இன்று தேவனுடைய பாதுகாப்பில் நடங்கள்
இன்று தேவனுடைய பாதுகாப்பில் நடங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
தேவனோட வார்த்தைல அவரோட அன்பான பிள்ளைகளுக்கு அவரோட பாதுகாப்பின் வாக்குறுதிகள் நிரம்பி இருக்கு. உதாரணமா 91 வது சங்கீதம், ஒவ்வொரு விசுவாசிக்குமான பாதுகாப்பின் அழகான சங்கீதமாகும்.
தொற்று நோய்கள், பயங்கரமான விபத்துக்கள் அல்லது எதிர்பாராத தாக்குதல்கள் இப்படி எதிலிருந்து பாதுகாக்கிறதா இருந்தாலும், கர்த்தர் நம்மள எல்லாவிதமான காணக்கூடிய, காண முடியாத தீங்குகள்ல இருந்து பாதுகாக்கவும், விடுதலை செய்யவும் அவர் நம்மள கவனிச்சுக்கிட்டு இருக்கார்னு சங்கீதம் 91ல இருக்கிற ஒவ்வொரு வசனமும் உறுதிப்படுத்துது.
பாதுகாப்பின் ஒவ்வொரு வாக்குறுதியும் நீங்க மகிழ்ச்சியா இருக்கத்தான்கிறத நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, நிச்சயமற்ற சூழ்நிலைகள், பேரழிவுகள் மற்றும் கெட்ட செய்திகளால நீங்க முடங்காம, நீங்க உங்க வாழ்க்கைய நம்பிக்கையோடு, எதிர்பார்ப்போடு வாழலாம்.
இன்றைக்கு கர்த்தருடைய பாதுகாப்பில் எவ்வாறு நீங்கள் நடக்கலாம்?
சங்கீதம் 91ல இருக்கிற பாதுகாப்பின் வாக்குறுதிகளால உங்க இதயத்தை நிரப்புறதும், தேவனோட பிள்ளையா நம்ம ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலை தான், இந்த அற்புதமான சங்கீதத்தில் இருக்கிற ஒவ்வொரு பாதுகாப்பு வாக்குறுதியையும் உங்களுக்கு பெற்று தந்து இருக்குங்கிறத தெரிஞ்சுக்கிறதுதான் ஒரே ஒரு வழியாகும்.
நீங்க அவரோட வார்த்தையை உங்க இதயத்துல வேரூன்றி பாதுகாக்க அனுமதிக்கிறப்ப, அவரோட சமாதானம் உங்க இதயத்தை உறுதிப்படுத்தும், மேலும் பயம் உங்க மேல வச்சிருக்கற தன்னோட பிடிய இழக்கும். இது நீங்களும் உங்களுக்கு பிரியமானவங்களும் தேவனோட அன்புலயும், வாக்குறுதிலையும் நீங்க பயமில்லாம, தைரியமா வாழ்றதுக்கான ஒரு வழியாகும்.
ஜெபிக்கிறதும், சங்கீதம் 91ல இருக்கிற வாக்குறுதிகளை உங்க மேலயும் உங்களுக்கு பிரியமானவங்க மேலயும் சொல்றதும் இன்னொரு வழியாகும்.
பலசாலிகளையும், வீரர்களையும் நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருப்பதே நலம் என்று பைபிள் நமக்கு சொல்லுது (பார்க்க சங்கீதம் 118:8-9).
மேலும் தேவன் தன்னோட கிருபையையும், தகுதியற்றவர்களுக்கான தயவயும், ஆசீர்வாதத்தையும், பாதுகாப்பையும் தாழ்மையானவர்களுக்கும் (பார்க்க. 1 பேதுரு 5:5), அவரோட தேவை அவசியம்னு உணர்றவங்களுக்கும் தர்றார்னுவசனம் நமக்கு சொல்லுது.
