அபிஷேக எண்ணெயை பூசின பிறகு புயலிலிருந்து வீடு பாதுகாக்கப்பட்டது

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் எங்களுடைய பட்டணத்தில் 30 ஆண்டுகளாக கண்டிராத மோசமான புயல் உண்டானது. என்னுடைய கணவனார் அந்த புயலுக்கு முன்பதாக எங்களுடைய வீட்டில் உள்ள அனைத்தையும் பாதுகாப்பாக பத்திரப்படுத்திக் கொண்டிருந்தபோது நான் எங்களுடைய இருப்பிடத்தை சுற்றிலும் எண்ணெய் பூசி தேவனுடைய பாதுகாப்பிற்காக நன்றி செலுத்தி கொண்டு இருந்தேன்.

என்னுடைய கணவரும் நானும் எங்களுடைய நண்பருக்கும் இந்த புயலுக்கு முன்பாக அவர்களுடைய வீட்டை பத்திரப்படுத்த உதவும். அவர்கள் அவ்விசுவாசிகளாக இருந்த போதிலும் நான் அவர்களுடைய இருப்பிடத்தில் எண்ணெய் பூசி பாதுகாப்பை கூறும்படி அனுமதி கேட்டேன். பலமான காற்று அடிக்கும்பொழுது இந்த எண்ணெய் என்ன செய்யும் என்று அவநம்பிக்கையோடு இருந்தாலும்கூட அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். எனவே நானும் அவர்களுடைய இருப்பிடம் முழுவதும் எண்ணெய் தெளித்து தேவன் என்னுடைய நண்பரை பாதுகாப்பதாக அவர்கள் புரிந்து கொள்ளும்படி தேவனிடம் விண்ணப்பம் பண்ணினேன்.

அன்று இரவு புயல் அடித்தது. என்னுடைய முழு குடும்பமும் எந்தவித பயமுமின்றி சமாதானத்தோடு நித்திரை பண்ணினோம். அடுத்த நாள், சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கவும் கேட்கவும் நேரிட்டது. மேற்குறைகள் தூக்கி எறியப்பட்டன, மரங்கள் வீடுகளில் மேல் விழுந்தது, ஜன்னல்கள் முற்றிலுமாக நொறுங்கி இருந்தது.

எங்களுடைய இடத்தை நாங்கள் பார்த்தபொழுது அங்கே எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்ததை கவனித்தோம்!
என்னுடைய கணவர் சுத்தம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த அந்த மரங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டிருந்தது. அவை தன்னுடைய கிளைகளை இழந்துவிட்டன, எனவே என் கணவர் இப்போது சுத்தம் செய்ய அவசியமில்லாமல் போனது.

என்னுடைய நண்பருடைய வீடும் பாதுகாக்கப்பட்டது. அங்கும் எந்தவித மோசமான சேதங்களும் இல்லை! சில நாட்களுக்கு பிறகு பட்டணத்தை சுத்தப்படுத்தும் குழுவினர் என் தோழியிடம் அவளுடைய தோட்டத்தில் இருந்த மேற்கூறையை அகற்றலாமா என்று கேட்டனர். அதற்கு அவள் என்னுடைய பின்தோட்டத்தில் எந்தவித மேற்கூறையும் இல்லையே என்றாள். அப்பொழுது அவள் வீட்டின் பின்புறத்தில் இருந்த குடும்பத்தினர் புயலின்போது ஒரு மேற்கூரை அவளுடைய வேலியை தாண்டி போய் விழுந்ததை பார்த்திருந்தனர். காணாமல்போன இந்த மேற்கூரை எங்கே போனது என்று சொல்லி எல்லாரும் பிரமித்து இருந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய தோழி என்னிடத்தில் நான் அவளுடைய இருப்பிடத்தை சுற்றிலும் எண்ணெய் பூசியதற்காக எனக்கு நன்றி சொன்னாள். இயேசுவே அவளை இந்த புயலில் இருந்து பாதுகாத்துக் கொண்டார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அபிஷேக எண்ணெயின் மூலமாக தேவன் எங்களை முற்றிலுமாய் பாதுகாத்துக் கொண்டதற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம் .

பாஸ்டர் பிரின்ஸ் எங்களுக்கான தகப்பனுடைய அன்பை உங்களுடைய அபிஷேகிக்கப்பட்ட பிரசங்கங்கள் மூலம் வெளிப்படுத்துவதற்காக உங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!

அலிசா தாமஸ்
ஆஸ்திரேலியா

இதுபோல இன்னும் பல

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

வலுவான தொழிற்சாலை காத்தாடியிலிருந்து அதிக காயங்களின்றி பாதுகாக்கப்படுதல்

சங்கீதம் 91 பற்றிய பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் செய்தியை கேட்டதிலிருந்து தேவனுடைய பாதுகாப்பை தத்ரூபமாக...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்