உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 2/3)
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 2/3)
இதன் மூலம் பகிர்ந்திட
உங்களுக்கு இருக்கிற குறைவுகளால சோர்வையும் பாரத்தையும் உணர்றீங்கன்னா, வருத்தப்படாதீங்க! உங்களோட பயங்கரமான கனவுகளுக்கு அப்பால் உங்களையும், உங்க சூழ்நிலையையும் மாற்ற தேவனோட எல்லையற்ற கிருபை இருக்கு. நீங்க தோற்றுப் போய் இருந்தாலும்கூட தேவன் ஏன் இன்னும் உங்களுக்கு தன்னோட கிருபையை தர்றார்ங்கிறதயும், அதை நீங்க எப்படி பெறலாம்னும் இந்த மூணு பகுதி தொடர்ல ஜோசப்பிரின்ஸ் உங்களுக்கு காட்டுவார். கடந்த காலத்தில் நீங்க தப்பு செஞ்சு இருந்தாலும் கூட தேவனால் இப்பயும் உங்களை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும் நீங்க கத்துக்கோங்க.
உலகம் பயனற்றவர்கள் என்று நினைக்கிறவர்களை தேவன் பயன்படுத்துகிறார்
நான் பிளஸ் டூ படிக்கிறப்ப எனக்கு திக்குவாய் இருந்துச்சுன்னு உங்களுக்கு தெரியும். ஒரு ஆசிரியர் ப்ப்ப்.. பிரேசிலில்.. ஆஆஆண்டுமழை… பொழிவு தொதொ.. டங்கியதுன்னு நான் திக்கிப் பேசுறத கேட்டு சிரிக்கிறதுக்காக என்னை எப்பவுமே நிக்க வச்சு வாசிக்க வைப்பார். எல்லாருமே என்ன பார்த்து சிரிப்பாங்க. அப்ப அவமானத்தால என்னோட காதுகள் சிவக்கும். திக்காம பேச எவ்வளவு முயற்சி செய்றேனோ அவ்வளவு மோசமாகும்.
தேவன் ஏற்கனவே என்னோட இந்த பலவீனமான பகுதில தன்னோட எல்லையற்ற கிருபைய தந்து இருக்கார்ங்கிறது எனக்கு அப்ப தெரியல. அது என்னோடதிக்கி பேசறத முடிவுக்கு கொண்டு வந்தது மட்டும் இல்லாம,இயேசுவை பற்றி பேசுறத நிறுத்த முடியாத ஒரு பிரசங்கியா ஆக்குறதுக்கும்போதுமானதா இருந்துச்சு.
தேவன் ஏற்கனவே என் வாழ்க்கைலஆரம்பிச்சத தடுக்கிறதுக்கான எதிரியோட முயற்சியா தான் இந்த திக்குவாய் எனக்கு இருந்துச்சு. என்னோட பலவீன பகுதில ஏற்கனவே தேவன் செய்ய ஆரம்பிச்சத நான் பாத்திருந்தேனாநான் இவ்வளவு சோர்ந்து போயோ, வெட்கப்பட்டோ இருக்க மாட்டேன். நான் தேவனோடஓய்வையும், கிருபையையும் பிரசங்கிக்க பிறந்தேன்னு நான் சொன்னத நீங்க கேட்டு இருப்பீங்க. என் தாயின் வயிற்றில் இருக்கும் போது எனக்கு மிகுந்த கிருபை தரப்பட்டுருந்துச்சுங்கிறது இப்ப எனக்கு தெரியும். நான் பிறப்பதற்கு முன்னமே நான் பிரசங்கம் பண்ண அழைக்கப்பட்டிருந்தேன்.
உங்களுடைய சவால் எவ்வளவு பெரியதோ அதை தன்னுடைய மகிமைக்காக மாற்றஅந்த பகுதியில்அவருடைய கிருபையும் பெரிதாக இருக்கும்.
