ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)
இதன் மூலம் பகிர்ந்திட
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ள தொடங்குங்கள்! இந்த மூன்று பகுதி தொடரில் உங்களுடைய திருப்புமுனைக்காக ஏன் நீங்கள் தேவனை தொடர்ச்சியாக நம்பலாம் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் கற்பிக்கிறார். தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் உயர்ந்த அன்பை அனுபவிக்கிற இந்த பயணத்தை நீங்கள் தொடங்கும்போது ஊக்கமடைவீர்கள்!
நம்பிக்கை, விசுவாசத்தின் தூண்டுகோல்
பைபிள் நம்பிக்கை ஏன் மிகவும் முக்கியமானது? இது ரொம்ப முக்கியமான விஷயமான்னு” ஒருவேள நீங்க யோசிக்கலாம்.
என் நண்பரே பைபிள் நம்பிக்கை முக்கியமானதாகும், ஏன்னா விசுவாசத்துக்கு அது தான் முக்கியமான ஒரு மூலப்பொருளா இருக்கு. நம்பிக்கை இல்லாம உங்க விசுவாசத்தால செயல்பட முடியாது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறதுன்னு” எபிரெயர் 11:1சொல்லுது. உங்களுக்கு நம்பிக்கை இல்லனா எப்படி உங்களால விசுவாசத்தை பெற முடியும்? நன்மையின் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு உங்களுக்கு இல்லன்னா உங்க விசுவாசத்துக்கு என்ன உறுதி இருக்கும்?
உங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குவதினால் நம்பிக்கை அவசியமானதும் முக்கியமானதும் ஆகும்.
பைபிள்ல ரத்தப்போக்கு பிரச்சனை உள்ள பெண்ணை நெனச்சு பாருங்க. 12 வருஷங்களா அவளுக்கு நாள்பட்ட ரத்தப்போக்கு பிரச்சனை இருந்துச்சு. அவா சிகிச்சை பெற பல்வேறு மருத்துவர்கள் கிட்ட தன்னோட பணத்தை எல்லாம் செலவு செஞ்சா. இன்னும் சொல்லப்போனால் அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு,… சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுதுன்னு” (மாற்கு5:26) பைபிள் நமக்கு சொல்லுது.
பல பெண்கள் குணமாகிற நம்பிக்கையையே இழந்திடுவாங்க. ஆனா இந்த பெண்ணோ நம்பிக்கையை இழக்கல. அவா அன்பின் ரட்சகரை பற்றி கேள்விப்பட்டப்ப அவளுக்கு உள்ள பைபிள் நம்பிக்கை ஏற்பட தொடங்குச்சு. மாற்கு 5:27-29ல இருக்கிற சம்பவத்தை பாப்போம் வாங்க.
இயேசுவைப் பற்றி அவர் கேள்விப்பட்டப்ப கூட்டத்துல அவா அவருக்கு பின்னாடி வந்து அவரோட அங்கிய தொட்டா. “நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று அவள் சொன்னாள்.” உடனே அவளோட ரத்தப்போக்கு நின்று வேதனை நீங்கி சுகமானத தன்னோட சரீரத்துல அவா உணர்ந்தா.
உங்களுக்குப் புரியுதா? இயேசுவைப் பற்றி அவர் கேள்விப்பட்டதின் காரணமா இயேசுவிடம் இருந்து ஒரு நன்மையை பெறுறதுக்கான ஒரு எதிர்பார்ப்பு அவளுக்குள்ள இருந்து எழும்பி, இயேசுவின் உடைய தொட்ட போதும் தான் சுகமாவோம்னு நம்பும்படி அவளோட விசுவாசத்தை தூண்டுச்சு.
