காக செய்ததைப் பற்றியதே. ஆனால் நீங்கள் வார்த்தையில் அவரைக் கண்டுகொள்ளும் போது, “அவர் இருப்பதுபோலவே இந்த உலகத்தில் நாமும் இருக்கிறோம்” (1 யோவான் 4:17) என்பதுபோல், அவருள் உங்களையே நீங்கள் கண்டுகொள்கிறீர்கள். அவர் நீதிமானாகவும், தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும், கிருபைபெற்றவராகவும் இருப்பதுபோலவே, நீங்களும் அப்படியே இருப்பதை அறிகிறீர்கள். அவர் ஆரோக்கியம், முழுமை, ஜீவன் ஆகியவற்றால் நிரம்பியவராக இருப்பதுபோலவே, நீங்களும் அப்படியே இருப்பதை கண்டறிகிறீர்கள்!

அன்புக்குரியவரே, வார்த்தையில் இயேசுவைக் காணும்போது, அவருடைய ஜீவனை நீங்கள் எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். இயேசு இந்த அதிசயமான வார்த்தைகளைச் சொன்னார்: “…அவர்கள் ஜீவனைப் பெறவும், அதைப் பெருகப் பெறவும் நான் வந்தேன்” (யோவான் 10:10). மேலும் அவர், “…நான் உங்களுக்குச் சொல்வது ஆவியும் ஜீவனுமாக இருக்கிறது” (யோவான் 6:63) என்றார்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் வார்த்தையில் இயேசுவைக் காணும்போதும், அவரைத் தியானிக்கும்போதும், அவருடைய ஜீவனின் வழங்கலை உங்கள் வாழ்க்கையில் ஓடச் செய்கிறீர்கள். இதுவே நீங்கள் மகிமையிலிருந்து மகிமைக்குத் மாற்றப்படுகிற வழியாகும் (2 கொரிந்தியர் 3:18). ஆண்டவரையும் அவரது மகிமையையும் தொடர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் மாற்றப்படுவீர்கள்—நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு, குறைவு மட்டுமே தெரிந்த நிலையிலிருந்து மிகுதியை அனுபவிக்கும் நிலைக்கு, மன்னிக்காத இருதயத்திலிருந்து சந்தோஷமும் அன்பும் நிறைந்த இருதயத்திற்கு!

இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.

இதுபோல இன்னும் பல

கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்

தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...

11 நிமிட வாசிப்பு
View details

இது இயேசுவோடு ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவோருக்குரியதாகும்

உங்களோட தினசரி வாழ்க்கைல இயேசுவை இன்னும் அதிகமா எப்படி பங்கெடுக்க வைக்கிறதுன்னு நீங்க எப்பவாவது யோசி...

5 நிமிட வாசிப்பு
View details

ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்

பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...

12 நிமிட வாசிப்பு
View details

இன்று தேவனுடைய பாதுகாப்பில் நடங்கள்

தேவனோட வார்த்தைல அவரோட அன்பான பிள்ளைகளுக்கு அவரோட பாதுகாப்பின் வாக்குறுதிகள் நிரம்பி இருக்கு.‌ உதாரண...

4 நிமிட வாசிப்பு
View details

உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...

5 நிமிட வாசிப்பு
View details

உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)

அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...

7 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

5 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)

வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...

4 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றம் அளிக்காத நம்பிக்கை (பகுதி 3/3)

எதிர்மறையான எண்ணங்களை உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளைக்குறித்த தேவனுடைய நன்மைகளை எதிர்ப்பாக்ககூடிய திட நம...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...

5 நிமிட வாசிப்பு
View details

ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)

உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்எ...

5 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்