நண்பர்களே, உங்களோட பலவீன பகுதில கர்த்தர் ஏற்கனவே தன்னோட கிருபைய மிக அதிகமா தந்துருக்கார். உங்களோட சவால் எவ்வளவு பெருசா இருக்கோ, அதை தன்னோட மகிமைக்காக மாற்ற அந்த பகுதிலஅவரோட கிருபையும் பெருசா இருக்கும். ஒருவேளை ஏமாத்துற உங்களோட டீன் ஏஜ்ஜர்கள் கூட உங்களுக்கு மிகப் பெரிய சவால்கள் இருக்கலாம். சொல்ற எல்லாத்தையும் கேட்கணும்னு அவன் கிட்டயோ அல்லது அவாகிட்டையோ கொஞ்சமும் எதிர்பாக்காதீங்க. இந்த குழந்தையும் இயேசுவுக்காக வைராக்கியமா இருக்கணும்னு எதிர்பாருங்க. இந்த குழந்தையும் ஒரு வெற்றிகரமான நபரா, ஒரு அன்பான வாழ்க்கை துணையா, மற்றும் பொறுப்புள்ள பெற்றோரா, கர்த்தரோட ஞானத்தால நெறஞ்சவங்களா இருக்கணும்னு எதிர்பாருங்க.
அதனால நீங்க வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் செய்ய (எபேசியர் 3:20) உங்க சூழல்ல ஏற்கனவே கர்த்தரோட மிகுதியான கிருபை மற்றும் தயவு இருக்குங்கிறத நீங்க நம்புங்க. ஒவ்வொரு நாளும் இந்த தயவை பற்றிய விழிப்போடு இருங்க. அறிக்கை பண்ணிக்கிட்டே இருங்க. உங்களோட நம்பிக்கை இல்லாத சூழ்நிலைல இருந்து சிறந்தவை வரும்னு தொடர்ந்து எதிர்பாருங்க. ஒருவேளை இது ஒரே நாள் நைட்ல நடக்காம இருக்கலாம், ஆனா ஏற்கனவே தேவன் உங்க வாழ்க்கைல செயல்பட்டுக்கிட்டு இருக்கார். அவர் அது எல்லாத்தையும் ஒன்னா இணைச்சு ஒரு அழகான தலைசிறந்த படைப்பா ஆக்குவார். அதனால தீமையான எல்லா விஷயங்கள்ல இருந்தும் உங்க பார்வையை விலக்கி கர்த்தர் ஏற்கனவே உங்க வாழ்க்கைல செஞ்சுகிட்டு இருக்கிற நன்மையை விசுவாச கண்களோடு பாருங்க.
தேவனால் இப்பொழுதும் உங்களை பயன்படுத்த முடியும்
என்னோட டீனேஜ் பருவத்துல யாராவது என்கிட்ட ஒரு நாள் ஆயிரக்கணக்கான பேருக்கு நான் பிரசங்கம் பண்ணுவேன், வெற்றிகரமான டிவி ஊழியத்த செய்வேன்னு சொல்லி இருந்தா, அவங்கள பைத்தியம்னு நெனச்சுருப்பேன். தேவன் எப்படி ஒரு திக்குவாயன பயன்படுத்துவார்? பேச்சாற்றலுள்ள, கூச்ச சுபாவம் இல்லாத ஒருத்தர தேர்ந்தெடுக்கிறது அவருக்கு நல்லா இருக்கும், இல்லையா?