இன்னைக்கு கர்த்தரோட இயற்கை அப்பாற்பட்ட வழிநடத்துதல், சரியான நிலைப்பாடு மற்றும் பாதுகாப்புக்காக நீங்க அவர சார்ந்துருக்கிறத வெளிப்படுத்த பின்வரும் ஜெபங்கள நீங்க பயன்படுத்த உங்களை ஊக்குவிக்கிறோம். ஒவ்வொரு நாளும் அவரை நோக்கி பார்த்துஇந்த ஜெபங்கள பண்றத பழக்கமாக்கிக்கோங்க. உங்களையும் உங்க குடும்பத்தையும் வழி நடத்தவும், பாதுகாக்கவும், விடுதலை செய்யவும் நீங்க அவரை அழைக்கிறப்ப, அவரோட சமாதானமும், பாதுகாப்பும் உங்களையும், உங்க வீட்ல இருக்கிற எல்லாரையும் முழுமையா மூடுறத காண நீங்க எதிர்பார்க்கலாம்!
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்குமான பாதுகாப்பு ஜெபம்
அப்பா பிதாவே, எல்லாத்துலயும் நீங்களே என்னோட பலமும், கேடகமுமா இருக்கீங்க. நீங்க மட்டுமே என் குடும்பத்தோட அசைக்க முடியாத அடைக்கலமா, கோட்டையா இருக்கீங்கன்னு நான் அறிக்கையிடுறேன். எல்லா தீங்குகள்ல இருந்தும் நீங்க எங்கள பாதுகாக்க உங்கள நம்பலாம்கிறதுக்காக உங்களுக்கு நன்றி சொல்றேன். தீங்கு எங்களுக்கு நேரிடாது, வாதை எங்கள் கூடாரத்தை நெருங்காதுன்னு இன்னைக்கு நான் நம்புறேன். உங்களோட வசனம் வாக்கு தந்த மாதிரி நெருக்கமும், பயங்கரமும் எங்கள நெருங்காதுங்குறதுனால நானும், என்னோட குடும்பமும் அவைகளை விட்டு ரொம்ப தூரத்துல இருப்போம்னு நான் அறிக்கையிடுறேன். நீங்க எங்கள அன்போடும், சோர்ந்து போகாமலும் தொடர்ந்து கவனிக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரியும். அதனால நாங்க எங்க வாழ்க்கைய பயமில்லாமல் தைரியமா வாழ முடியும்கிறதுக்காக உங்களுக்கு நன்றி. சிலுவைல உங்களோட குமாரனாகிய இயேசு எங்களுக்காகச் செய்ததன் காரணமா, நானும் என்னோட குடும்பமும் இன்னைக்கு தயவு, பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்களின் திறந்த வானத்தின் கீழ இருக்கோம். ஆமென்.
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
— சங்கீதம் 28:7
…பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
— சங்கீதம் 91:10
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
— ஏசாயா 54:14
நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஜெபம்
அப்பா பிதாவே, கிறிஸ்து இயேசுவுக்குள்எங்கள ஆசீர்வதிச்சு இருக்கிறதுக்காக நன்றி. நோய் மற்றும் நோயின் சாபம் உட்பட எல்லா சாபங்கள்ல இருந்தும் எங்களை மீட்டுக் கொண்டார்னு உங்களோட வார்த்தை சொல்லுது. இன்னைக்கு என் வீட்ல இருக்கிற ஒவ்வொருத்தரையும் வைரஸுகளுக்கும், தொற்று வியாதிகளுக்கும், கொள்ளை நோய்களுக்கும் விலக்கி பாதுகாக்க உங்ககிட்ட நான் கேக்குறேன், உங்கள நான் நம்புறேன். இதுல எதுவுமே எங்கள ஜெயிக்க முடியாததுக்காக உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். இந்த உலகத்துலநாங்க பாக்குறதும், கேட்கிறதும் எதுவா இருந்தாலும், நீங்க எங்களோட சரீரத்தை ஆரோக்கியமாவும், வலிமையாவும் மற்றும்தெய்வீக வாழ்க்கை நெறஞ்சதாவும் வைக்கிறது நீங்கதான்னு நான் நம்புறேன். பிதாவே, இயேசுவின் பரிபூரணமான, முடிக்கப்பட்ட வேலைலையும், எங்க மேல நீங்க வச்சிருக்கிற மாறாத அன்பாலையும் நாங்க முழுமையா இன்னைக்கு இளைப்பாற முடியும்கிறதுக்காக உங்களுக்கு நன்றி. ஆமென்.
நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
— சங்கீதம் 91:3 நேரடி மொழிபெயர்ப்பு
…கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார்.
— கலாத்தியர் 3:13
கர்த்தர் சகல நோய்களிலிருந்தும் உன்னை பாதுகாப்பார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
— உபாகமம் 7:15 நேரடி மொழிபெயர்ப்பு
விபத்துக்கள் மற்றும் துர்ச் சம்பவங்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஜெபம்
அப்பா பிதாவே, நானும் என்னோட குடும்பமும் தினசரி வாழ்க்கையை நடத்துறப்ப, எங்க வாழ்க்கைலஉங்க பாதுகாப்பை உறுதி செஞ்சு,இளைப்பாற முடியும்ங்கிறதுக்காக உங்களுக்கு நன்றி. எங்களுக்கு தீங்கு விளைவிக்கிற எல்லா விதமான விபத்துக்கள், துர்ச் சம்பவங்கள் மற்றும்நிகழ்வுகள்ல இருந்து எங்கள பாதுகாப்பா வச்சுருக்க உங்களை நோக்கி பாக்குறோம். எங்களை சுத்தி ஒரு பாதுகாப்பு வேலி அமைக்க உங்ககிட்ட வேண்டுறோம். எங்கள தொடர்ந்து கவனிக்கிறதுகாகவும், எங்களை சரியான இடத்துல, சரியான நேரத்துல, சரியான மக்களோடு இணைக்கிறதுக்காகவும் உங்களுக்கு நன்றி சொல்றோம். என் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது என்னை அணுகாதுன்னு நான் அறிக்கை செய்றேன். உண்மையாவே உங்க வார்த்தை சொல்ற மாதிரி, எனக்கு எதிராக உருவாக்கப்படும் ஆயுதமும் வாய்க்காது போகும். எங்களுக்கு முன்னாடி போய் இன்னைக்கு எங்களை உங்க கைகள் பாதுகாப்பாவும், பத்திரமாகவும் வச்சிருக்கறதுக்காக நன்றி! ஆமென்.
உன்பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
— சங்கீதம் 91:7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;அவர் உன் ஜீவனைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
— சங்கீதம் 121:7-8 நேரடி மொழிபெயர்ப்பு
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்;..
— ஏசாயா 54:17
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது ஆசீர்வாதத்தின்கரத்தை என்மேல் வைக்கிறீர்.
— சங்கீதம் 139:5 நேரடி மொழிபெயர்ப்பு
பாதுகாப்பு பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டிய சாட்சி உங்களிடமிருந்தால், நீங்கள் துதி செய்தியை அனுப்புங்கள்! நாங்கள் உங்களிடமிருந்து கேட்கவும் உங்களோடு சந்தோஷப்படவும் விரும்புகிறோம்!
இதுபோல இன்னும் பல
கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலுக்கும் உங்களுக்குத் தங்கள் வாயையும், ஞானத்தையும் வழங்குவார்
தெய்வம் அனைத்து விசுவாசிகளும் ஞான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு பரிச...
ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...
உங்களுடைய மனப்போராட்டத்தில்வெற்றிபெறுதல் (பகுதி 3/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...
உங்களுடைய மனப்போராட்டத்தில் வெற்றி பெறுதல் (பகுதி 2/3)
அழுத்தமூட்டும், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தம், சமாதானம் மற்றும் மனப்பூரணத்தால் நி...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 3/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 2/3)
வார்த்தையில் இயேசுவைக் காணுங்கள்; உங்கள் பலவீனங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் தேவனுடைய உயிர்த்தெழுத...
இயேசுவை வார்த்தையில் காண்பது ஜீவனைத் தரும் (பகுதி 1/3)
வசனத்தில் இயேசுவைக் கண்டு, உங்கள் பலவீனமான மற்றும் வறண்ட நிலைகளில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அ...
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 2/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் ...
ஏமாற்றாத நம்பிக்கை (பகுதி 1/3)
உங்களை கலங்கச் செய்கிற எண்ணங்கள்ல இருந்து விடுபட்டு, ஒவ்வொரு நாளும் தேவன் உங்களுக்கு நன்மை செய்வார்எ...