தன்னோட அசுத்தமான இந்த நிலைமைல தன்னை கல்லெரிஞ்சு கொல்ல சட்டம் இருக்குன்னு தெரிஞ்சும், அந்தக் கூட்டத்தை எதிர்கொண்டு இயேசு கிட்ட வந்து சுகம் பெற வர இவளுக்கு எந்த விஷயம் தைரியத்தை தந்துச்சு? இது பைபிள் நம்பிக்கையால் தூண்டப்பட்ட வலிமையான விசுவாசமாகும். இதுஇயேசுவின் அன்ப அடிப்படையா கொண்டு இருந்ததுனால அது அவளை ஏமாத்தல.
இயேசு தன்னைப் போன்ற நோயுற்றவர்களையும் வெறுக்கப்பட்டவர்களையும் மனமுவந்து குணப்படுத்தினார் என்பதைப் பற்றி அவள் எவ்வளவு அதிகமாகக் கேள்விப்பட்டாளோ, அவ்வளவு அதிகமாக அவள் நியாயத்தீர்ப்பின் தேவனை அல்ல, அன்பும் இரக்கமும் கொண்டதேவனைக் காணத் தொடங்கினாள், மேலும் அவளில் நம்பிக்கையும், உணர்வுகளைக் கடந்த விசுவாசமும் வளர்ந்தது.
அன்பானவர்களே இன்னைக்கு உங்க உடல் ஆரோக்கியத்துக்காக நீங்க தேவன நம்புவீங்கன்னா, உங்களுக்கு போதுமான விசுவாசம் இருக்கா, இல்லையா என்பதுல நீங்க கவனம் செலுத்தாதீங்க (அந்தப் பெண் இப்படி செஞ்சான்னு பைபிள்ல எந்த பதிவும் இல்லை). தொடர்ந்து நீங்க இயேசுவ பற்றியும், அவரோட அன்பு பற்றியும் அவரோட கிருபை பற்றியும் உங்களுக்காக அவர் வச்சிருக்கிற நன்மையை பற்றியும் கேட்டுக்கிட்டே இருங்க. அவர் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாம வியாதியஸ்தர்களை எப்படி சுகமாக்கினார்னு சுவிசேஷங்கள்ல இருந்து நீங்க தெரிஞ்சுக்கோங்க. ஒரு போதும் வியாதிப்பட்டதுக்காகவோ அல்லது வியாதியிலிருந்து சுகத்தை கேட்டதுக்காகவோ அவர் யாரையும் கண்டிக்கல. அவங்க எப்படிப்பட்டவங்களா இருந்தாலும் சரி, தன்கிட்ட வந்த எல்லாரையும் அவர் சுகமாக்குனார்.
அவரோட அன்பப் பற்றி நீங்க கேள்விப்பட்டு உங்களுக்கான அவரோட தனிப்பட்ட அன்பின் வெளிப்பாட்ட நீங்க பெறுறப்ப கர்த்தர் கிட்ட இருந்து நன்மைக்கான நம்பிக்கையான, மகிழ்ச்சியான எதிர்பார்ப்புகள் உங்க இதயத்துல எழும்பும். அவரோட அன்பு மேல உறுதியா அஸ்திவாரம் போடப்பட்ட இந்த நம்பிக்கை ரத்தப்போக்கு இருந்த பெண்மாதிரியே உங்களோட அற்புதத்தப் பெற தைரியமா முயற்சி செய்ய உங்க விசுவாசத்தை தூண்டும்!
நம்பிக்கை–தொலைந்து போன இணைப்பு
பைபிள் நம்பிக்கையின் வல்லமை பற்றிய இன்னொரு சாட்சியை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்புறேன். அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஆலிஸும் அவரோட கணவரும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்னு விரும்புனாங்க. ஆனா பத்து வருஷங்களா முயற்சி செஞ்சும் ஆலிஸால கர்ப்பம் தரிக்க முடியல. ஒரு வருஷம் கருத்தரிப்பு சிகிச்சை பார்த்தாலும் கூட, அவங்களோட வலது கருப்பைல வேதனையான ஒரு நீர்கட்டி தான் உருவாச்சு. அந்த நீர்க்கட்டி லேப்ராஸ்கோப்பி மூலமா நீக்கப்பட்டு மெட்ரியோசிஸ் இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டுச்சு. கருத்தரிக்க மருந்து தரும்படி அவரோட டாக்டர் வலியுறுத்தினாலும், ஆலிஸ் மருந்தெடுக்க விரும்பல. தேவன் தனக்கொரு குழந்தையை தந்து ஆசீர்வதிப்பார்னும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் அதை செய்ய முடியும்னும் அதை தேவன் செய்வார்னும் அவங்க நம்ப முடிவு செஞ்சாங்க.
