அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தனர். நல்ல வேலை அவை தீங்கற்றவைகளாக இருந்தது. 2012ல், இடது மார்பில் இருந்த கட்டிகள் 8 ஆக அதிகரித்தன. 6 முதல் 12 மாதங்களுக்கு இடையில் மீண்டும் பரிசோதனை செய்யுமாறு கூறப்பட்டது. அதற்குப் பின்னர், எங்கள் முதல் குழந்தையை பெற்றுடுத்தேன், அதனால் அதை தொடர்ந்து வந்த பரிசோதனையை நான் நிராகரித்துவிட்டேன். பரிசோதனைக்குச் செல்லாததற்கு மற்றொரு காரணம் பயம்.

ஆண்டுகள் கடந்தது, ஜூன் 2017ல், தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த சமயம் எனக்கு மார்பகத்தில் நோய் தொற்று ஏற்பட்டது. மருத்துவ நிபுணர், எனக்கு பல கட்டிகள் உள்ளதாகவும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு 3 மாதங்கள் கழித்து விரிவான பரிசோதனை செய்வது சிறந்ததாக இருக்கும் என்றும் கூறினார்கள். ஜனவரி 2018ல் பரிசோதனைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.

எங்கள் குடும்பம் சிங்கப்பூரில் உள்ள நியூ கிரியேஷன் சபையில் பங்குபெற்று வருகிறார்கள், அவர்கள் பரிசுத்த பந்தியின் அர்த்தத்தையும் அபிஷேக எண்ணெயின் வல்லமை மற்றும் தேவனுடைய வாக்குறுதிகளை எங்கள் வாழ்க்கைகளில் பிரகடணப்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் குறித்து நன்கு கற்றறிருக்கிறோம். இந்த அனைத்தையும் தனிநபராகவும், குடும்பமாக ஒன்றாக சேர்ந்தும் செய்து வந்தோம்.

நான் அபிஷேக எண்ணெயை என்மேல் பூசி, “எனக்கு விரோதமாக உருவாகும் எந்தக் கட்டியும் என்மேல் வெற்றி பெறாது” என்று பிரகடணம் பண்ணுவேன். மேலும், “அவர் இருப்பதுபோலவே, நாம் இந்த உலகில் இருக்கிறோம்” என்ற வசனத்தையும் தொடர்ந்து சொல்லிக்கொள்வேன்.

ஜனவரி 2018ல், நான் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு சென்றபோது, அது மிகவும் விரைவாக முடிந்தது எனக்கு ஆச்சரியாமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முடிவுகளுக்காக மார்பக அறுவைசிகிச்சை நிபுணரைப் பார்க்கச் சென்றபோது, அவர்கள் குழப்பமடைந்த முகத்துடன், “உங்கள் இடது மார்பில் இருந்த அனைத்து கட்டிகளும் மறைந்துவிட்டன!” என்று கூறினார்.

கட்டிகள் சில நேரத்தில் வந்து போகும் என்று நான் கேட்டிருந்ததால், இது சாதாரணமானதா என்று கேட்டேன். அதற்கு மருத்துவர், எனக்கு இருந்தது நீர் நிறைந்த கொப்புளங்கள் அல்ல, உறுதியான கட்டிகள் என்றும் இப்பட்டவை உருவானால், அவை தானாகவே மறைவது மிகவும் அரிது. அவற்றை அகற்றுவதற்கான ஒரே வழி அறுவை சிகிச்சை மட்டும்தான் என்று சொன்னார்கள்.

என் வலது மார்பில் இருந்த கட்டி 2012 முதல் சுருங்கியிருந்தது. மருத்துவர் எனது உடல் பரிசோதனையின் போது ஜூன் 2017ல் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கட்டியையும் பார்க்க முடியவில்லை என்று சொன்னார்கள். இடது மார்பில் இருந்த 8 கட்டிகளும் முற்றிலுமாக மறைந்துவிட்டன!

என் பரிகாரியாகிய இயேசுவுக்கே சகல துதியும் மகிமையும் உண்டாயிருப்பதாக!

ஆன்ட்ரியா பிரேக்கிவெல்ட்
சிங்கப்பூர்

இதுபோல இன்னும் பல

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...

1 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்