பாவம் (இலக்கை தவற விடுதல்) பெருகுகிற இடத்தில் தேவனுடைய கிருபை மிகுதியாக பெருகும் என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நிறைய பேர் குறிப்பிட்ட சில குறைபாடுகள் இருக்கிறதுனால அல்லது சில பலவீனங்களோடு போராடுறதுனால தேவனால தங்களை பயன்படுத்த முடியாதுன்னு நினைக்கிறாங்க. எனக்கு கோபம் நிறைய வரும் அதனால தேவன் என்ன தனக்கு ஊழியம் செய்ய ஒருபோதும் விரும்ப மாட்டார்னு ஒருவேளை நீங்க நினைச்சுருக்கலாம். என் நண்பரே பாவம் (அல்லது லக்கை தவற விடுதல்) பெருகுகிற இடத்துல தேவனோடகிருபை மிகுதியா பெருகும்கிறத எப்பவுமே மறக்காதீங்க. அவரோட கிருபைங்கிறது நாம சம்பாதிக்காத,நமக்கு தகுதியே இல்லாமஇருக்கிறப்ப காட்டப்படுற தயவாகும். எனவே உங்களோட பலவீன பகுதிகள் தான் தேவனோட மிகுந்த கிருபை பெருகி அவருக்கு மகிமை கொண்டு வரும்படி உங்களோட வாழ்க்கையை மாற்றும்.
தயவு செஞ்சு நான் இங்க சொல்றத தப்பா புரிஞ்சுக்காதீங்க. மேலும் தேவனோட இந்த எல்லையற்ற கிருபைய அனுபவிக்க தெரிஞ்சே பாவம் செய்றதுக்கும், அல்லது உங்களோட பலவீனமான விஷயங்க ள்ல ஈடுபட பச்சக்கொடி காட்டுறதா நினைக்காதீங்க. அது “தேவனோட குணமாக்குகிற மகிழ்ச்சிய அனுபவிக்க நாம வேண்டுமென்றே ஒரு நோயை பெறுவோம்னு” சொல்ற மாதிரி இருக்கும். நான் நிச்சயமா அதை ஆதரிக்கல.
ஆனா ஒரு இடத்துல தோல்வியடஞ்சதுனாலமறுபடியும் பறக்கவே முடியாதுன்னுசொல்லப்பட்டிருக்கிற றெக்கை உடைஞ்சபறவை மாதிரி இருக்கிறவங்களுக்காகத்தான் நான் இதை வலியுறுத்துறேன். மக்களே அது தான் உலக நம்பிக்கையாகும். ஆனா தேவன் சொல்றார்,“நான் உன்னுடைய இறக்கையை குணமாக்குவது மட்டுமில்லாமல் நான் உன்னை ஒரு கழுகைப் போல ஆக்குவேன். நீ மீண்டும் பறப்பாய் மேலும் இதுவரை இல்லாத அளவு உயர பறப்பாய். நீ என்னுடைய மிகுதியான கிருபையை சார்ந்து கொண்டு இருந்தால் மட்டும் போதும்!”
நண்பரே இன்னைக்கு நீங்க உங்களுக்குள்ள பாக்குற குறைகளால தேவனுக்கு உங்களால எந்த பயனும் இல்லங்கிற விஷயத்தை நீங்க நம்பாதீங்க. ஒருவேளை உங்கள பார்த்து, “நீ எதுக்கும் உதவாதவன்” அல்லது உன்னால எதையும் சாதிக்க முடியாதுன்னு யாராவது சொல்லி இருக்கலாம். நான் சொல்றத கவனிங்க. இப்படி பேசுறவங்கள மறந்துடுங்க. தேவன் உங்க வாழ்க்கைக்காக ஒரு அற்புதமான திட்டத்தை வச்சுருக்கார். அவர் உங்களை ஒரு தெய்வீக நோக்கத்துக்காக நீங்க உங்க தாயின் வயிற்றில் இருக்கும்போதே உங்கள அழச்சுருக்கார்.