மாசங்கள் கடந்தாலும் ஆலிஸ் இன்னும் கர்ப்பம் தரிக்கல. பிறகு ஒரு நாள்பைபிள் நம்பிக்கையை விளக்கி, கிருபையுள்ள தேவனை நம்பும்படி ஊக்குவித்த என்னோட பிரசங்கத்தை அவங்க கேட்டாங்க.
இயேசு சிலுவைல தன்ன பலியா தந்தது மூலமாதேவன் தன்னை நீதிமானா ஆக்குனார்னும், மேலும் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் தன்னை தகுதியுள்ளவளா ஆக்கிட்டார்னும் அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க. தேவன் தன் மேல வச்சுருக்கிற அன்பின் புதிய வெளிப்பாட்டுல இருந்துபிறந்த பைபிளின் புது நம்பிக்கையோடு, தனக்கு ஒரு சாம்பியன் குழந்தை வேணும்னு விரும்புறதா ஆலிஸ் தேவன் கிட்ட சொன்னாங்க. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! ஆலிஸ் சீக்கிரமாவே கர்ப்பம் தரிச்சாங்க. இயற்கைக்கு அப்பாற்பட்ட எளிதான கர்ப்பம் மற்றும் பிரசவத்துக்கு பிறகுஅவங்களுக்கும் அவங்களோட கணவருக்கும் இப்ப நோவா என்ற அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு!
“எனக்கு கண்டுபிடிக்கப்பட்ட எண்டோ மெட்ரியாசிஸ் லெவல்ல இருக்கிறவங்க சிகிச்சை இல்லாமல் கர்ப்பம் தரிக்கிறதுக்கு ஒன்னு அல்லது ரெண்டு சதவீதம் தான் வாய்ப்பு இருக்கு, செயற்கை கருத்தரிப்பு மூலம் கூட வாய்ப்புகள் ரொம்ப கம்மி தான் என்கிட்ட சொன்னாங்கன்னு” அவங்க சொல்றாங்க. “ஆனாலும் மனுஷனுடைய உதவி இல்லாம நோவா இப்ப இங்க இருக்கான்!”
அவங்களுக்கு திருப்புமுனை எப்ப வந்துச்சு? ஆலிஸ் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு விளக்குனத நான் உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன்:
உங்க பிரசங்கத்தை நான் கேட்டப்ப குழந்தைக்காக நான் விசுவாசிக்க முயற்சி செஞ்சதுல நான் ரொம்ப கவனம் செலுத்துனத உணர்ந்தேன். ஆனா நீங்க சொன்ன நன்மைக்கான சாதகமான எதிர்பார்ப்பு வழில ஒரு குழந்தைக்காக நம்ப உண்மையா நான் பயந்தேன். நம்பிக்கை வைக்க துணிறது எனக்கு அதிகமான ஏமாற்றத்தை தரும்னு நான் நினைச்சேன். ஏன்னா கிறிஸ்துவுக்குள்ள இருக்கிறவங்களுக்கு நம்பிக்கை என்பது ஒரு உறுதியான விஷயம்னு இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டது கிடையாது. விசுவாசம்கிறது நான் பராமரிக்க வேண்டியதோ இல்ல நம்பிக்கையின் அளவோ கிடையாது, மாறாக எதிர்பார்க்கப்படும் விஷயங்களின் உறுதியானவைகள்னு புரிஞ்சுக்கிற அந்த இணைப்ப நான் இழந்திருந்தேன்.
இது அழகா இருக்கு, இல்லையா? விசுவாசம்கிறது அவங்க உழைக்க வேண்டிய அல்லது பராமரிக்க முயற்சி செய்ய வேண்டிய ஒரு விஷயம் இல்லங்கிறது அவங்க உணர்ந்த அவங்க மனசுல நம்பிக்கை துளிர் விட்டுச்சு. மேலும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறவங்களுக்கு நம்பிக்கை நிச்சயமான ஒரு விஷயம்கிறத அவங்க உணர்ந்தப்பஅவங்களோட நம்பிக்கை வானளாவ உயர்ந்துச்சு. அதனாலதான் விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் நிச்சயமாக இருக்கிறதுன்னு பைபிள் சொல்லுது. நம்பிக்கையின் எரிபொருள் இல்லாமல் விசுவாசத்தால நீங்க போக விரும்புற இடத்துக்கு உங்களை கொண்டு போக முடியாது. அதோடு ஆலிஸ் கண்டுபிடிச்ச மாதிரி இந்த நம்பிக்கை ஒரு நிச்சயமான விஷயமாக மிகவும் சாதகமான முடிவை பற்றிய அசைக்க முடியாத எதிர்பார்ப்பா இருக்கு.
ஆலிஸைப் போலவேதேவன் உங்களை நேசிக்கிறார், உங்களுடைய இதயத்தின் ஆழமான ஆசைகளை நிறைவேற்ற விரும்புகிறார் என்பதை தெரிந்து கொண்டு, வளர கற்றுக்கொண்டு எப்போதும் நன்மைக்கான சாதகமான எதிர்பார்ப்பை கொண்டிருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாகும்.
அன்பானவர்களே உங்களுக்கு இப்ப உடல் நில சரியில்லாமல் இருந்தா நீங்க குணமாவீங்க என்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்ப தொடர்ந்து கொண்டிருக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு பண பிரச்சினைகள் இருக்கும்னா உங்க தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்ற நன்மையான எதிர்பார்ப்போடு இருங்க. வழி மாறிப்போன டீனேஜர்கள் தேவனோட மகனா மகளா மாறுவாங்கன்னு தொடர்ந்து நம்புங்க. இந்த நம்பிக்கை கர்த்தரோட அன்புலையும் முடிக்கப்பட்ட வேலைலயும் நங்கூரமிடப்பட்டிருக்கிறதுனால இது உங்கள ஏமாத்தாதுங்கிறத நீங்க தெரிஞ்சுக்கிட்டு தொடர்ந்து நம்புங்க. இந்த நாட்கள்ல ஒரு நாள் நீங்க நினைக்கிறதை விட சீக்கிரமா உங்களோட நம்பிக்கையின் பலனை நீங்க அனுபவிப்பீங்க!
இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.
இதுபோல இன்னும் பல
கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்
தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...
இது இயேசுவோடு ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவோருக்குரியதாகும்
உங்களோட தினசரி வாழ்க்கைல இயேசுவை இன்னும் அதிகமா எப்படி பங்கெடுக்க வைக்கிறதுன்னு நீங்க எப்பவாவது யோசி...
ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...
இன்று தேவனுடைய பாதுகாப்பில் நடங்கள்
தேவனோட வார்த்தைல அவரோட அன்பான பிள்ளைகளுக்கு அவரோட பாதுகாப்பின் வாக்குறுதிகள் நிரம்பி இருக்கு. உதாரண...
உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)
வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அ...
ஏமாற்றம் அளிக்காத நம்பிக்கை (பகுதி 3/3)
எதிர்மறையான எண்ணங்களை உடைத்தெறிந்து ஒவ்வொரு நாளைக்குறித்த தேவனுடைய நன்மைகளை எதிர்ப்பாக்ககூடிய திட நம...
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்எ...
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 1/3)
உங்களிடம் உள்ள குறைகளால் நீங்கள் சோர்வடைந்து, பாரம் சுமப்பவராக உணர்ந்தால், கவலைப்படாதீர்கள்! உங்களைய...