உங்களோட பலவீனம் அல்லது தவறு எதா இருந்தாலும் அவரோட கைகள்ல தந்துடுங்க. அவர் அத எடுத்துக்கிட்டு உங்கள உயர்த்தவும் அவரோட மகிமைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு உங்கள வலுப்படுத்தவும் அதை பயன்படுத்துவார். நீங்க அவரோட மிகுதியான கிருபையை மட்டுமே சார்ந்திருக்கிறப்ப உங்க வாழ்க்கைல நீங்க அதே நிலைல இருக்க மாட்டீங்க. தேவன் உங்களுக்கு தந்த கனவுகளை நிறைவேத்த அவரோட குமாரனின் பலி மூலமா எல்லையற்ற கிருப ஏற்கனவே உங்களுக்கு தரப்பட்டாச்சு!
கிருபை உங்களுடைய குறைகளால் கவரப்படுகிறது
“என்னுடைய கிருபை மனிதர்களுடைய குறைகளால் கவரப்படுகிறதுன்னு” கர்த்தர் ஒரு தடவை என்கிட்ட சொன்னார். முற்றிலும் உண்மை! தேவனோட கிருபை நம்மோட குறைகளால ஈர்க்கப்படுது. நீங்க இதை கவனிச்சுருக்கீங்களா? தொழுநோயாளிகளுக்கும், வியாதியஸ்தர்களுக்கும், பிசாசு பிடிச்சவங்களுக்கும், வரி வசூலிக்கிறவங்களுக்கும், விபச்சாரிகளுக்கும் கிருபை காட்ட இயேசுவுக்கு பிரச்சனை இருந்தது கிடையாது. ஆனா சுயநீதிக்காரர்களான பரிசேயர்களுக்கும், தங்களிடம் எல்லாமே இருக்கு, தங்களுக்கு இரட்சகர் தேவை இல்லைன்னு நம்புறவங்களுக்கும் கிருபை காட்டுறது தான் அவருக்கு பிரச்சினையா இருந்துச்சு. அவரோட பூமிக்குரிய ஊழியத்துல குறைகள் மற்றும் தகுதியில்லாத மக்கள் நடுவுல தான் அவர் சென்றார். அவர் தங்களுக்குத் தேவைன்னு அவங்க உணர்ந்ததுனால அவங்க அவர வரவேற்றாங்க, அதோடு அவரோட கிருபை தங்களுக்கு மிகவும் நல்லது செய்றத பார்த்தாங்க.
நண்பரே அதனால உற்சாகமா இருங்க. உங்களோட பலவீனங்கள், தகுதியின்மைகள், குறைபாடுகள் மற்றும் குறைகள் இது எல்லாம் தேவனோட எல்லையற்ற கிருபைக்கு உங்களை தகுதிபடுத்துது. நீங்க ஒரு ஒற்றை பெற்றோரா சவால்களை சந்திப்பீங்கன்னா, ஒரு சிறந்த தாயாகவும், தந்தையாகவும் இருக்க உங்க மேல அவரோட கிருபை ரெண்டு மடங்கு இருக்குங்கிறத நீங்க தெரிஞ்சுக்கோங்க. அதோடு அவர் உங்களுக்கு அபிஷேகத்தையும், பலத்தையும், குடும்பம் மற்றும் வேலை ஆகிய ரெண்டுக்கும் தேவையான ஞானத்தையும் கூட தர்றார்.
நீங்க நிக்கோடினிக்கும், மதுவுக்கும் அடிமையா இருப்பீங்கன்னாஅந்தப் பழக்கத்தை நிரந்தரமா விட்டுட அவரோட கிருப உங்களுக்கு தரப்பட்டிருக்கு. உங்க உடம்புல இருக்கிற சேதத்தையும் சரி பண்ண அந்த கிருப உங்களுக்கு தரப்பட்டிருக்கு. உங்க வகுப்பு நீங்க எப்பவுமே லாஸ்ட்டா வருவீங்கன்னா அவரோட கிருப உங்கள இருந்து இருக்கு மாத்த உங்களுக்கு தரப்பட்டிருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க. நீங்க படிப்புல நல்லா செயல்படுறது மட்டும் இல்லாம உங்களோட வயசுக்கு அப்பாற்பட்ட ஞானத்தையும் நீங்க பெறுவீங்க.
உங்களோட மாம்ஷீக முயற்சிகள் கிடையாது அவரோட கிருபை மட்டும் தான் உங்களை மாற்றும் உங்களுக்குள்ள இருக்கிற அவரோட சிறந்தத வெளியே கொண்டு வரும். உலகம் தோற்றுப் போனவர்கள்ன்னு சொல்றவங்கள தன்னோட ராஜ்யத்துல வலிமையானவர்களாவும் வல்லமையானவர்களாவும் ஆக்க தேவன் விரும்புறார். ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1கொரிந்தியர் 1:27). ஒதுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட தாழ்மையா நினைக்கப்பட்டவங்கள தேர்ந்தெடுத்து அவரோட கிருபையால மட்டுமே சாதிக்கக் கூடியவர்களின் பிரகாசமான எடுத்துக்காட்டுகளா அவர்கள மாத்துறதுல அவர் ஒரு நிபுணர் ஆவார்!
அவருடைய மிகுதியான கிருபைக்கு ஒருபோதும் எந்த ஒரு தவறும் மிகப்பெரியது அல்ல.
அன்பானவர்களே, ஒருவேளை நீங்க வாழ்க்கைல தவறான முடிவுகளை எடுத்து, அதோடு இயற்கை விளைவுகள நீங்க அறுவடை செஞ்சுகிட்டு இருக்கலாம். நீங்க எந்த சூழ்நிலைல இருந்தாலும் இது உன்னோட தவறுன்னு சொல்லி, இந்த உலகம் உங்கள கடினமா நடத்துற நிலைல நீங்க இருந்தாலும், உண்மை என்னன்னா, இப்பவும் உங்களை நேசிக்கிறார், உங்க வாழ்க்கைக்கு அவர் நல்ல திட்டங்களை வச்சுருக்கார் (எரேமியா29:11). அவர் உங்களை தண்டிக்கல. அவர் உங்களுக்கு உதவ விரும்புறார். அவரோட மிகுதியான கிருபைக்கு எந்த ஒரு தவறும் மிகப்பெரியது கிடையாது. அவரால மட்டும்தான் உங்களோட கடந்த கால தவறின் பிரச்சனைகளை எடுத்துக்கிட்டு அதை உங்களுக்கு ஒரு அழகான எதிர்காலத்தை தரக்கூடியதா மாத்த முடியும். பாவம் பெருகுகிற இடத்தில் அவருடைய கிருபையும் மிகுதியா பெருகுது. மேலும் கர்த்தாவே என்னால் இதை செய்ய முடியாதுன்னு நீங்க சொல்வீங்கன்னா என்னால் முடியும் என்னை பார்னு அவர் சொல்றார்.
இக்கட்டுரையானது பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.
இதுபோல இன்னும் பல
போலி கிருபையின் ஆபத்துகளை எச்சரிக்கையுடன் கவனியுங்கள்
நாம் மிகுந்த உற்சாகம் நிறைந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போஸ்தலர் பவுலுக்கு முதலில் அள...
ஒலிவ மரம் மற்றும் அபிஷேக எண்ணெயின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
பழைய ஏற்பாட்டுல, தேவன் தன்னோட ஜனங்களை ஆசீர்வதிக்கிறதுக்காக அபிஷேக எண்ணையை ஏற்படுத்தினார். ஆனால் புது...
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை பகுதி (பகுதி 3/3)
உங்களுக்கு இருக்கிற குறைவுகளால சோர்வையும் பாரத்தையும் உணர்றீங்கன்னா, வருத்தப்படாதீங்க! உங்களோட பயங்...
உங்கள் வாழ்க்கைக்கான எல்லையற்ற கிருபை (பகுதி 1/3)
உங்களிடம் உள்ள குறைகளால் நீங்கள் சோர்வடைந்து, பாரம் சுமப்பவராக உணர்ந்தால், கவலைப்படாதீர்கள்! உங்களைய...